டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மத்திய பட்ஜெட் 2023..மாத சம்பளதாரர்களுக்கு ஸ்வீட் நியூஸ்..சாமானிய மக்களுக்கு என்னென்ன அறிவிப்புகள்

மத்திய பட்ஜெட்டில் மாத சம்பளதாரர்களின் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: 2024 லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக மோடி தலைமையிலான அரசாங்கத்தின் கடைசி முழு பட்ஜெட் இது என்பதால் சிறப்பான அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன வெளியிட்டுள்ளார். மத்திய பட்ஜெட்டில் புதிய வரிமுறைப்படி ரூ.7 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் வரி கட்ட வேண்டிய அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார். இதே போல தனி நபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு 2.50 லட்சத்தில் இருந்து 3 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளதால் மாத சம்பளதாரர்களுக்கு இனிப்பான அறிவிப்பாக உள்ளது.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை நாடாளுமன்ற லோக்சபாவில் பாஜக அரசின் 2023- 24ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பிரதமர் மோடி அரசில் நிதியமைச்சராக பொறுப்பேற்று 5வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த பட்ஜெட்டும் காகிதமில்லாமல் டிஜிட்டல் பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது.

Union Budget 2023: will the income tax exemption ceiling be raised?

2.5 லட்சத்தில் இருந்து 6 வருமான அடுக்குகளுடன் கூடிய புதிய தனிநபர் வருமான வரி முறையை 2020 இல் அறிமுகப்படுத்தினேன். இந்த ஆட்சியில் அடுக்குகளின் எண்ணிக்கையை 5 ஆக குறைத்து, வரி விலக்கு வரம்பை ரூ.3 லட்சமாக உயர்த்தி, வரி கட்டமைப்பை மாற்றியமைக்க முன்மொழிகிறேன் என்று தெரிவித்தார்.

புதிய வரி விதிப்பில் வருமான வரி அடுக்குகளில் மாற்றங்கள் மற்றும் வருமான வரி விலக்கு ரூ.7 லட்சமாக உயர்த்தப்படும் என அறிவித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், புதிய வரி விதிப்பு இனி இயல்புநிலை வரி விதிப்பாக இருக்கும் என்று கூறினார்.

ரூ 0-3 லட்சம் வரை வருமான வரி இல்லை. ரூ.3 லட்சத்துக்கு மேல் மற்றும் ரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 5% வரி விதிக்கப்படும். ரூ.6 லட்சத்துக்கு மேல் மற்றும் ரூ.9 லட்சம் வரை வருமானம் 10% வரி விதிக்கப்படும். ரூ.12 லட்சம் மற்றும் ரூ.15 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 20% வரி விதிக்கப்படும்.
ரூ.15 லட்சத்துக்கு மேல் வருமானம் இருந்தால் 30% வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Union Budget 2023: will the income tax exemption ceiling be raised?

கடந்த 9 ஆண்டுகளாக வருமான வரி விலக்கு உச்சவரம்பு இரண்டரை லட்சம் ரூபாயாக இருந்து வருகிறது. இதை உயர்த்த வேண்டும் என கடந்த பட்ஜெட்டிலேயே கோரிக்கை எழுந்தபோதும் உயர்த்தப்படவில்லை. மாத சம்பளதாரர்களின் வருமான வரி விலக்கு உச்சவரம்பை 5 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில் புதிய வரிமுறையை பின்பற்றுவோருக்கு ஆண்டுக்கு 7 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்கள் வரி கட்ட தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வரிமுறையில் கல்விக்கட்டணம், மருத்துவகட்டணம், காப்பீட்டுத்தொகை, வீட்டுக்கடன் போன்ற சலுகைகள் கிடையாது. கடந்த ஆண்டு 5 லட்சமாக இருந்த தனி நபர் உச்சவரம்பு இந்த ஆண்டு 7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு முறையும் பட்ஜெட்டில் தனி நபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பை 5 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என மாத சம்பளதாரர்கள் கோரிக்கை வைப்பது வழக்கமான ஒன்றாக உள்ளது. கடந்த 2020-21ம் ஆண்டு மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் வருமான வரி செலுத்துபவர்கள் புதிய வருமான வரி நடைமுறை அல்லது பழைய வருமான வரி நடைமுறை ஆகிய இரண்டில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.

வருமான வரிச்சட்டம் பிரிவு 87A-ன்படி, வரி செலுத்தவேண்டிய வருமானம் ரூ.3 லட்சம் வரை இருந்தால் 2,500 ரூபாய் தள்ளுபடி என்று இருந்ததை, ரூ.5 லட்சம் வரை இருந்தால் 12,500 ரூபாய் வரை தள்ளுபடி என்று மாற்றப்பட்டது. புதிய வரி நடைமுறையில், விடுப்பு பயண கொடுப்பனவு, வீட்டு வாடகை கொடுப்பனவு, பணியாளர் கொடுப்பனவு, குழந்தைகள் கல்வி கொடுப்பனவு போன்றவற்றுக்கு விலக்கு பெற முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

Union Budget 2023: will the income tax exemption ceiling be raised?

இன்றைய தினம் தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனிநபர் வருமான வரி அடுக்குகளில் பல்வேறு மாற்றங்களை அறிவித்தார். பட்ஜெட்டில் புதிய வரிமுறையை பின்பற்றுபவர்களுக்கு வருமான வரி விலக்கு உச்சவரம்பு 7 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. லோக்சபா தேர்தலுக்கு முன்னர் பிரதமர் மோடி தலைமையிலான அரசின் கடைசி முழு பட்ஜெட் இது என்பதால் மக்களை கவரும் வகையில் அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

இன்றைய அறிவிப்பின் படி தனிநபர்களுக்கு 3 லட்சம் ரூபாய் வரையிலும், 60 முதல் 80 வயது வரை உள்ளவர்களுக்கு 3 லட்சம் ரூபாய் வரையிலும், 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரையிலும் வரி செலுத்த தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
As this is the last full budget of the Modi-led government ahead of the 2024 Lok Sabha elections, Nirmala Sitharaman has made some great announcements. He mentioned in the Union Budget that people with income up to Rs.7 lakhs need to pay tax. This is a sweet and happy announcement for monthly salary earners.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X