பரவும் புதிய "ஓமிக்ரான் XE!" குழந்தைகள் இடையே உயரும் கொரோனா.. அச்சப்பட வேண்டுமா? ஆய்வாளர் விளக்கம்
டெல்லி: இந்தியாவில் பள்ளிகளில் கொரோனா கண்டறியப்படுவது அதிகரித்து உள்ள நிலையில், இது தொடர்பாக மருத்துவர் டாக்டர் ககன்தீப் காங் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
கடந்த 2019 இறுதி முதலே உலகின் பல்வேறு நாடுகளையும் மோசமாகப் பாதித்தது கொரோனா பெருந்தொற்று தான். அமெரிக்கா தொடங்கி ஆஸ்திரேலியா வரை எந்தவொரு உலக நாடும் இந்த கொரோனா பெருந்தொற்றில் இருந்து தப்பவில்லை
கொரோனா வேக்சின் பணிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆகியவை காரணமாக வைரஸ் பாதிப்பு கடந்த சில மாதங்களாக மெல்லக் குறைந்து வருகிறது. உலக நாடுகள் மெல்ல கொரோனாவுக்கு முந்தைய நிலைக்குத் திரும்பி வருகின்றனர்.

ஓமிக்ரான் XE
இந்தச் சூழலில் உலகின் சில பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. அதிலும் புதிய ஓமிக்ரான் XE வகையும் கண்டறியப்பட்டு உள்ள நிலையில், வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்குவது அடுத்த அலையை ஏற்படுத்துமோ என்ற அச்சத்தையும் அதிகரித்துள்ளது. இந்தியாவைப் பொருத்தவரை ஒட்டுமொத்த கொரோனா பாதிப்புகள் குறைவாகவே உள்ளது. இருப்பினும், கடந்த வாரத்தின் வைரஸ் பாதிப்புடன் ஒப்பிடும் போது பல முக்கிய நகரங்களில் வைரஸ் பாதிப்பு அதிகரித்தே வருகிறது.

என்ன காரணம்
குறிப்பாக சமீப நாட்களாக டெல்லி பள்ளிகளில் குழந்தைகளிடையே வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவது கவலைக்குரிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இது குறித்து நாட்டின் உயர்மட்ட உயிரியல் டாக்டர் ககன்தீப் காங் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "மரபணு வரிசைப்படுத்துதல் சோதனை நடத்தாத வரை வைரஸ் பாதிப்பு இப்போது அதிகரிக்க XE வகை கொரோனா காரணமாக உள்ளதா என்பது குறித்து உறுதியாகத் தெரியாது.

புதிய XE பிறழ்வு
வைரஸ் பாதிப்பு குறித்து அனைத்து தகவல்களையும் தெரிந்து கொண்டால் மட்டுமே தெளிவாக என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும். இப்போது இருக்கும் தரவுகளைக் கொண்டு நம்மால் எந்த முடிவுக்கும் வர முடியாது. இந்த புதிய XE பிறழ்வு ஓமிக்ரான் கொரோனாவின் ஒரு வகை என்பது மட்டுமே இப்போது நமக்குத் தெரியும். ஓமிக்ரான் கொரோனா மற்ற வகைகளைப் போல இல்லாமல் கீழ் சுவாசக் குழாயை விட மேல் சுவாசக் குழாயில் அதிகமாகப் பரவுகிறது.

லேசான பாதிப்பு
எனவே, இந்த ஓமிக்ரான் வைரசால் பாதிக்கப்படுவோருக்குக் காய்ச்சல், அமைதியின்மை ஏற்படும். பொதுவாக மக்களிடையே லேசான பாதிப்பு மட்டுமே ஏற்படுகிறது. அதேநேரம் அறிகுறிகளை மட்டுமே வைத்து ஒருவருக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டது என்பதைச் சொல்ல முடியாது என்றே நான் நினைக்கிறேன். பரவும் உருமாறிய கொரோனா குறித்து ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் வெளியாகும் போதிலும், மரபணு வரிசைப்படுத்தல் குறித்த தரவுகள் இல்லையென்றால், எந்த வகை கொரோனா பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதைச் சொல்ல முடியாது.

மீண்டும் பாதிப்பு
இப்போது கொரோனா கேஸ்கள் சற்றே அதிகரித்து இருந்தாலும் கூட, இதை நான்காம் அலையின் தொடக்கம் என்று சொல்ல முடியாது. ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள், வேக்சின் போட்டுக் கொண்டவர்கள் ஆகியிருக்கும் மீண்டும் வைரஸ் பாதிப்பு ஏற்படும். மற்ற நாடுகளில் வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ள போதிலும், ஒப்பீட்டளவில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைவாகவே உள்ளது. கடந்த ஆண்டு இந்தியாவில் ஏற்பட்ட பாதிப்பும் கொரோனா வேக்சின் பணிகளும் ஹைபிரிட் தடுப்பாற்றலை அளித்துள்ளது.

தடுப்பாற்றல்
அதேநேரம் இந்த தடுப்பாற்றல் போதுமானதாக இருக்கும் எனச் சொல்ல முடியாது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட ஓமிக்ரான் கொரோனா இதற்கான சாட்சி. பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கிறது. இருப்பினும் இது குறித்துப் பெற்றோர்கள் அதிகம் கவலைப்படத் தேவையில்லை.

குழந்தைகள்
கடந்த காலங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் குழந்தைகள் மத்தியில் கொரோனா தீவிர பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்றே தெரிகிறது. சமீபத்தில் நடத்தப்பட்ட செரோ ஆய்வில் கூட ஏற்கனவே 80% குழந்தைகளுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவே கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே, கொரோனாவில் இருந்து குணமடைந்தோருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதால், அது மீண்டும் பாதிப்பை ஏற்படுத்தும். இதில் குழந்தைகள் விதிவிலக்கு இல்லை.

அச்சம் வேண்டாம்
எனவே, எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்பதைக் கண்டு நாம் கவலைப்படத் தேவையில்லை. ஏனென்றால் பெரும்பாலான கொரோனா கேஸ்கள் லேசானதாகவே உள்ளது. அவர்களுக்கு மருத்துவ உதவிகள் கூட தேவைப்படுவதில்லை. இந்தியாவில் நம்மிடம் உள்ள தரவுகளை வைத்துப் பார்க்கும் போது, மிகக் குறைவான குழந்தைகளுக்கு.. அதுவும் இணை நோய் உள்ளவர்களுக்கு மட்டுமே மருத்துவ உதவி தேவைப்படுகிறது. எனவே, இதைக் கண்டு நாம் அச்சப்படத் தேவையில்லை" என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications