டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஏடிஎம்-ல பணம் எடுக்க போறீங்களா…? இன்று முதல் வந்தாச்சு புது கட்டுப்பாடுகள்

Google Oneindia Tamil News

டெல்லி: ஏடிஎம்களில் பணம் எடுக்க விதிக்கப்பட்ட புதிய விதிமுறைகள் மற்றும் கட்டண உயர்வு ஆகியவை புத்தாண்டு நாளான இன்று முதல் அமலுக்கு வருகின்றன.

Recommended Video

    ஏடிஎம்-ல பணம் எடுக்க போறீங்களா…? இன்று முதல் வந்தாச்சு புது கட்டுப்பாடுகள்

    வங்கி கணக்கு வைத்திருக்கும் பொது மக்கள் பெரும்பாலும் தங்கள் பணத்தை எடுக்க ஏடிஎம் மையங்களை நாடிச் செல்கின்றனர். ஏடிஎம் கார்ட் அல்லது டெபிட் கார்டு மூலமாக எந்த ஏடிஎம் மையத்தில் வேண்டுமானாலும் நமக்கு தேவையான பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.

    ஆனாலும் இதில் சில விதிமுறைகள் உள்ளன. அதாவது வங்கி கணக்கு இருக்கும் ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பதற்கும் வேறு வங்கிகளில் பணம் எடுப்பதற்கு குறிப்பிட்ட சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

     நடுங்குகிறது தலைநகர்.. வாட்டுகிறது குளிர்.. தவிக்கும் உத்தரபிரதேசம்.. 15 நாட்கள் பள்ளிகள் விடுமுறை நடுங்குகிறது தலைநகர்.. வாட்டுகிறது குளிர்.. தவிக்கும் உத்தரபிரதேசம்.. 15 நாட்கள் பள்ளிகள் விடுமுறை

    ரிசர்வ் வங்கி அறிவிப்பு

    ரிசர்வ் வங்கி அறிவிப்பு

    சென்ற ஜூன் மாதத்தில் ரிசர்வ் வங்கி மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதாவது வங்கிகள் தங்களின் வாடிக்கையாளர்களிடம் ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதன்படி வங்கிகள் தங்களது ஏடிஎம் பரிவர்த்தனைக் கட்டணங்களை உயர்த்தியது. ஜனவரி 1ம் தேதியான இன்று முதல் இந்த விதிமுறைகள் அமலுக்கு வர உள்ளது அதன் பிறகு ஏடிஎம்மில் பணம் எடுக்க வாடிக்கையாளர்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

    கட்டணம் உயர்வு

    கட்டணம் உயர்வு

    ஏடிஎம் பரிவர்த்தனைக் கட்டணம் ஆனது இதற்கு முன்பு குறிப்பிட்ட முறை பணம் எடுத்த பின் 20 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று முதல் 21 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது ஒரு மாதத்திற்கு எத்தனை முறைதான் இலவசமாக எடுக்க முடியும் என்ற வரம்பைத் தாண்டி இருக்கும் போதுதான் இந்த கூடுதல் கட்டணத்தை நீங்கள் செலுத்த வேண்டியிருக்கும் இது வங்கி கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்படும் வங்கிக்கு வங்கி இந்த பரிவர்த்தனை வரம்பு மாறும்.

    எத்தனை முறை இலவசம்

    எத்தனை முறை இலவசம்

    வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் வைத்திருக்கும் ஏடிஎம்களில் ஒரு மாதத்திற்கு அதிகபட்சமாக ஐந்து முறை இலவசமாக பணம் எடுத்துக்கொள்ளலாம். இதேபோல மற்ற வங்கி ஏடிஎம்களில் எடுப்பதாக இருந்தால் மெட்ரோ நகரங்களில் மூன்று முறையும் மேற்கு அல்லாத ஏடிஎம் மையங்களில் 5 முறையும் இலவசமாக பணம் எடுத்துக்கொள்ளலாம் ஏடிஎம் இயந்திரங்களில் போன்றவற்றுக்கான செலவு அதிகரித்துள்ளதால் வங்கிகள் ஏடிஎம் பரிவர்த்தனைக் கூடுதல் கட்டணம் வசூலிக்க அனுமதி அனுமதி வழங்கப்பட்டது

    இன்று முதல் அமல்

    இன்று முதல் அமல்

    புத்தாண்டான இன்று முதல் வங்கிகளில் பணம் எடுக்க விரும்பும் வாடிக்கையாளர்கள் தங்களின் செலவுகளை திட்டமிட்டு அதன் வரம்புக்கு உட்பட்டு ஏடிஎம்களில் பணம் எடுத்தால் கூடுதல் கட்டணங்களை தவிர்க்கலாம் என பொருளாதார நிபுணர்கள் ஆலோசனை கூறியுள்ளனர். குறிப்பிட்ட அளவுக்கு மேல் நீங்கள் 100 ரூபாய் எடுத்தாலும் ஒவ்வொரு முறையும் 21 ரூபாய் கட்டணமாக பிடித்தம் செய்யப்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

    English summary
    The new rules for withdrawing cash at ATMs will come into effect from today. The ATM transaction fee has been increased from Rs. 20 to Rs. 21 from
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X