உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி முடிவு செய்யும் வரை.. கர்நாடக கல்விநிலையங்களில் ஹிஜாப் தடை தொடரும்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஹிஜாப் வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு அளித்துள்ளதால், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முடிவு செய்யும் வரை கல்வி நிலையங்களில் முஸ்லீம் பெண்கள் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை நீடிக்கும்.

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் அரசு பியூ கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியில் முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது.

இதற்கு அந்த கல்லூரியில் பயின்ற இஸ்லாமிய மாணவிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.

ஹிஜாப் போராட்டம்

ஹிஜாப் போராட்டம்

கர்நாடகாவில் பல இடங்களில் போராட்டம் வெடித்தது. இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி கர்நாடக அரசின் பள்ளி கல்வித்துறை உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அந்த உத்தரவில், கல்வி நிலையங்களில் சீருடைகளை தவிர வேறு ஆடைகளை பயன்படுத்த தடை விதிப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு மாநிலம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. கர்நாடக அரசின் இந்த உத்தரவுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களின் வன்முறையும் வெடித்தது. இதனால், அங்கு சில நாட்களுக்கு பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து கல்வி நிலையங்கள் மூடப்பட்டன.

கர்நாடக அரசின் தடை செல்லும்

கர்நாடக அரசின் தடை செல்லும்

கர்நாடக அரசின் உத்தரவுக்கு எதிராக அம்மாநில உயர் நீதிமன்றத்தில் இஸ்லாமிய மாணவிகள் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், மத அடையாளங்களை வெளிப்படுத்தும் ஆடைகளை பள்ளி மாணவர்கள் அணியக்கூடாது என்றும் கர்நாடக அரசின் தடை செல்லும் என்றும் தீர்ப்பளித்தது. இந்த உத்தரவுக்கு எதிராக இஸ்லாமிய மாணவிகள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.

 உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

இந்த மனு கடந்த மாதம் உச்ச நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதான்சு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது. 10 நாட்களாக நீடித்த விசாரணையில் கர்நாடக அரசு தரப்பிலும் மாணவிகள் தரப்பிலும் பரபரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இதை கவனமாக கேட்டுக்கொண்ட நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த மாதம் 22 ஆம் தேதி ஒத்திவைத்தது. நாடு முழுவதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு மாறுபட்ட தீர்ப்பு அளித்துள்ளது.

மாறுபட்ட தீர்ப்பு

மாறுபட்ட தீர்ப்பு

அதாவது கர்நாடக ஹைகோர்ட் ஹிஜாப்பிற்கு விதித்த தடை சரி என ஹேமந்த் குப்தா தீர்ப்பு வழங்கி உள்ளார். அதே சமயம் கர்நாடக ஐகோர்ட் தீர்ப்பை தள்ளுபடி செய்தார் நீதிபதி சுஷாந்து துலியா. அதாவது ஹிஜாப் தடை செல்லாது என்று அவர் தீர்ப்பு வழங்கி உள்ளார். நீதிபதிகளின் இந்த மாறுபட்ட தீர்ப்பால் ஹிஜாப் வழக்கில் இப்போதைக்கு தீர்வு எட்டப்படவில்லை. இந்த வழக்கு தலைமை நீதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தடை நீடிக்கும் என்றே..

தடை நீடிக்கும் என்றே..

இந்த வழக்கானது கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வு மாற்றப்படும். அதாவது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான 3 நீதிபதி அல்லது 5 நீதிபதி அமர்வுக்கு வழக்கு மாற்றம் செய்யப்படும். அரசியல் சாசன அமர்விற்கு கூட இந்த வழக்கு மாற்றப்படலாம். இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் கூடுதல் அமர்வு முடிவு எடுக்கும் வரை கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை நீடிக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+