டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கோவிட்ஷீல்ட் ரூ.780, கோவாக்சின் ரூ.1410.. தனியாருக்கான கொரோனா வேக்சின் விலை.. மத்திய அரசு நிர்ணயம்!

Google Oneindia Tamil News

டெல்லி: தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா தடுப்பூசி விலையை மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது. சர்வீஸ் சார்ஜுடன் கூடிய இறுதி விலையை மத்திய அரசு வெளியிட்டு இருக்கிறது.

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவசமாக வேக்சின் கொடுப்பதாகவும், இனிமேல் மத்திய அரசே தடுப்பூசிகளை வினியோக்கும், முழுமையாக மத்திய அரசே நடத்தும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கடும் விமர்சனங்களுக்கு பின் மத்திய அரசு தனது வேக்சின் கொள்கையை மாற்றியுள்ளது.

இன்னொரு பக்கம் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் வேக்சினில் 25% வேக்சினை தனியார் வாங்கிக்கொள்ள அனுமதி வழங்கபப்ட்டுளள்து. தனியார் மருத்துவமனைகளுக்கான வேக்சின் விலையை வேக்சின் நிறுவனங்கள் நிர்ணயிக்கும். இந்த வேக்சின் விலையோடு சேர்த்து தனியார் மருத்துவமனைகள் தங்கள் வேக்சின் விற்பனையில் 150 ரூபாய் மட்டுமே சர்வீஸ் சார்ஜ் விதிக்க முடியும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Union Government fixed maximum price for Covid dose vaccines in private hospitals

இந்த நிலையில் தற்போது தனியார் நிறுவனங்களுக்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வேக்சின் உற்பத்தி நிறுவனங்கள் கொடுத்த விலையின் அடிப்படையில் இந்த புதிய விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி கோவிட்ஷீல்ட் ரூ. 780, கோவாக்சின் ரூ. 1410, ஸ்புட்னிக் வி ரூ. 1145 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

இதில் கோவிட்ஷீல்ட் ரூ. 780 (உற்பத்தியாளர் விலை 600+ ஜிஎஸ்டி 30+ சர்வீஸ் சசர்ஜ் 150ரூபாய் ஆகும்), கோவாக்சின் ரூ. 1410 (உற்பத்தியாளர் விலை 1200 + ஜிஎஸ்டி 60+ சர்வீஸ் சசர்ஜ் 150ரூபாய் ஆகும்) , ஸ்புட்னிக் வி ரூ. 1145 (உற்பத்தியாளர் விலை 948+ ஜிஎஸ்டி 47.40-47+ சர்வீஸ் சசர்ஜ் 150 ரூபாய் ஆகும்) ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இது எல்லாம் ஒரு டோஸுக்கான விலை.

மத்திய அரசு வெளியிட்டு இருக்கும் இந்த பட்டியல் . சர்வீஸ் சார்ஜுடன் கூடிய இறுதி விலை பட்டியல் ஆகும். இதனால் இந்த விலையை விட கூடுதலாக எங்கும் வசூலிக்க கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கோவின் தளத்தில் இந்த புதிய விலை அப்டேட் செய்யப்படும்.

3 முறை அபார்ஷன்.. அடிக்கடி சாந்தினி வீட்டுக்கு போன மணிகண்டன்.. விரைவில் வாக்குமூலம்.. போலீஸ் தீவிரம்3 முறை அபார்ஷன்.. அடிக்கடி சாந்தினி வீட்டுக்கு போன மணிகண்டன்.. விரைவில் வாக்குமூலம்.. போலீஸ் தீவிரம்

இந்த விலை நிலவரத்தை மாநில அரசுகள் கண்காணிக்க வேண்டும். வேக்சின் உற்பத்தியாளர்களின் கோரிக்கை மற்றும் விலை நிலவரத்தை பொறுத்து எதிர்காலத்தில் வேக்சின் விலை மாற்றப்படலாம். விலை மாற்றப்படும் முன் முன்கூட்டியே அறிவிப்பு வெளியிடப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

English summary
Union Government fixed maximum price for Covid dose vaccines in private hospitals after releasing the new policy yesterday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X