வாக்குறுதி முழுக்க சமஸ்கிருதம்.. அறிக்கையின் பெயருக்கு கூட அர்த்தம் தெரியாமல் புலம்பும் பாஜகவினர்!

பாஜக தேர்தல் அறிக்கையின் பெயருக்கு அர்த்தம் தெரியாமல் பாஜகவினர் பெரிய குழப்பத்தில் ஆழ்ந்து இருக்கிறார்கள்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாஜக தேர்தல் அறிக்கையின் பெயருக்கு அர்த்தம் தெரியாமல் பாஜகவினர் பெரிய குழப்பத்தில் ஆழ்ந்து இருக்கிறார்கள்.

லோக்சபா தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாஜக கட்சி டெல்லியில் வெளியிட்டுள்ளது. பிரதமர் மோடி, அமித்ஷா, அருண்ஜெட்லி, ராஜ்நாத்சிங் அறிக்கையை வெளியிட்டனர்.

48 பக்கங்கள் கொண்ட தேர்தல் அறிக்கை ஆகும் இது. பல்வேறு முக்கிய திட்டங்கள் குறித்த அறிவிப்பு இந்த அறிக்கையில் இடம்பெற்று இருக்கிறது.

தேர்தல் அறிக்கை

தேர்தல் அறிக்கை

இந்தநிலையில் இந்த தேர்தல் அறிக்கை முழுக்க முழுக்க பல திட்டங்களுக்கு சமஸ்கிருத பெயர் மட்டுமே வைக்கப்பட்டு இருந்தது.முக்கிய திட்டங்கள் அனைத்திற்கும் ஆங்கிலம், இந்தி என இரண்டிலும் பெயர் வைக்கப்படவில்லை. சமஸ்கிருதத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருந்தது.

சமஸ்கிருதம் ஏன்?

சமஸ்கிருதம் ஏன்?

அதேபோல் இந்த தேர்தல் அறிக்கையின் பெயரே சமஸ்கிருதம் என்பது குறிப்பிடத்தக்கது. சங்கல்ப் பத்ரா என்று இந்த தேர்தல் அறிக்கைக்கு பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. சங்கல்ப் என்பதே இந்தி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவும் சமஸ்கிருதம்தான்.

இந்தி இல்லை

இந்தி இல்லை

இந்த நிலையில்தான் இந்தி படித்தவர்களுக்கு கூட இதன் அர்த்தம் தெரியவில்லை என்று புலம்பிக் கொண்டு இருக்கிறார்கள். பாஜகவினரே இதன் அர்த்தம் என்ன என்று விளக்கம் கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். அதேபோல் சமஸ்கிருதம் தெரிந்த சிலரும் கூட இதற்கு அர்த்தம் தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர். அறிக்கையின் ஆங்கில பதிப்பிலும் சங்கல்ப் பத்ரா என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

அர்த்தம் என்ன

இந்த நிலையில்தான் இவர் இதற்கு அர்த்தம் அளித்து இருக்கிறார். அகராதியின்படி சங்கல்ப் என்றால் மனதில் விதைக்கப்பட்ட பொய்யான விதை அல்லது கருத்து என்று பொருள். இதை சங்கல்பம் என்று சொல்வார்கள் என்று கூறியுள்ளார். இந்த வார்த்தைக்கு பலர் இணையத்தில் விளக்கம் அளித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+