டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வீடு தேடி வரும் சேவைகள் திட்டத்தின் இரண்டாம் கட்டம்.. ஆகஸ்ட் 1-ல் டெல்லியில் துவக்கம்

Google Oneindia Tamil News

டெல்லி: நுகர்வோர் வீடு தேடி வழங்கப்படும் அரசு நல திட்ட சேவையின் இரண்டாம் கட்டம் டெல்லியில் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி துவங்க உள்ளது.

டெல்லி மாநில அரசின் பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள், பொதுநல சேவைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகள் என 100 சேவைகள் நுகர்வோர் இல்லம் தேடி சென்று விநியோகம் செய்யப்படும் என கடந்த ஆண்டு மாநில முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்தார்.

The second phase of home-based government services.. Launch on August 1 in Delhi

இதனையடுத்து கடந்த ஆண்டு செப்டம்பரில் டெல்லியில் இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. வீடு தேடி வழங்கும் சேவைக்கென பிரத்யேகமாக ஒப்பந்த அடிப்படை ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர்.

முதற்கட்டமாக 40 சேவைகளை ஆம் ஆத்மி அரசு அறிமுகப்படுத்தியது. சாதி, வருவாய், குடியேற்றம், திருமணம் போன்ற சான்றிதழ், தண்ணீர் இணைப்பு, ரேசன் அட்டை விண்ணப்பம், வாகன பதிவு, வாகன உரிம நகல் உள்ளிட்ட பல சேவைகள் மக்களுக்கு வீடு தேடி சென்று வழங்கப்பட்டு வருகிறது.

நாடு முழுக்க எல்லா எம்எல்ஏக்களுக்கும் இது ஒரு எச்சரிக்கை.. சித்தராமையா தடாலடி நாடு முழுக்க எல்லா எம்எல்ஏக்களுக்கும் இது ஒரு எச்சரிக்கை.. சித்தராமையா தடாலடி

இதற்காக ஒவ்வொரு சேவைக்கும் ரூ.50 கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. எனினும் பெரிய அளவில் இத்திட்டத்தை விளம்பரப்படுத்தாததால், மக்கள் பரவலாக இன்னும் பயன்படுத்த துவங்கவில்லை என கூறப்பட்டது. சுமார் 80 சதவீத மக்கள் அலுவலகங்களையே நாடி வருவதாக தகவல் வெளியானது.

இதனால் சுதாரித்த ஆம்ஆத்மி அரசு கடந்த சில மாதங்களாக வீடு தேடி வரும் திட்டங்கள் குறித்து பெரிய அளவில் விளம்பரப்படுத்தியது. மக்களவை தேர்தல் அறிவிப்பு, தொடர்ந்து அமலான நன்னடத்தை விதிகள் காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் துவக்கப்பட வேண்டிய வீடு தேடி வரும் திட்டங்களின் இரண்டாம் கட்டத்தை துவக்க இயலவில்லை.

மேலும் இத்திட்டத்திற்கான சாப்ட்வேர் இயக்கத்தில் சில சிக்கல்களும் எழுந்தன. தற்போது அதிலிருந்த குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டதை அடுத்து வீடு தேடி சேவை திட்டத்தின் 2-ம் கட்டம், வரும் ஆகஸ்ட் 1ம் தேதி துவக்கி வைக்கப்பட உள்ளது. தொழிலாளர், சுற்றுலா, மருந்து கட்டுப்பாடு, உயர்கல்வி, போக்குவரத்து மற்றும் உணவு வழங்கல் துறைகளில் நிறைவேறி வரும் 30 சேவைகள் இரண்டாம் கட்ட திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதன் மூலம் ஆகஸ்ட் 1 முதல் வீடு தேடி சேவை திட்டத்தின் கீழ் மொத்தம் 70 சேவைகள் மக்களுக்கு கிடைக்க உள்ளதாக டெல்லி அரசு கூறியுள்ளது.

English summary
The second phase of the government's welfare service for consumers is to begin on August 1 in Delhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X