டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

'பார்த்து கவனமா பேசுங்க'.. சென்னை ஹைகோர்ட் நீதிபதிகள் தலையில் குட்டிய உச்சநீதிமன்றம். ஏன் தெரியுமா

Google Oneindia Tamil News

டெல்லி: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவிக்கும்போது கவனமுடன் இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமெடுத்தபோது தமிழகம், கேரளம், அசாம், புதுச்சேரி, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்து கொண்டிருந்தது.

தம்பியைப் பார்த்து பெருமைப்படுகிறேன்...மு.க ஸ்டாலினுக்கு அண்ணன் அழகிரியின் அசத்தல் வாழ்த்து தம்பியைப் பார்த்து பெருமைப்படுகிறேன்...மு.க ஸ்டாலினுக்கு அண்ணன் அழகிரியின் அசத்தல் வாழ்த்து

கொரோனா தொற்றை கவனத்தில் கொள்ளாமல் அரசியல் கட்சியினர் கூட்டம் சேர்ப்பதால் கொரோனா மேலும் அதிகரிக்கும் என்று பலரும் குற்றம்சாட்டினார்கள்.

அரசியல்வாதிகள் பொறுப்பு

அரசியல்வாதிகள் பொறுப்பு

இதனை தொடர்ந்து தமிழக தேர்தல் வாக்குப்பதிவு முடிந்ததும் இது தொடர்பாக வழக்கு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது. அப்போது கூறிய நீதிபதிகள், '' கொரோனா தடுப்பு விதிகளை புறந்தள்ளி கூட்டம், கூட்டமாக மக்கள் பிரசாரத்துக்கு திரண்டனர். அரசியல் கட்சியினர் கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாமல் மக்கள் கூட்டத்தை சேர்த்தனர். ஆனால் தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

கொலைகுற்றம் சுமத்தலாம்

கொலைகுற்றம் சுமத்தலாம்

தமிழகத்தில் கொரோனா பரவியதற்கு தேர்தல் ஆணையம்தான் காரணம். இதற்காக தேர்தல் ஆணையம் மீது கொலை குற்றம் கூட சுமத்தலாம் என்று நீதிபதிகள் கடுமையாக விமர்சித்தனர். நீதிபதிகளின் இந்த கருத்து பல்வேறு ஊடகங்கள், பத்திரிக்கைகளில் தலைப்பு செய்தியாக வலம் வந்தது. உயர்நீதிமன்றம் முன்பே ஏன் இதுபற்றி கருத்து தெரிவிக்கவில்லை? என்று ஒரு தரப்பினரும் தேர்தல் ஆணையம் மீதுதான் அனைதது தவறும் உள்ளது என்று வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

கடுமையான கருத்து

கடுமையான கருத்து

இதனை தொடர்ந்து ' தேர்தல் ஆணையம் மீது கொலைகுற்றம் கூட சுமத்தலாம்' என்ற வார்த்தையை ஊடகங்கள் தொடர்ந்து பயன்படுத்துவதை தடை செய்யவேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனு நீதிபதிகள் சந்திரசூட், எம் ஆர் ஷா அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ''தேர்தல் ஆணையம் மீது கொலை குற்றம் சுமத்தலாம்'' என்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் கருத்து மிகவும் கடுமையானது'' என்று தெரிவித்தனர்.

கவனம் வேண்டும்

கவனம் வேண்டும்

'சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவிக்கும்போது கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும். நீதிமன்ற விவகாரங்களை செய்தியாக வெளியிடக்கூடாது என்று ஊடகங்களை வற்புறுத்த முடியாது. அது அவர்களின் கடமை. எனவே நீதிபதிகள் கருத்துக்களை தெரிவிக்கும்போது மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும்'' என்று கூறிய நீதிபதிகள் தேர்தல் ஆணையம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

English summary
The Supreme Court has advised Chennai High Court judges to be careful when commenting
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X