திரைப்படங்கள் குறித்த தேவையற்ற கருத்துக்கள் வேண்டாம்.. பாஜகவினரை பிரதமர் மோடி அறிவுறுத்தியதாக தகவல்
டெல்லி: திரைப்படங்கள் குறித்து சிலர் கருத்து கூறுகின்றனர். இது தொலைக்காட்சிகளிலும் ஊடகங்களிலும் நாள் முழுவதும் ஓடுகிறது. எனவே திரைப்படங்கள் குறித்து தேவையற்ற கருத்துக்கள் கூறுவதை தவிர்க்க வேண்டும் என பாஜகவினருக்கு பிரதர் மோடி செயற்குழு கூட்டத்தில் அறிவுறுத்தல் விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்தியில் ஆளும் பா.ஜ.கவின் தேசிய செயற்குழு கூட்டம், டெல்லியில் ஜனவரி 16, 17-ந்தேதிகளில் நடைபெறும் என்று அந்தக்கட்சி அறிவித்தது.
அதன்படி பாஜக தேசிய செயற்குழு கூட்டம் நேற்றும், நேற்று முன் தினமும் நடைபெற்றது. குஜராத்தில் பெற்ற வரலாற்று வெற்றிக்கு பிறகு நடைபெறும் தேசிய செயற்குழு கூட்டம் முக்கியத்துவம் பெற்றது.

தேசிய செயற்குழு கூட்டம்
டெல்லியில் நாடாளுமன்ற வீதியில் உள்ள புதுடெல்லி மாநகராட்சி கவுன்சில் கூட்ட மண்டபத்தில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் நாடு முழுவதும் இருந்து கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். 35 மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க. ஆளும் 12 மாநிலங்களின் முதல்வர்கள் 37 மாநில பா.ஜ.க. தலைவர்கள் கலந்துகொண்ட தேசிய செயற்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி நேற்று சிறப்புரை ஆற்றினார். அப்போது பிரதமர் மோடி பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.

பாஜக வெறும் அரசியல் இயக்கம் அல்ல
பிரதமர் மோடி பேசுகையில், இந்தியாவின் மிகச்சிறந்த சகாப்தம் இனிதான் வர உள்ளது. அதன் வளர்ச்சிக்கு நம்மை நாம் அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும். கிராமங்களில் குறிப்பாக எல்லையோர கிராமங்களில் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்த்தி நாம் அங்குள்ள மக்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும். அரசின் வளர்ச்சித் திட்டங்கள் அவர்களை சென்றடைய வைக்க வேண்டும். பாஜக வெறும் அரசியல் இயக்கம் அல்ல. அது ஒரு சமூக இயக்கம்" என்று பேசினார்.

தேவையற்ற கருத்துக்களை தவிர்க்க வேண்டும்
மேலும், திரைப்படங்கள் குறித்து தேவையற்ற கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என்றும் பிரதமர் மோடி கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக கட்சி வட்டாரங்கள் கூறுகையில், ''சில திரைப்படங்கள் குறித்து சிலர் கருத்து கூறுகின்றனர். இது தொலைக்காட்சிகளிலும் ஊடகங்களிலும் நாள் முழுவதும் ஓடுகிறது. எனவே திரைப்படங்கள் குறித்து தேவையற்ற கருத்துக்கள் கூறுவதை தவிர்க்க வேண்டும்" என்று பிரதமர் மோடி வலியுறுத்தி சொன்னதாக கூறப்படுகிறது.

தீபிகா படுகோனேவின் காவி உடை
ஷாருக்கான் நடிப்பில் வெளியாகியுள்ள பதான் படத்தில் இடம் பெற்றுள்ள பாடல் காட்சி ஒன்றில் தீபிகா படுகோனே அணிந்து இருந்த காவி உடை குறித்து சர்ச்சை கிளம்பியது. படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று சில பாஜக நிர்வாகிகள் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியிருந்தது நினைவுகூரத்தக்கது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications