பிரதமர் நரேந்திர மோடியையே ஓவர்டேக் செய்த.. அமெரிக்கப் பாப் பாடகி டெய்லர் ஸ்விப்ட்.. எதில் தெரியுமா
டெல்லி: பிரிட்டன் நாட்டை சேர்ந்த நுகர்வோர் பாதுகாப்பு நிறுவனமான பிராண்ட்வாட்ச் ட்விட்டரில் உள்ள செல்வாக்கு மிகுந்த நபர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது
ட்விட்டரில் மிகவும் பிரபலமான தலைவர்களில் பிரதமர் மோடி முக்கியமானவர். அவரது தனிப்பட்ட ட்விட்டர் பக்கமான @narendramodiஐ சுமார் 72.5 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர்.
இருப்பினும். அவரை அமெரிக்காவின் பிரபல பாப் பாடகி டெய்லர் ஸ்விப்ட் இந்த விஷயத்தில் பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

பிரதமர் மோடி
நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்த காலத்தில் 2009ஆம் ஆண்டு ட்விட்டரில் இணைந்தார். கடந்த 2010இல், அவருக்கு ஒரு லட்சம் ஃபாலோயர்கள் மட்டுமே இருந்தனர். மக்களவை தேர்தலில் பிரதமர் பதவிக்கு அவர் முன்னிறுத்தப்பட அவரை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை மளமளவென அதிகரிக்கத் தொடங்கியது. தற்போது அவரை 72.5 70 மில்லியன் பேர் பின்தொடரும் நிலையில் ட்விட்டரில் ஆக்டிவ் அரசியல்வாதிகளில் அதிக ஃபாலோயர்களை கொண்ட அரசியல்வாதி என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

செல்வாக்கு மிகுந்தவர்கள்
பிரிட்டன் நாட்டை சேர்ந்த நுகர்வோர் பாதுகாப்பு நிறுவனமான பிராண்ட்வாட்ச் ட்விட்டரில் உள்ள செல்வாக்கு மிகுந்த நபர்களின் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிடும். அதன்படி இந்த ஆண்டிற்கான பட்டியலில் மொத்தம் 50 பேர் இடம் பிடித்துள்ளனர். அதில் அமெரிக்காவின் பிரபல பாப் பாடகி டெய்லர் ஸ்விஃப்ட் முதலிடத்தில் உள்ளார்.

பிரதமர் மோடி
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த பட்டியலில் இரண்டாவது இடத்திலும் உள்ளார். அதேபோல கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இந்தப் பட்டியலில் 35ஆவது இடத்தில் உள்ளார். ஹாலிவுட் நடிகர்கள் டுவைன் ஜான்சன், லியோனார்டோ டி கேப்ரியோ மற்றும் அமெரிக்காவின் முன்னாள் முதல் பெண்மணி மிச்செல் ஒபாமா உள்ளிட்டோர் இந்தப் பட்டியலில் சச்சினுக்குப் பின் உள்ளனர்.

சச்சின் டெண்டுல்கர்
சச்சின் டெண்டுல்கர் குறித்து பிராண்ட்வாட்ச் நிறுவனம் குறிப்பிடுகையில், "பல முக்கிய காரணங்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர்களில் முக்கியமானவர் சச்சின். அவரது இந்த நல்ல பணியை அவரது ரசிகர்களும் பின்தொடர்கின்றனர்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

யுனிசெப்
இந்திய கிரிக்கெட் ஜாம்பவானும் முன்னாள் ராஜ்யசபா உறுப்பினருமான சச்சின், 10 ஆண்டுகளுக்கு மேலாக யுனிசெப் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறார். கடந்த 2013ல் இவர் தெற்காசியாவுக்கான தூதராகவும் நியமிக்கப்பட்டார். கிராமப்புற மற்றும் நகர்ப்புற இந்தியாவில் சுகாதாரம், கல்வி மற்றும் விளையாட்டு ஆகியவற்றில் பல புதிய மு��்னெடுப்புகளுக்கு சச்சின் தொடர்ந்து தன்னால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறார்.