டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காளி ஆவணப்பட சர்ச்சை.. ட்விட்டரில் இருந்து போஸ்டர் நீக்கம்.. காரணம் என்ன?

Google Oneindia Tamil News

டெல்லி: இயக்குநா் லீனா மணிமேகலை வெளியிட்ட காளி ஆவணப்படத்தின் சா்ச்சைக்குரிய போஸ்டரை ட்விட்டா் நிர்வாகம் நீக்கியுள்ளது.

திரைப்பட இயக்குநர் லீனா மணிமேகலை இயக்கிய செங்கடல், மாடத்தி படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சமீபத்தில் 'காளி' எனும் ஆவண படத்தின் பர்ஸ்ட் லுக் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டது. அதில் காளியின் கையில் ஒரு சிகரெட் இருப்பது போல் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. காளி தேவியின் கையில் திரிசூலம், அரிவாள் ஆகிய ஆயுதங்களுடன் LGBTQ+ சமூகத்தினரின் பெருமித அடையாளக் கொடியும் இருக்கிறது. இந்தப் படம் இணையத்தில் வெளியாகிய நிலையில், இந்து அமைப்புகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இயக்குநர் லீனா மணிமேகலை சர்ச்சை.. காளி ஆட்டத்தை காட்டப்போவதாக வீடியோ வெளியிட்ட அதிரடி சரஸ்வதி கைது! இயக்குநர் லீனா மணிமேகலை சர்ச்சை.. காளி ஆட்டத்தை காட்டப்போவதாக வீடியோ வெளியிட்ட அதிரடி சரஸ்வதி கைது!

போஸ்டரால் சர்ச்சை

போஸ்டரால் சர்ச்சை

இந்த போஸ்டர் வெளியான நாளிலிருந்தே சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்து கடவுள்களை அவமதிப்பதாக கூறி பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளமான ட்விட்டரில் அந்த புகைப்படத்தை பகிர்ந்து இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இந்து மதத்தை அவமதித்த லீனா மணிமேகலையை கைது செய்ய வலியுறுத்தி ஹேஷ்டேக்கை அவர்கள் டிரெண்ட் செய்தனர்.

 வழக்குப்பதிவு

வழக்குப்பதிவு

சர்ச்சைக்குரிய இந்த போஸ்டர் தொடர்பாக லீனா மணிமேகலை மீது உத்தரப்பிரதேச போலீசார் 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். டெல்லி காவல்துறையும் வழக்கு பதிந்துள்ளது. அதேபோல் மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, போஸ்டரை நீக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறி இருந்தார். இதனால் நாடு முழுவதும் காளி பட போஸ்டருக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

லீனா மணிமேகலைக்கு மிரட்டல்

லீனா மணிமேகலைக்கு மிரட்டல்

இதனிடையே கோவை செல்வபுரம் அருகே சொக்கம்புதூர் பகுதியில் சஷ்டி சேனா இந்து மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த அதிரடி சரஸ்வதி என்பவர் இயக்குநர் லீனா மணிமேகலைக்கு கொலை மிரட்டல் விடுத்து வீடியோ வெளியிட்டிருந்தார். கொச்சையான வார்த்தைகளான பேசிய வீடியோ குறித்து காவல்துறையினரிடம் புகாரளிக்கப்பட்ட நிலையில், போலீசார் அதிரடி சரஸ்வதி கைது செய்யப்பட்டார்.

ட்விட்டரில் இருந்து போஸ்டர் நீக்கம்

ட்விட்டரில் இருந்து போஸ்டர் நீக்கம்

இந்த நிலையில், சா்ச்சைக்குரிய காளி ஆவணப்படத்தின் போஸ்டரை ட்விட்டா் நிர்வாகம் நீக்கியுள்ளது. லீனா மணிமேகலையின் ட்விட்டா் பக்கத்தில் போஸ்டா் வெளியிடப்பட்ட பதிவில், சட்டரீதியான கோரிக்கையை ஏற்று லீனா மணிமேகலையின் போஸ்டா் பதிவு நீக்கப்பட்டுள்ளது என்று ட்விட்டா் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் காளி படத்தின் போஸ்டரை பொது வெளியில் பகிரப்படுவது குறையும் என்று கூறப்படுகிறது.

English summary
Recently, the first look of the documentary film 'Kali' has been released on social media while the films Red Ocean and Madathi directed by film director Leena Manimegal have been well received by the people. It depicted Kali holding a cigarette.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X