பட்ஜெட்டுக்கு பிறகு எந்த வரியெல்லாம் மாறப்போகுது தெரியுமா?.. முழு விவரம்!
டெல்லி: நாடாளுமன்றத்தில் 2022- 23-ம் ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து முடித்துள்ளார். டிஜிட்டல் முறையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.
Recommended Video
ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தனி நபர் வருமான வரி உச்ச வரம்பில் மாற்றம் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வெளியிடப்படவில்லை. இந்த பட்ஜெட்டில் புதிய வருமான வரி மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றை பின்வருமாறு காண்போம்.

1. வரி செலுத்துவோருக்கு நிவாரணம்
கூடுதல் வரி செலுத்துவோருக்கு புதிய வசதி அறிமுகப்படுத்தப்படும்.. கூடுதல் வருமானத்தை கணக்கில் காட்டி கூடுதல் வரி செலுத்த விரும்புவோருக்கு திருத்தப்பட்ட கணக்கு தாக்கல் செய்ய புதிய வசதி அறிமுகம் செய்யப்படும். திருத்தப்பட்ட கணக்கை தாக்கல் செய்வதற்கான அவகாசம் 2 ஆண்டுகளாக நீட்டிக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. ''நம்பிக்கை அடிப்படையிலான ஆட்சிமுறை என்பது இப்போது வருமான வரிச் சட்டத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறைபாடுகள் மற்றும் தவறுகள் இருந்தால், திருத்தம் செய்ய மற்றும் பொருத்தமான வரிகளை செலுத்துவதற்கு புதுப்பிக்கப்பட்ட வருமானத்தை தாக்கல் செய்ய ஒரு புதிய ஏற்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட கணக்கை தாக்கல் செய்ய 2 ஆண்டுகள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது நம்பிக்கை அடிப்படையிலான நிர்வாகத்தை ஊக்குவிக்கிறது'' என்று இண்டஸ்லாவின் பார்ட்னர் ரித்தேஷ் குமார் கூறினார்.

2. டிஜிட்டல் சொத்துகளின் வருமானத்திற்கு 30% வரி
பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சி மெய்நிகர்/டிஜிட்டல் சொத்துகளின் வருமானத்திற்கு 30% வரி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மெய்நிகர் டிஜிட்டல் சொத்தைப் பரிசாகப் பெற்றால் வாங்குபவருக்கு வரி விதிக்கப்படும்.டிஜிட்டல் சொத்துகளை மாற்றுவதன் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு 30% வரி விதிக்கப்படும். ''பிற வருமானத்திற்கு எதிராக செட் ஆஃப் அனுமதிக்கப்படவில்லை. ஒரு குறிப்பிட்ட வரம்புக்கு அப்பால் 1% விற்பனையில் வரிப் பிடித்தம் தூண்டப்படும்'' என்று டெலாய்ட் நிறுவன இந்தியாவின் பங்குதாரர் சரஸ்வதி கஸ்தூரிரங்கன் தெரிவித்தார்.

3. NPS
தேசிய ஓய்வூதியத் திட்டதில்(NPS) மாநில அரசு ஊழியர்களின் பங்களிப்புக்கான வரி விலக்கு வரம்பு 10% இல் இருந்து 14% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக எஸ்ஏஜி இன்ஃபோடெக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அமித் குப்தா கூறுகையில், 'மாநில அரசு ஊழியர்களின் NPS பங்களிப்பில் வரி விலக்கு வரம்பு 14% ஆக உயர்த்தப்பட்டுள்ளது ஒரு சிறந்த திட்டமாகும். புதுப்பிக்கப்பட்ட வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் ஏற்பாடு முந்தையதை விட மிகச் சிறப்பாக உள்ளது. ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகள் தொடர்ந்து 3 ஆண்டுகளாக வழங்கப்பட்டுள்ளது, தற்போது மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது' என்றார்.

4 -டிஜிட்டல் சொத்து
டிஜிட்டல் சொத்துகளை மாற்றும்போது செலுத்தப்படும் பணம் மீது 1% TDS விதிக்கப்படும்

5. நீண்ட கால சொத்துக்களுக்கும் 15% கூடுதல் கட்டணம்
நீண்ட கால மூலதன ஆதாயங்கள் அனைத்து சொத்துக்களுக்கும் 15% கூடுதல் கட்டணத்திற்கு உட்பட்டது என்றும் தற்போது, இது பட்டியலிடப்பட்ட பங்குகள் மற்றும் பரஸ்பர நிதிகளின் யூனிட்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். ''தற்போது பட்டியலிடப்பட்ட பங்கு மற்றும் ஈக்விட்டி ஃபண்டின் நீண்ட கால மூலதன ஆதாயத்தின் மீதான கூடுதல் கட்டணம் 15% ஆக உள்ளது, ஆனால் மற்ற LTCG க்கு மொத்த வருமானத்தின் அடிப்படையில் கூடுதல் கட்டணம் விதிக்கப்படுகிறது'' என்று வரி நிபுணர் பல்வந்த் ஜெயின் கூறினார். எல்லாம் சரிதான், ஆனால் தனி நபர் வருமான வரியில் இந்த பட்ஜெட்டிலும், எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பது, மாத சம்பளதாரர்களுக்கு பெரும் ஏமாற்றமான செய்தி என்பதுதான் உண்மை.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications