டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கருப்பு பூஞ்சை நோயை.. பெருந்தொற்று நோயாக அறிவித்தது மத்திய அரசு.. சிகிச்சைக்கான மருந்தும் அறிவிப்பு!

Google Oneindia Tamil News

டெல்லி: கருப்பு பூஞ்சை நோயை பெருந்தொற்று நோயாக அறிவித்த மத்திய அரசு, இதனை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநிலங்களை கேட்டுக் கொண்டுள்ளது.

Recommended Video

    தமிழகத்தில் அதிகரிக்கும் Black Fungus.. அறிவிக்கப்பட வேண்டிய நோய் பட்டியலில் சேர்த்த TN Government

    நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து அச்சறுத்தி உயிரை பறித்து வரும் நிலையில் கருப்பு பூஞ்சை என்ற தொற்று தற்போது மக்களிடையே அதிகமாக பரவி வருகிறது.

    டெல்லியை விட 3 மடங்கு பெரியது.. அண்டார்டிகாவில் உடைந்து நொறுங்கியது.. உலகிலேயே மிகப்பெரிய பனிப்பாறை டெல்லியை விட 3 மடங்கு பெரியது.. அண்டார்டிகாவில் உடைந்து நொறுங்கியது.. உலகிலேயே மிகப்பெரிய பனிப்பாறை

    பொதுவாக எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் இந்தத் தொற்று, தற்போது கொரோனா நோய்த் தொற்று உள்ளவர்களுக்கும் ஏற்படுகிறது.

    கருப்பு பூஞ்சை நோய்

    கருப்பு பூஞ்சை நோய்

    பல்வேறு மாநிலங்களிலும் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயால் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு பிறகு கருப்பு பூஞ்சை தொற்றால் அதிகம் பேர் இருந்து வருகின்றனர் என்று தரவுகள் கூறுகின்றன. முகராமைகோசிஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை நோய் கண் ,மூக்கு, சுற்றுப்பாதையை பாதிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் கண் பலவீனமடையும் என்றும் நுரையீரலையும் பாதிக்கும் என்றும் ஏற்கனவே கூறப்பட்டுள்ளது.

    அறிவிக்கப்பட்ட நோய்

    அறிவிக்கப்பட்ட நோய்

    இதனால் பல்வேறு மாநிலங்கள் கருப்பு பூஞ்சை நோயை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகின்றன. தொடர்ந்து அச்சறுத்தி வருவதால் இந்தியாவில் முதல் முறையாக, கருப்பு பூஞ்சை தொற்றை அறிவிக்கப்பட்ட நோயாக பட்டியலிட்டது அதன்பின்பு ராஜஸ்தான், தெலுங்கானா, ஹரியானா மாநில அரசுகள் இந்த நோயை அறிவிக்கப்பட்ட நோய் பட்டியலில் சேர்த்தது.

    சுகாதாரத்துறை கடிதம்

    சுகாதாரத்துறை கடிதம்

    தமிழக அரசும் கருப்பு பூஞ்சை தொற்றை அறிவிக்கப்பட்ட நோயாக இன்று பட்டியவிட்டுள்ளது. இந்த நிலையில் கருப்பு பூஞ்சை நோயை கொள்ளை நோயாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    சிகிச்சைக்கு என்ன மருந்து?

    சிகிச்சைக்கு என்ன மருந்து?

    இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பரவி வரும் கருப்பு பூஞ்சை நோயை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ENT மருத்துவர்கள், கண் மருத்துவர்கள், நரம்பியல் மருத்துவர்கள் மற்றும் பொது மருத்துவர்களை பயன்படுத்தலாம் . கருப்பு பூஞ்சை நோயை பெருந்தொற்று நோய் பட்டியலில் சேர்க்கலாம். Amphotericin B மருந்தினை இந்த நோய் சிகிச்சைக்கு பயன்படுத்தலாம். இந்த நோய் தொடர்பாக ஐசிஎம்ஆர் வெளியிட்ட வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.

    English summary
    The federal government has declared black fungus an epidemic and has asked states to take appropriate action to control it
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X