டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஓ அழகான பெண்ணே.. பாஜகவை விளாசும் எம்பி மஹூவா மொய்த்ராவின் அசத்தல் நடனம்.. இணையத்தில் பரவும் வீடியோ

Google Oneindia Tamil News

டெல்லி: மேற்கு வங்கத்தின் எம்பியும், பாஜகவை அடிக்கடி கடுமையாக விமர்சனம் செய்பவருமான மஹூவா மொய்த்ரா மகாபஞ்சமி விழாவில் பொதுமக்களுடன் சேர்ந்து ‛ஓ அழகான பெண்ணே' எனும் பெங்காலி கிராமிய பாடலுக்கு சாலையில் நடனமாடி அனைவரின் மனதையும் கவர்ந்தார்.

மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் மஹூவா மொய்த்ரா. இவர் அக்கட்சியின் மூத்த தலைவராகவும் உள்ளார்.

இவர் 2016ல் நாடியா அருகே கரீம்பூர் தொகுதியில் எம்எல்ஏவாக தேர்வானார். அதன்பிறகு 2019ல் கிருஷ்ணகர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்பியானார்.

72 - 45 -7.. அமைதியாக காரியத்தை சாதித்த 72 - 45 -7.. அமைதியாக காரியத்தை சாதித்த

பாஜகவை விமர்சிக்கும் மஹூவா

பாஜகவை விமர்சிக்கும் மஹூவா

மஹூவா மொய்த்ரா நாடாளுமன்றத்திலும் சரி, ட்வீட்டரிலும் சரி பாஜக மற்றும் பாஜகவின் ஆதரவு நிலைப்பாடு உள்ள அமைப்பினரை கடுமையாக தாக்கி பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதனால் அவருக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் ரசிகர்கள் உள்ளனர். இவரது ட்விட்டர் பக்கத்தை 7 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். சமூக வலைதளங்களிலும் அவரது பெயரில் ரசிகர் என்ற முறையில் பக்கங்கள் துவங்கப்பட்டுள்ளன.

மகா பஞ்சமி கொண்டாட்டம்

மகா பஞ்சமி கொண்டாட்டம்

இந்நிலையில் தான் மகாபஞ்சமி பண்டிகையை கொண்டாடப்பட்டது. ஒன்பது நாட்கள் நடைபெறும் நவராத்திரி விழாவின் 5ம் நாளில் துர்கா தேவியின் 5வது அவதாரத்தை குறிக்கும் வகையில் மகாபஞ்சமி கொண்டாடப்பட்டு வருகிறது. இது மேற்கு வங்க மாநிலத்தில் மிகவும் கோலாலமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாக உள்ளது.

 மஹூவா மொய்த்ரா பங்கேற்பு

மஹூவா மொய்த்ரா பங்கேற்பு

இந்நிலையில் தான் நாடியா மாவட்டத்தில் மகாபஞ்சமி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதில் மஹூவா மொய்த்ரா பங்கேற்றார். இதில் கிராமிய கலைநிகழ்ச்சியின்போது பொதுமக்களுடன் சேர்ந்து பெங்காலி மொழி கிராமிய பாடலுக்கு நடனமாடினார். "ஓ அழகான பெண்ணே.. நிலவை போல் முகம் கொண்டவளே..'' எனும் வரிகள் வரும் பாடலை படித்தபடியே அசத்தலாக நடனமாடுகிறார். இதனை பார்த்த பெண்களும் அவருடன் உற்சாக மிகுதியில் புன்னகையுடன் நடனமாடினார்கள்.

இனிமையான தருணம்

இனிமையான தருணம்

இந்த வீடியோவை அவர் தற்போது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, ‛‛நாடியாவில் கொண்டாடப்பட்ட மகாபஞ்சமி கொண்டாட்டத்தின் இனிமையான தருணம்'' என குறிப்பிட்டுள்ளார். அவர் பதிவிட்ட வீடியோவில் பெங்காலி நாட்டுப்புறப்பாடலுக்கு மஹூவா மொய்தரா பிற பெண்களுடன் சேர்ந்து நடனமாடியபடியே நடந்து செல்கிறார். இந்த வீடியோவுக்கு பல்வேறு தரப்பு மக்கள் கருத்துகள் தெரிவித்துள்ளார்.

 தமிழக இயக்குனரால் சர்ச்சை

தமிழக இயக்குனரால் சர்ச்சை

முன்னதாக தமிழகத்தின் மதுரையை சேர்ந்த ஆவணப்பட இயக்குனர் லீனா மணிமேகலையின் காளி பட போஸ்டர் சர்ச்சை கிளப்பியது. போஸ்டரில் காளி தெய்வம் வேடம் அணிந்தும், ஓரின சேர்க்கையாளர்களை குறிக்கும் வானவில் கொடியும் இடம் பெற்றிருந்தது. அப்போது லீனா மணிமேகலைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகயைில் மஹுவா மொய்த்ரா, "என்னை பொறுத்தவரை காளி தேவி இறைச்சி உண்டு மதுரை ஏற்றுக்கொள்ளும் தெய்வம்" என தெரிவித்து இருந்தார். இதையடுத்து மஹூவா மொய்த்ராவும் சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
West Bengal MP from West Bengal and a frequent critic of the BJP, Mahua Moitra, danced with the public at the Maha Panchami event and won the hearts of all.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X