டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

'தலைமுறை சீரமைப்புக்கு உங்கள் பங்களிப்பு அளப்பரியது'.. இந்திய மணல் சிற்ப கலைஞரை பாராட்டிய ஐ.நா!

Google Oneindia Tamil News

டெல்லி: சுதர்சன் பட்நாயக். இந்த பெயரை அடிக்கடி நீங்கள் கேட்டிருக்கலாம். கல்லிலே கலைவண்ணம் படைக்கும் கலைஞர்கள் நமது நாட்டில் அனைத்து பகுதிகளிலும் ஏராளமானோர் நிரம்பி கிடக்கின்றனர்.

பணி நீக்கப்பட்ட 7 மாற்றுத் திறனாளி கணினி ஆசிரியர்கள்.. பணி வழங்க முதல்வரிடம் உருக்கமான கோரிக்கைபணி நீக்கப்பட்ட 7 மாற்றுத் திறனாளி கணினி ஆசிரியர்கள்.. பணி வழங்க முதல்வரிடம் உருக்கமான கோரிக்கை

ஆனால் மண்ணிலே கலை வண்ணம் படைப்பவர்தான் இந்த சுதர்சன் பட்நாயக். இந்தியாவின் மிகச் சிறந்த மணல் சிற்ப கலைஞர்

மணல் சிற்ப கலைஞர்

மணல் சிற்ப கலைஞர்

ஒடிசா மாநிலம் பூரி மாவட்டத்தில் பிறந்த சுதர்சன் பட்நாயக், பூரி கடற்கரையை சுதர்சன் பட்நாயக் கடற்கரை என்று சொல்லும் அளவுக்கு மாற்றி விட்டார் என்று சொன்னால் அது மிகையல்ல. நாட்டில் எந்தவொரு விசேஷ நாட்களிலும், சோக நாட்களிலும் சுதர்சன் பட்நாயக் கைவண்ணம் மிளிரும்.

விழிப்புணர்வு நாயகன்

விழிப்புணர்வு நாயகன்

குறிப்பாக புகையிலை எதிர்ப்பு தினம், புற்றுநோய் விழிப்புணர்வு தினம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வுகளை தனது மணல் சிற்பம் மூலம் வெளிப்படுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளார் சுதர்சன் பட்நாயக். தத்ரூபமாக இருக்கும் இவரின் பிரமாண்ட மணல் சிற்பத்தை கண்டு ரசிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாயது.

சாதனைகளுக்கு சொந்தக்காரர்

சாதனைகளுக்கு சொந்தக்காரர்

மணல் சிற்பத்துக்காக மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்று இருக்கிறார் சுதர்சன் பட்நாயக். இது தவிர மணல் சிற்பத்தில் கின்னஸ் சாதனை, லிம்கா சாதனை என பல்வேறு சாதனை, விருதுகளை தன்வசம் வைத்திருக்கிறார். இந்த நிலையில் நேற்று உலக சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி, சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு செய்யும் விதமாக பிரமாண்டமான மணல் சிற்பத்தை சுதர்சன் பட்நாயக் உருவாக்கி இருந்தார்.

பிரமாண்டமான மணல் சிற்பம்

பிரமாண்டமான மணல் சிற்பம்

சுமார் ஏழு டன் மணலை கொண்டு 8 அடி அகலம், 13 அடி உயரத்தில் உருவாக்கபட்ட அந்த மணல் சிற்பம் சுற்றுச்சூழலின் அவசியத்தை மக்கள் மனதில் ஆழமாக பதிய செய்தது. நேற்று பல்வேறு ஊடங்களில் இந்த மணல் சிற்பம் இடம் பிடித்தது. ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் (யுஎன்இபி) சுதர்சன் பட்நாயக்கை வெகுவாக பாராட்டியுள்ளது.

ஐ.நா பாராட்டு

ஐ.நா பாராட்டு

இது தொடர்பாக யுஎன்இபி சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட பதிவில், ' தலைமுறை சீரமைப்புக்காக இந்த அழகான பங்களிப்புக்கு சர்வதேச மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக்குக்கு நன்றி' என்று அந்த மணல் சிற்பம் படத்தையும் இணைந்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பிலிருந்து பாராட்டு பெறுவது தனக்கு கிடைத்த மரியாதை என்று பட்நாயக் மகிழ்ச்சி ததும்ப கூறினார்.

English summary
The United Nations Environment Program (UNEP) has praised sand sculptor Sudarshan Patnaik
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X