டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குடியரசுத் தினத்தின்று டெல்லி முற்றுகை.. டிராக்டருடன் தயாராகும் பல்லாயிரம் பஞ்சாப் விவசாயிகள்

Google Oneindia Tamil News

டெல்லி: குடியரசு தினத்தன்று தேசிய தலைநகர் டெல்லியில் மிகப் பெரிய போராட்டத்தை பஞ்சாப் விவசாயிகள் முன்னெடுக்க உள்ளார்கள். இந்த போராட்டத்தில் தங்கள் டிராக்டருடன் பங்கேற்ற ஏராளமபானவிவசாயிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர். பஞ்சாப் முழுவதும் உள்ள கிராமங்களில் டெல்லி போராட்டதில் பங்கேற்க கடந்த இரண்டு நாட்களில், ஆயிரக்கணக்கானோர் பதிவு செய்துள்ளனர்.

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் ஜனவரி 26 ஆம் தேதி தேசிய தலைநகர் டெல்லியை பல்லாயிரக்கணக்கான டிராக்டர்களில் முற்றுகையிடுவோம் என விவசாய சங்கங்கள் முன்பு அறிவித்திருந்திருந்தன.

Thousands sign up from Punjab: Ahead of R-Day protest, drive to recruit volunteers

இந்த அறிவிப்பின்படி டெல்லியை முற்றுகையிடும் போராட்டத்தில் டிராக்டருடன் பங்கேற்ற பஞ்சாப் மாநிலத்தில் உள்ள விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக கீர்த்தி கிசான் யூனியன் பஞ்சாபின் துணைத் தலைவர் ராஜீந்தர் சிங் கூறினார்:

"நாங்கள் கடந்த வெள்ளிக்கிழமை டெல்லிக்கு வாகன பேரணி செல்வதற்கான இயக்கத்தைத் தொடங்கினோம், அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குடியரசு தினத்திற்கு முன்னதாக டெல்லியின் எல்லையான சிங்குக்குச் செல்லும் அனைத்து தன்னார்வலர்களின் விவரங்களையும் நாங்கள் சேகரித்துள்ளோம். பஞ்சாபில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

மாநிலத்தின் கிராமப்புறங்களில் மிகப்பெரிய உந்துதல் நடைபெறுகிறது, அங்கு தொழிற்சங்க உறுப்பினர்கள் இந்த நிகழ்வுகளக்காக விழிப்புணர்வு திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். கிராம மக்களிடமிருந்து ஆதரவைப் பெறுவதற்காக உள்ளூர் பஞ்சாயத்துகளுடன் கூட்டங்களும் நடத்தப்படுகின்றன.
போராட்டத்திற்காக தொண்டர்கள் டிராக்டகளுடுனு வருவார்கள், அவர்கள் எப்போது வர வேண்டும் என்பதை தீர்மானிப்பதற்கு சன்யுக்ட் கிசான் மோர்ச்சாவால் கூட்டம் நடத்தப்படும்" என்றார்.

போராட்டதை ஒருங்கிணைத்து வரும் தன்னார்வார்களில் ஒருவரான நியூசிலாந்தைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப வல்லுநர் ஜதிந்தர் சிங் பால், இதுபற்றி கூறுகையில், "குறைந்தது 1 லட்சம் டிராக்டர்கள் பங்கேற்க அதிகாரப்பூர்வமற்ற அழைப்பு உள்ளது, ஆனால் இது எங்களின் குறைந்தபட்ச மதிப்பீடாகும். பலரும் சேர ஆர்வமாக இருப்பதால் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும். பேசி வருகிறோம். முதல் நாளில், 3,500 க்கும் மேற்பட்டவர்கள் கையெழுத்திட்டனர். தொழிற்சங்கங்களின்படி, பெரும்பாலான தன்னார்வலர்கள் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட ஆண்கள். பொங்கல் பண்டிகைக்கு பின்னர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அமைப்பாளர்கள் கூறினார்.

English summary
As part of preparations for a large protest on Republic Day during which farmers would bring their tractors into the capital, farm unions are carrying out a mass recruitment drive in villages across Punjab. Over the last two days, thousands have signed up.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X