நாட்டில் 6.57 சதவிகிதமாக குறைந்த வேலைவாய்ப்பின்மை.. பொருளாதார கண்காணிப்பு மையம் ஆறுதல் தகவல்
டெல்லி: இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்துவந்த வேலைவாய்ப்பின்மை சதவிகிதம் தற்போது 6.57 சதவீதமாகக் குறைந்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (சிஎம்ஐஇ) இந்தியாவில் அதிகரித்துவரும் வேலைவாய்ப்பின்மை குறித்து ஆராய்ச்சி செய்துவந்தது. 2021 ஆண்டுக்கான அறிக்கையோடு தற்போதைய வேலைவாய்ப்பினமை நிலை குறித்து அறிவித்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகள் உலகம் முழுவதும் கொரோனாவால் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டது. ஊரடங்கு தளர்த்தப்பட்டதும் மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக பொருளாதாரம் உயரத்தொடங்கியது.

பொருளாதாரம்
பொருளாதார வளர்ச்சி அதிகரித்ததும் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கத் தொடங்கின. தற்போது ஓமிக்ரான் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால் தளர்வுகள் இருந்ததால் வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. இதனால் கடந்த ஆண்டைவிட, வேலைவாய்ப்பின்மை குறைந்துவருவதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

வேலைவாய்ப்பின்மை
'இந்தியாவின் நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்பின்மை ஜனவரியில் 8.16 சதவீதமாக இருந்தது. இதுவே கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பின்மை 5.84 சதவீதமாக இருந்தது. டிசம்பரில் வேலையின்மை விகிதம் 7.91 சதவீதமாக குறைந்தது. இதில், நகர்ப்புறங்களில் வேலையின்மை 9.30 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் 7.28 சதவீதமாகவும் இருந்தது' என இந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

தெலுங்கானா
தெலுங்கானாவில் தான் குறைந்த அளவு வேலைவாய்ப்பின்மை பதிவாகியுள்ளது. கடந்த ஜனவரியில் தெலுங்கானாவில் 0.7 சதவீதமாக வேலைவாய்ப்பின்மை இருக்கிறது. இதையடுத்து குஜராத்தில் 1.2%, மேகாலயாவில் 1.5% மற்றும் ஒடிசாவில் 1.8 % வேலைவாய்ப்பின்மை உள்ளது. அதேசமயம், ஹரியானாவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 23.4 சதவீதமாகவும், ராஜஸ்தானில் 18.9 சதவீதமாகவும் உள்ளது.

வேலை இல்லாதோர்
2021 டிசம்பர் மாத அறிக்கையின்படி, இந்தியாவில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 53 மில்லியனாக இருப்பதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. அவர்களில் பெரும்பாலோர் பெண்கள் என்றும் அறிக்கையில் தெரியவந்துள்ளது. 2021 டிசம்பரில் 35 மில்லியன் மக்கள் தீவிரமாக வேலை தேடுகிறார்கள், அதில் 23 சதவீதம் பேர் பெண்கள். இந்த ஆண்டு ஜனவரியில் 8.16 சதவிகிதத்தில் இருந்து தற்போது 6.57 சதவிகிதமாக வேலைவாய்ப்பின்மை குறைந்துள்ளது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications