டெல்லி-பெங்களூர்.. டேக் ஆப் செய்யும் போது விமானத்தில் பற்றி எரிந்த தீ.. அச்சத்தில் உறைந்த பயணிகள்
டெல்லி: டெல்லி விமான நிலையத்தில் இருந்து பெங்களூருக்கு 184 பேருடன் புறப்பட்ட இண்டிகோ விமானம் டேக் ஆப் செய்யும் போது தீப்பிடித்ததால் டெல்லி விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பயணிகள் அச்சத்தில் உறைந்தனர்.
நாட்டின் தலைநகரான டெல்லியில் உள்ள விமான நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
உள்நாட்டு, சர்வதேச விமானங்கள் இயக்கப்படும் இந்த விமான நிலையத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வருகை தருகின்றனர்.

184 பேருடன்..
பயணிகளை டிராப் செய்ய வரும் வாகனங்கள், பிக் அப் செய்ய வரும் வாகனங்கள் என விமான நிலையத்திற்கு வெளியிலும் பரபரப்புக்கு கொஞ்சமும் பஞ்சம் இருக்காது. இந்த நிலையில், டெல்லியில் இருந்து பெங்களூருவுக்கு 184 பயணிகளுடன் இண்டிகோ விமான நிறுவனத்திற்கு சொந்தமான 6E-2131- புறப்பட தயாராக இருந்தது. இரவு 9.45 மணியளவில் விமானம் கிளம்புவதற்காக தயாராக நின்றது.

திடீரென பற்றி எரிந்த தீ
விமானம் டேக் ஆப் செய்யும் திடீரென விமானத்தின் என்ஜினில் தீ பிடித்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விமான பயணிகள் மத்தியிலும் அச்சம் ஏற்பட்டது. எனினும் சில வினாடிகளில் இந்த தீ அணைந்துவிட்டது. விமானம் உடனடியாக நிறுத்தப்பட்டு பயணிகள் சுமார் 11 மணியளவில் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். விமானத்தின் என்ஜின் பகுதியில் தீப்பிடிக்கும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

தீப்பிழம்புகளை நான் பார்த்தேன்
இது தொடர்பாக விமானத்தில் பயணித்த பயணியான பிரியங்கா குமார் என்பவர் கூறுகையில், ''5 முதல் 7 செக்கண்டுகளுக்குள் விமானம் டேக் ஆப் ஆகியிருக்கும். அப்போது விமானத்தின் இறக்கை பகுதியில் தீப்பிழம்புகளை நான் பர்த்தேன். உடனடியாக விமானம் நிறுத்தப்பட்டது. என்ஜினில் கோளாறு ஏற்பட்டதாக விமானி தெரிவித்தார். விமானம் பார்க்கிங் பே பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. நாங்கள் பயணிக்க இண்டிகோ நிறுவனம் மாற்று விமானம் ஏற்பாடு செய்து கொடுத்தது'' என்றார்.

இண்டிகோ நிறுவனம் விளக்கம்
விமானத்தின் என்ஜின் பகுதியில் ஏற்பட்ட தீயால் பயணிகள் மத்தியில் பெரும் குழப்பமும் பீதியும் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தால் எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக இண்டிகோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதவது:- "டெல்லியில் இருந்து பெங்களூருவிற்கு இயக்கப்படும் விமானம் (6E2131) டேக் ஆப் செய்யும் நேரத்தில் என்ஜின் பழுதடைந்தது. இதனால் டேக் ஆப் செய்வது நிறுத்தப்பட்டது.

இணையத்தில் பரவும் வீடியோ
விமானம் பத்திரமாக பார்க்கிங் பே பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. அனைத்து பயணிகளும் பத்திரமாக மாற்று விமானத்தின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்காக நாங்கள் வருந்துகிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானம் டேக் ஆப் செய்ய ரன்வேயில் வேகமாக செல்லும் போது தீப்பொறிகள் ஏற்படும் காட்சிகளை பயணிகள் தங்கள் செல்போனில் படம் பிடித்துள்ளனர். இது தொடர்பான பதிவுகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. தலைநகர் டெல்லியில் இரவு நேரத்தில் ஏற்பட்ட இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை












Click it and Unblock the Notifications