சமஸ்கிருதம் மொழி இல்லைங்க! அது ஒரு உணர்வு! அதற்கு எதற்கு ஆதாரம்? கேள்வி எழுப்பும் தர்மேந்திர பிரதான்
டெல்லி : சமஸ்கிருதம் என்பது ஒரு மொழி மட்டும் அல்ல அது ஒரு உணர்வு எனவும், சமஸ்கிருதத்தின் தோற்றம், நவீனம் மற்றும் விஞ்ஞானம் ஆகியவற்றிற்கு ஆதாரம் தேவையில்லை என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகத்தின் சார்பில் நாடு முழுவதும் சமஸ்கிருத மொழியை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் கர்ஷ் மஹோத்சவ் ஏற்பாடு செய்யப்பட்டு 3 நாட்களாக நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் நாடு முழுவதிலும் இருந்து தற்போது செயல்பட்டு வரும் 17 சமஸ்கிருத பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள், அந்த பேராசிரியர்கள் அறிஞர்கள் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

சமஸ்கிருதம் மாநாடு
இந்த நிலையில் மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகத்தின் வேந்தரும் மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சருமான தர்மேந்திர பிரதான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அரங்கில் இருந்த மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் உடையை உரையாற்றிய அவர் இந்தியாவின் பாரம்பரியம் கொண்ட ஒரு மொழி என்றால் அது சமஸ்கிருதம். சமஸ்கிருதம் என்பது ஒரு மொழி மட்டும் அல்ல அது ஒரு உணர்வு.

ஆதாரம் தேவையில்லை
இங்கே நிறைய பேர் சமஸ்கிருதத்தின் தோற்றம் மற்றும் பழமை குறித்துப் பேசுகிறார்கள். சமஸ்கிருதத்தின் தோற்றம் நவீன மற்றும் விஞ்ஞான ஆகியவற்றிற்கான ஆதாரம் தேவையில்லை. தேசிய கல்விக் கொள்கையின் படி சமஸ்கிருதம் இந்தி பிராந்திய மொழிகள் உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிகளுக்கும் அரசாங்கம் முக்கியத்துவம் அளிக்கும்.

இணைப்பதில் பெரும் பங்கு
பல்வேறு இந்திய மொழிகளில் ஒன்று நிற்பதில் சமஸ்கிருதம்தான் பெரும் பங்காற்றியுள்ளது சமஸ்கிருத பல்கலைக்கழகங்கள், வரும் காலங்களில் நிச்சயம் பெரிய பல துறைகளில் உயர் கல்வி நிறுவனங்களாக மாறும். நமது அறிவு ஞானம் செல்வம் உள்ளிட்டவற்றை உயர்த்தும் உன்னத பணி சமஸ்கிருதம் மூலம் மேற்கொள்ளப்படும் பல நூற்றாண்டுகளாக நமது நாகரீகத்தை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பு நாம் அனைவரும் மீது உள்ளது" என பேசினார்.
Recommended Video

மத்திய அரசு தீவிரம்
கடந்த சில நாட்களாகவே இந்தி தவிர்த்து சமஸ்கிருதத்தை மக்களிடையே கொண்டு செல்வதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. மருத்துவ மாணவர்கள் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்றதும் கூட இதன் ஒரு பகுதி என்பதும், நேற்று கூட இது குறித்து பேசிய பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, சமஸ்கிருதம் நம்மை இருளில் இருந்து ஒளிக்கு அழைத்துச் செல்லும் மொழி, சமஸ்கிருதம் ஒரு மொழி மட்டுமல்ல, அது சமூகத்தில் பல்வேறு நவீன முன்னேற்றங்களை அடைவதற்கான பாதை என்று குறிப்பிட்டது நினைவு கூறத்தக்கது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications