20 யூட்யூப் சேனல்களை முடக்கிய மத்திய அரசு..! என்ன காரணம் தெரியுமா?
டெல்லி: இந்திய அரசுக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக சுமார் 50 கோடி பார்வையாளர்கள் கொண்ட 20 யூடியூப் சேனல்கள் மற்றும் இரண்டு இணையதளங்களை மத்தி தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர்கம் முடக்கியுள்ளது.
மத்திய தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் கடந்த சில நாட்களாக அரசுக்கு எதிரான பிரசாரங்களில் ஈடுபடும் வகையில் செயல்படும் யூட்யூப் சேனல்கள் மற்றும் இணையதளங்களை முடக்கி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானில் இருந்து ஒருங்கிணைக்கப்பட்ட தவறான பிரச்சாரங்களை சில யூட்யூப் சேனல்கள் மற்றும் இணையதளங்களில் பரப்பி வருவது கண்டறியப்பட்டது. மேலும் இந்தியாவில் உள்ள சிறுபான்மை மதத்தினரை மத்திய அரசுக்கு எதிராக தூண்டி விட முயன்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்தநிலையில் இணையத்தில் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரம் மற்றும் போலி செய்திகளை பரப்பியதற்காக 20 யூடியூப் சேனல்கள் மற்றும் இரண்டு இணையதளங்களை மத்திய அரசு இன்று முடக்கியதாக தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த சேனல்கள் வெளியிடப்பட்ட பெரும்பாலான கருத்துக்கள் தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு புறம்பானது என்பதால் மூடக்கப்பட்டதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

யூட்யூப் சேனல்கள் முடக்கம்
யூட்யூப் சேனல்கள் மற்றும் இணையதளங்களை முடக்கும் முடிவை உளவுத்துறை அமைப்புகளுடன் இணைந்து தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் எடுத்துள்ளதாகவும், இப்போது தடுக்கப்பட்டுள்ள யூட்யூப் சேனல்கள் மற்றும் இணையதளங்களில் பாகிஸ்தானில் இருந்து ஒருங்கிணைக்கப்பட்ட தவறான தகவல் கட்டமைப்பை சேர்ந்தவை என்றும் காஷ்மீர், இந்திய ராணுவம், ராமர் கோயில், சிறுபான்மை சமூகங்கள் மற்றும் ஜெனரல் பிபின் ராவத் மரணம் போன்ற பல்வேறு முக்கிய விஷயங்களில் மக்களை பிளவுபடுத்தும் நோக்கத்துடன் தவறான கருத்துக்களை வெளியிட பயன்படுத்தப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது.

போலி செய்திகள் வெளியீடு
பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் தி நயா பாகிஸ்தான் குழுமத்தின் யூட்யூப் சேனல் நெட்வொர்க் மற்றும் முப்பத்தி ஐந்து லட்சத்துக்கும் அதிகமான சந்தாதாரர்களை கொண்ட வேறுசில தனித்தனி சேனல்கள் இது போன்ற தவறான தகவல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன எனவும், நயா பாகிஸ்தான் குழுமத்தில் சில யூடியூப் சேனல்கள் பாகிஸ்தான் செய்தி சேனல்களை தொகுப்பாளர்கள் மூலம் இயக்கப்படுகின்றன என்ற தகவலும் வெளியாகி உள்ளது. சில யூட்யூப் சேனல்களில் விவசாயிகளின் போராட்டம் மற்றும் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பான போலி செய்திகளை வெளியிடுவதன் மூலம் மத்திய அரசுக்கு எதிராக சிறுபான்மை மதத்தினரை தூண்ட முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது.

5 மாநில தேர்தலை குலைக்க சதி
5 மாநிலங்களில் வரவிருக்கும் தேர்தலில் ஜனநாயக செயல்முறையை குறைத்து மதிப்பிடும் வகையில் தவறான உள்ளடக்கங்களை கொண்டு வெளியிடப்பட்டதால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறை குறியீட்டு விதி 2021 பிரிவு 16 -ன் படி அவசரகால அதிகாரங்களை பயன்படுத்தி மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் யூட்யூப் சேனல்கள் மற்றும் போர்டல்களை தடுக்க, இணைய சேவை வழங்கும் நிறுவனங்களை கேட்டுக் கொண்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முடக்கப்பட்ட யூட்யூப் சேனல்கள்
தி பஞ்ச் லைன், இன்டர்நேஷனல் வெப் நியூஸ், கல்சா டிவி மற்றும் தி நேக்கட் ட்ரூத், 48 செய்திகள், பிக்சன்ஸ், ஹிஸ்டாரிக்கல் ஃபேக்ட்ஸ், பஞ்சாப் வைரல், நயா பாகிஸ்தான் குளோபல், கவர் ஸ்டோரி, கோ குளோபல், ஜுனைத் ஹலீம் அஃபிசியல், தயப் ஹனிஃப், ஜைன் அலி அஃபிசியல், மொஹ்சின் ராஜ்புத் அஃபிசியல், கனீஸ் பாத்திமா, சதாப் துரானி, மியான் இம்ரான், அஹ்மத், நஜாம் உல் ஹசன், பஜ்வா மற்றும் நியூஸ்24 ஆகிய சேனல்களை தான் மத்திய அரசு முடக்கியுள்ளது.
-
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
ஜப்பானில் பாகிஸ்தான் கட்டிய மசூதி.. இடிக்க அதிரடியாக உத்தரவிட்ட அதிகாரிகள்.. என்ன காரணம்? -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம்












Click it and Unblock the Notifications