கர்நாடகா, இமாச்சல், அஸ்ஸாம்-க்கு நிவாரண நிதியை அள்ளி தந்த மத்திய அரசு-தமிழகத்துக்கு 'சொற்பம்'தான்!
டெல்லி: மத்திய அரசு புயல் நிவாரண நிதியை கர்நாடகா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களுக்குதான் அதிக அளவில் வாரி கொடுத்திருக்கிறது; தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு பெரும் ஏமாற்றத்தைத் தரும் வகையில் சொற்ப நிதியைத்தான் தந்துள்ளது. ராஜ்யசபாவில் கேள்வி நேரத்தின் போது மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் இந்த புள்ளி விவரங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பது தமிழ்நாட்டை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ராஜ்யசபாவில் மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்தராய் நேற்று அளித்த பதில்: 2022-23, 2023-24-ம் ஆண்டுகளில் இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு நிவாரண நிதி வழங்கி இருக்கிறது.

கடந்த 2 ஆண்டுகளில்,
கர்நாடகா மாநிலத்துக்கு ரூ 941 கோடி வழங்க மத்திய குழு ஒப்புதல் அளித்தது. இதனடிப்படையில் கர்நாடகாவுக்கு ரூ939 கோடி நிவாரண நிதி வழங்கப்பட்டது.
இமாச்சல பிரதேசத்துக்கு ரூ873 கோடி வழங்க மத்திய குழு பரிந்துரைத்தது. இதனடிப்படையில் அம்மாநிலத்துக்கு ரூ812 கோடி வழங்கப்பட்டது.
அஸ்ஸாம் மாநிலத்துக்கு ரூ594 கோடி பரிந்துரைக்கப்பட்ட நிலையில் ரூ 160 கோடி மட்டும் வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டுக்கு ரூ267 கோடி
சிக்கிம் மாநிலத்துக்கு ரூ267 கோடி
நாகாலாந்து மாநிலத்துக்கு ரூ67 கோடி வெள்ள நிவாரண நிதி வழங்கப்பட்டது. இவ்வாறு மத்திய அமைச்சர் நித்யானந்த ராய் கூறினார்.
மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு சொற்பமான அளவுதான் வெள்ள நிவாரண நிதியை ஒதுக்கி இருப்பது பெரும் அதிர்ச்சிக்குரியதாக உள்ளது. கடந்த ஆண்டு புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு அரசு தற்காலிக மறுசீரமைப்புக்காகவு ரூ 7,033 கோடி; நிரந்தர மறுசீரமைப்பிற்காக ரூ12,659 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தது. இதற்கு முன்னர் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ37,907 கோடி வழங்க கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் மத்தியில் ஆளும் பாஜக அரசோ, இத்தனை ஆயிரம் கோடி ரூபாய் தேவை என ஒரு மாநில அரசு கேட்கும் நிலையில் மிக மிக சொற்பமாக வெறும் ரூ267 கோடியை மட்டுமே ஒதுக்கி இருப்பது தமிழ்நாட்டு மக்களுக்கு பேரிடி என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications