"நீங்க சொல்வதை எல்லாம் ஏற்க முடியாது.." தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கர்நாடக மாநிலம் சிருங்கேரி சட்டமன்ற தொகுதியில் 2023ம் ஆண்டு நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் வீடியோவை கண்டுபிடிக்க முடியவில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்ததற்கு உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. அடுத்த விசாரணையின்போது உரிய ஆவணங்களையும் பதிவுகளையும் தாக்கல் செய்யாவிட்டால், தேர்தல் ஆணையத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் என்றும் நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து இப்போது நாடு முழுக்க போராட்டங்கள் நடந்து வருகிறது. எஸ்ஐஆர் உள்ளிட்ட விவகாரங்களில் தேர்தல் ஆணையம் ஒருமித்த முடிவின் அடிப்படையில் செயல்படவில்லை என்பதே புகாராகும். இந்த போராட்டங்கள் காரணமாக தேர்தல் ஆணையம் தொடர்பான வழக்குகள் கவனம் பெறுகிறது.

Supreme Court Warns Election Commission Supreme Court Election Commission

தேர்தல் ஆணையம்

இதற்கிடையே கர்நாடக தேர்தல் தொடர்பான வழத்கை நீதிபதிகள் சஞ்சய் குமார், சஞ்சீவ் சச்தேவா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது கர்நாடக மாநிலம் சிருங்கேரி சட்டமன்ற தொகுதியில் 2023ம் ஆண்டு நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை வீடியோவை கண்டுபிடிக்க முடியவில்லை என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதிருப்தி

இதை கேட்டவுடன் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், தேர்தலை நடத்தும் பொறுப்பில் உள்ள தேர்தல் ஆணையத்தால், தேர்தல் தொடர்பான முக்கிய வீடியோ தொலைத்துவிட்டோம் என எப்படி சொல்ல முடியும் என்று கேள்வி எழுப்பினர். அவர்கள் மேலும், "தேர்தல் ஆணையம் தனது வீடியோவை தொலைத்துவிட்டதாக எப்படி கூற முடியும்? தேர்தலை நடத்துவதுதான் உங்கள் முழு பொறுப்பு. அது தொடர்பான அனைத்து ஆவணம் உங்களிடம் இருக்க வேண்டும்" என்று நீதிபதிகள் கூறினர்.

வீடியோவை தேடி வருவதாக தேர்தல் ஆணையம் அளித்த விளக்கத்தை ஏற்காத நீதிமன்றம், அடுத்த விசாரணையின்போது தன்னிடம் உள்ள அனைத்து ஆவணங்கள் மற்றும் பதிவுகளை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை 2027 பிப்ரவரி 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பின்னணி

2023ம் ஆண்டு கர்நாடக சட்டமன்ற தேர்தலில் சிருங்கேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் டி.டி. ராஜேகவுடா, பாஜக வேட்பாளர் டி.என். ஜீவராஜை 201 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்ததாக அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து ஜீவராஜ் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து நிராகரிக்கப்பட்ட 279 தபால் வாக்குகளை மறுபரிசீலனை செய்து, வாக்கு எண்ணிக்கை நடத்த உயர் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 6ம் தேதி உத்தரவிட்டது.

மறுவாக்கு எண்ணிக்கைக்கு பிறகு, கடந்த மே 3ம் தேதி திருத்தப்பட்ட முடிவு அறிவிக்கப்பட்டது. இதில் ராஜேகவுடாவுக்கு விழுந்த வாக்குகளில் 255 குறைந்ததாகவும், ஜீவராஜ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.. இந்த முடிவையும் மறுவாக்கு எண்ணிக்கை நடைமுறையையும் எதிர்த்து ராஜேகவுடா உச்ச நீதிமன்றத்தை அணுகினார். உயர் நீதிமன்றம் நிராகரிக்கப்பட்ட 279 தபால் வாக்குகளை மட்டுமே மறுபரிசீலனை செய்ய உத்தரவிட்டிருந்த நிலையில், ஏற்கெனவே செல்லுபடியாகும் வாக்குகளாக ஏற்று கொள்ளப்பட்டு தனக்கு சாதகமாக இருந்த 562 தபால் வாக்குகளும் மறுபரிசீலனை செய்யப்பட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

ஏற்க முடியாது

முதலில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் வீடியோ மற்றும் தேர்தல் பார்வையாளரின் அறிக்கையை வழங்க வேண்டும் என்று ராஜேகவுடா கோரியுள்ளார். மறுவாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவுக்கே முகாந்திரம் இல்லை என்பதை வலியுறுத்தவே அவர் வீடியோவை கோரியிருந்தார். அவரது இந்த கோரிக்கைக்கு தான் வாக்கு எண்ணிக்கையின் வீடியோவை தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், அடுத்த விசாரணையில் கிடைக்கக்கூடிய அனைத்து வீடியோக்களையும் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

நீதிபதிகள் மேலும், "அடுத்த விசாரணையின்போது உங்களிடம் உள்ள அனைத்தையும் தாக்கல் செய்யுங்கள். இல்லையென்றால், உங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும். சும்மா இதுபோல ஒன்றுக்கும் உதவாத சாக்கு போக்குகள் சொல்வதை ஏற்க முடியாது" என எச்சரித்தாகவும் கூறப்படுகிறது. இந்த வழக்கில் ராஜேகவுடாவுக்கு இடைக்கால நிவாரணம் வழங்கிய உச்சநீதிமன்றம், அவரது மனு நிலுவையில் இருக்கும் வரை அவர் சட்டமன்ற உறுப்பினராக தொடரலாம் என்றும் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+