அன்று புறநானூறு.. திருக்குறள்.. இன்று மகாபாரதம் - பட்ஜெட் உரையில் மேற்கோள்காட்டி பேசிய நிதியமைச்சர்

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யும் போது மத்திய நிதி அமைச்சர்கள் திருக்குறள் தொடங்கி புறநானூறு பாடல் வரை மேற்கோள் காட்டி வாசிப்பார்கள்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பொருள் வரும் வழிகளை மென்மேலும் இயற்றலும், வந்த பொருள்களைச் சேர்த்தலும், காத்தலும், காத்தவற்றை வகுத்துச் செலவு செய்தலும், வல்லவன் அரசன் என்ற பொருள் தரும் திருக்குறளை கடந்த ஆண்டு மேற்கோள் காட்டி பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த ஆண்டு வரி செலுத்தும் அனைவருக்கும் நன்றி கூறினார் நிர்மலா சீதாராமன். மகாபாரதத்தில் வரும் சாந்திபருவத்தில் வரும் முக்கியமான வரிகளை மேற்கோள் காட்டி பேசினார்.

மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்வதை ஒட்டி, அதைப்பற்றிய எதிர்பார்ப்புகளும், விவாதங்களும் களைகட்டும். மாதச் சம்பளதாரர்கள், இந்த ஆண்டாவது தங்களின் வருமானத்தை மிச்சப்படுத்த வருமான வரியில் ஏதாவது சலுகைகள் கிடைக்குமா என்றும், தொழில்துறையினர் மற்றும் வர்த்தகப் பிரிவினர் தங்களுடைய தொழிலையும் வியாபாரத்தையும் விரிவுபடுத்த ஏதாவது ஸ்பெஷல் அறிவிப்பு வருமா என்றும் எதிர்பார்த்து காத்திருப்பதுண்டு.

வரிவிதிப்பு என்பது சங்ககாலம் தொட்டே இருந்து வருகிறது. ஆனால், ஒவ்வொரு ஆட்சி முறையிலும் ஒவ்வொரு விதமாக வரிவிதிப்பு முறை இருந்துவந்தது. ஆனாலும், அந்த வரிவிதிப்பு முறையானது மக்களை பாதிக்காத வகையிலேயே இருந்தது. ஒருவேளை மக்களை பாதிக்கும் வகையில் அன்றைய அரசர்கள் வரிகளை விதித்தாலும், அப்போது இருந்த புலவர்கள் மன்னரை இடித்துரைத்து, மக்களை பாதிக்காதவாறு பார்த்துக்கொண்டனர்.

வரி விதிப்பது ஏன்?

வரி விதிப்பது ஏன்?

வரிவிதிப்பு என்பது ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாததாகும். மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே வரிவிதிப்பு என்பது நடைமுறையில் இருந்து வந்தது. பொதுவாக அன்றைய காலத்தில் மக்கள் தங்களின் வருவாயை ஆறு பங்காக பிரித்து அதில் ஒரு பங்கை மன்னருக்கு வரியாக அளித்து வந்தனர். ஒருவேளை மக்கள் செலுத்தும் வரியானது அதிகமாக இருந்தால், அதை புலவர்களும் தட்டிக் கேட்டு, மன்னர்களை நல்வழிப்படுத்தினார்கள்.

சங்கப்பாடல்கள்

சங்கப்பாடல்கள்

காலப்போக்கில் தொடர்ந்து வந்த மன்னர்களும் ஓரளவுக்கு மக்களை பாதிக்காதவாறு வரிவிதிப்பு முறைகளை ஏற்படுத்தி நாட்டை வளப்படுத்தி வந்தனர். இதைத்தான், தற்போதை ஆட்சியாளர்களும் பட்ஜெட் உரையை தயாரிக்கும் போது பண்டைய தமிழகத்தில் இருந்த சங்ககாலப் புலவர்கள் எழுதிய பாடல்வரிகளை மேற்கோள் காட்டியே பட்ஜெட் உரையை வாசிக்கின்றனர். இது தமிழர்களாகிய நமக்குப் பெருமையே.

புறநானூறு சொன்ன நிர்மலா சீதாராமன்

புறநானூறு சொன்ன நிர்மலா சீதாராமன்

தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன் மத்திய நிதியமைச்சராக ஆனதில் இருந்து, தனது பட்ஜெட் உரையை வாசிக்கும் போது ஏதாவது ஒரு சங்ககாலப் பாடல் வரிகளை மேற்கோள்காட்டியே வாசித்து வருகிறார்.
மத்திய நிதியமைச்சர் கடந்த 2019ஆம் ஆண்டு தனது பட்ஜெட் உரையை வாசிக்கும்போது, புறநானூற்று பாடலாசிரியர் பிசிராந்தையார் எழுதிய பாடல்களில் ஒன்றை மேற்கோள் காட்டினார்.

காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே
மாநிறைவு இல்லதும் பன்னாட்கு ஆகும்
நூறு செறு ஆயினும் தமித்துப்புக்கு உணினே
வாய் புகுவதனினும் கால் பெரிதும் கெடுக்கும்

என்ற பாடல் வரிகளை மேற்காட்டினார். அதாவது ஒரு வயலில் விளைந்து முற்றி காய்ந்திருக்கும் நெல்லை அறுத்து அரிசி உணவாக கவளமாக்கி யானைக்கு தந்தால் அது பல நாட்களுக்கு வரும், மாறாக, அந்த நிலத்தில் யானையே புகுந்து கபளீகரம் செய்தால், அந்த யானையின் புகும் நெற்பயிரைக் காட்டிலும் அதன் காலில் மிதிபட்டு வீணாகும் நெல் அதிகமாகும், இந்த நெறிமுறையை அறிந்து நாடாளும் மன்னன் வரி வாங்கும்போது நாட்டின் செல்வ வளம் பெருகும் என்று அதற்கு விளக்கமளித்தார்.

அதே போல் கடந்த 2020ஆம் ஆண்டு பட்ஜெட் உரையை வாசிக்கும் போது, திருக்குறளில் உள்ள முக்கியமான பாடலை மேற்கோள் காட்டி பட்ஜெட் தாக்கல் செய்தார்.

அணியென்ப நாட்டிவ் வைந்து

அணியென்ப நாட்டிவ் வைந்து

என்ற குறளை வாசித்து, நோயில்லாதிருத்தல், செல்வம், விளைபொருள், வளம், இன்பவாழ்வு, நல்ல காவல் என இந்த ஐந்தும் நாட்டிற்கு மிக்க அழகாகும் என்று விளக்கம் அளித்தார்.

அதோடு, ஔவையாரின் ஆத்திசூடி என்ற நன்னெறியில் வரும் 'பூமி திருத்த உண்' என்ற வரியை மேற்கோள் காட்டி, விளைநிலத்தை உழுது அதில் பயிர் செய்து உண் என்று பொருள், அது போலத்தான் நமது மோடி அரசும் செயல்படுவதாக நிர்மலா சீதாராமன் கூறினார்.

கடந்த 2021ஆம் ஆண்டு பட்ஜெட் உரையை வாசிக்கும் போது, மீண்டும் திருக்குறளில் வரும் இறைமாட்சி என்னும் அதிகாரத்தில் உள்ள குறளை மேற்கோள் காட்டினார்.

Recommended Video

    Union Budget 2022: வரி குறையும் பொருட்கள் என்ன? | Oneindia tamil
    வகுத்தலும் வல்லது அரசு

    வகுத்தலும் வல்லது அரசு

    என்று கூறி, பொருள் வரும் வழிகளை மேன்மேலும் இயற்றலும், வந்த பொருட்களைச் பத்திரமாக சேர்த்தலும், காத்து அவற்றை முறையான வழிகளில் செலவு செய்தலும் வல்லவன் அரசன் என்று விளக்கம் அளித்தார். அதாவது, முன்கூட்டியே சரியாகத் திட்டமிடல், உற்பத்தி செய்தல், சேமித்தல், முதலீடு செய்தல் என இந்த நான்கையும் மன்னன் செய்ய வேண்டும் என்பதை இக்குறள் வலியுறுத்துகின்றது. அது மாதிரியே தமது மோடி அரசும் சரியாகத் திட்டமிட்டு வரி விதிப்பில் செயல்பட்டு வருவதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்

    இப்படி ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் உரையை வாசிக்கும் போது நிர்மலா சீதாராமன் சங்ககாலப் பாடல்களையும் திருக்குறளையும் மேற்கோள் காட்டி பட்ஜெட் உரையை முடித்தார். அதே போல் நடப்பு 2022ஆம் ஆண்டு பட்ஜெட் உரையை வாசிக்கும் போதும் நிச்சயமாக சங்ககாலப் பாடல் வரிகளையோ அல்லது திருக்குறளில் உள்ள பாடலையோதான் நிச்சயம் மேற்கோள் காட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் நிர்மலா சீதாராமன், இன்றைய தினம் பட்ஜெட் தாக்கல் செய்யும் போது வரி செலுத்தும் அனைவருக்கும் நன்றி கூறினார். மகாபாரதத்தில் வரும் சாந்தி பருவத்தில் உள்ள முக்கிய வரிகளை மேற்கோள் காட்டி பேசினார். மகாபாரதத்தில் வரும் சாந்திபருவத்தில் வரும் முக்கியமான வரிகளை மேற்கோள் காட்டி பேசினார். அஸ்தினாபுரத்தின் அரசனாகத் தருமருக்கு முடிசூட்டுவதும், புதிய அரசனுக்கு சமூகம், பொருளியல், அரசியல் ஆகியவை தொடர்பில் பீஷ்மர் வழங்கிய அறிவுரைகளும் இப் பருவத்தில் அடங்கியுள்ளன

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+