டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமலாக்கத்துறை அதிரடி..விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி சொத்துகள்.. அரசு வங்கிகளுக்கு மாற்றம்

Google Oneindia Tamil News

டெல்லி; விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோரின் முடக்கப்பட்ட சொத்துக்கள் பொதுத்துறை வங்கிகளின் பெயருக்கு மாற்றம் செய்து அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தியாவில் மிகப் பெரியளவில் வங்கி மோசடி செய்துவிட்டு, வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்ற தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி ஆவர்.

இதில் விஜய் மல்லையா, நீரவ் மோடி ஆகியோர் தற்போது பிரிட்டன் நாட்டில் உள்ளனர். மெகுல் சோக்சி தற்போது டொமினிகாவில் உள்ளார்.

பொதுத்துறை வங்கிகளுக்கு மாற்றம்

பொதுத்துறை வங்கிகளுக்கு மாற்றம்

இவர்கள் மூவரையும் இந்தியாவுக்கு அழைத்து வரும் நடவடிக்கைகளில் மத்திய அரசின் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மூவரின் சொத்துகள் ஏற்கனவே முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முடக்கப்பட்ட இவர்கள் மூவரின் 8,441.50 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை பொதுத்துறை வங்கிகளின் பெயருக்கு மாற்றம் செய்து அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் 6600 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை எஸ்பிஐ வங்கிக்குச் சமீபத்தில்தான் மாற்றப்பட்டதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

 வெளிநாடுகளில் உள்ள சொத்துக்கள்

வெளிநாடுகளில் உள்ள சொத்துக்கள்

இதில் 969 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் வெளிநாடுகளில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த புதன்கிழமை விஜய் மல்லையாவுக்கு சொந்தமான யுனைடெட் ப்ரூவரிஸ் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகள் விற்பனை செய்யப்பட்டு 5824 கோடி ரூபாய் திரட்டப்பட்டது. மேலும் 800 கோடி ரூபாய் பங்கு விற்பனை மூலம் ஜூன் 25ஆம் தேதிக்குள் திரட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி ரூ 1,357 கோடி வங்கிகள் ரூபாயை மீட்டெடுத்துள்ளன. இதுவரை மோசடி செய்த தொழிலதிபர்களிடம் இருந்து ரூ 9,041.50 கோடியை பொதுத்துறை வங்கிகள் மீட்டெடுத்துள்ளன

 சொத்துக்கள் முடக்கம்

சொத்துக்கள் முடக்கம்

தற்போது வரை 18,170.02 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. இது இவர்கள் மூவரால் வங்கிகளுக்கு ஏற்பட்ட நஷ்டத்தில் 80% ஆகும். விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோரால் இந்திய வங்கிகளுக்கு மொத்தம் 22,585.83 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வங்கிக் கடன் மோசடிகள் தொடர்பாக சி.பி.ஐ.யும், அமலாக்கத் துறையும் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

Array

Array


இதில் கடந்த இரண்டு ஆண்டுகளாக லண்டன் சிறையில் உள்ள நீரவ் மோடி விரைவில் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தவும் லண்டன் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதனை பிரிட்டன் உயர் நீதிமன்றமும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இது தொடர்பாக அவர் பிரிட்டன் உள் துறை அமைச்சகத்தை நாடியுள்ளதால், அங்கு இது நிலுவையில் உள்ளது.

மெகுல் சோக்சி

மெகுல் சோக்சி

மற்றொரு வைர வியாபாரியான மெகுல் சோக்சி கரிபியன் நாடுகளில் ஒன்றான ஆன்டிகுவா நாட்டில் குடியுரிமை பெற்று, சில ஆண்டுகளுக்கு முன் அங்குத் தப்பியோடிவிட்டார். கடந்த வாரம் அவர் ஆன்டிகாவில் இருந்து கியூபாவுக்குத் தப்பிச் செல்ல முயன்றார். அப்போது மெகுல் சோக்சி டொமினிகா நாட்டில் கைது செய்யப்பட்டார். அவரை டொமினிக்காவில் இருந்து இந்தியாவுக்கு நேரடியாக நாடு கடத்தும் முயற்சியிலும் இந்தியா ஈடுபட்டுள்ளது.

English summary
Vijay Mallya, Nirav Modi, Mehul Choksi's Assets Worth ₹ 9,371 Crore Transferred To State-Run BanksEnforcement Directorate transfers Assets worth ₹ 9,371 crores belonging to fugitive businessmen Vijay Mallya, Nirav Modi, Mehul Choksi to state-run banks.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X