அந்தமான் தீவுக்கு விடுதலைப் புலிகள் மோதலில் வீரமரணம் அடைந்த மேஜர் ராமசாமி பெயரிட்ட பிரதமர் மோடி!
டெல்லி: அந்தமான் தீவுகளில் ஒன்றுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடனான மோதலில் வீரமரணம் அடைந்த தமிழரான ராணுவ வீரர் மேஜர் மேஜர் ராமசாமி பரமேஸ்வரன பெயரை சூட்டியுள்ளார் பிரதமர் மோடி.
பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம், அந்தமான் & நிக்கோபார் தீவுகளின் 21 பெரிய தீவுகளுக்குப் பரம் வீர் சக்ரா விருது பெற்ற 21 வீரர்களின் பெயர்களைச் சூட்டும் விழாவில் பங்கேற்றார். நிகழ்ச்சியின் போது, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவில் கட்டப்படவுள்ள நேதாஜிக்கு அர்ப்பணிக்கப்பட்ட தேசிய நினைவிடத்தின் மாதிரியையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

இந்தியாவின் சுதந்திரத்திற்கு பிறகு வரலாற்றின் பக்கங்களில் மறக்கப்பட்ட அதே நேதாஜி 21-ம் நூற்றாண்டில் நினைவு கூறப்படுவதாக பிரதமர் குறிப்பிட்டார். அந்தமானில் முதன்முறையாக மூவர்ணக்கொடியை நேதாஜி ஏற்றிய அதே இடத்தில் இன்று, இந்திய கொடி வானுயரப் பறப்பதாக அவர் எடுத்துரைத்தார். இது இந்த பகுதிக்கு வரும் அனைத்து மக்களின் இதயங்களிலும் தேசபக்தியை நிரப்பும் என்று அவர் தெரிவித்தார். அவரது நினைவாக கட்டப்படும் புதிய அருங்காட்சியகம் மற்றம் நினைவகம் அந்தமானுக்கு சுற்றுலா செல்பவர்களுக்கு மேலும் நினைவில் அமையக் கூடியதாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார். 2019-ம் ஆண்டில் தில்லி செங்கோட்டையில் நேதாஜி அருங்காட்சியகம் திறக்கப்பட்டதை குறிப்பிட்ட பிரதமர், அந்த இடம் மக்களுக்கு உத்வேகம் அளிக்கும் இடமாக உள்ளது என்று கூறினார். அவரது 125-வது பிறந்த தினத்தையொட்டி வங்காளத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றதாக தெரிவித்த அவர், அந்த தினம் பராக்கிரம தினமாக அறிவிக்கப்பட்டது என்று கூறினார். வங்காளம் முதல் தில்லி வரையிலும், தில்லி முதல் அந்தமான் வரையிலும், நாட்டின் அனைத்து பகுதிகளும் நேதாஜியின் மரபைப் போற்றி வணங்குவதாக பிரதமர் குறிப்பிட்டார்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பான பணிகள் சுதந்திரத்திரத்திற்குப் பிறகு, உடனே விளக்கியிருக்க வேண்டும் என்று கூறிய பிரதமர், கடந்த 8-9 ஆண்டுகளில் அவர்கள் அப்பணியை செய்ததாகக் கூறினார். 1943-ம் ஆண்டு நாட்டின் இந்தப்பகுதியில் சுதந்திர இந்தியாவின் முதலாவது அரசு அமைக்கப்பட்டதாக குறிப்பிட்ட அவர், நாடு அதிகப் பெருமையுடன் இதை ஏற்றுக் கொண்டதாகத் தெரிவித்தார். ஆசாத் ஹிந்த் அரசு அமைக்கப்பட்டதன் 75 ஆண்டு நிறைவையொட்டி செங்கோட்டையின் கொடி ஏற்றப்பட்டு நேதாஜிக்கு மரியாதை செலுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார். பல ஆண்டுகளாக நேதாஜியின் வாழ்க்கை முறை குறித்து கோப்புகளை வகைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை குறித்து குறிப்பிட்ட பிரதமர், அப்பணி முழு அர்ப்பணிப்புடன் நிறைவு செய்யப்பட்டதாக கூறினார். இன்று நமது ஜனநாயக அமைப்பிற்கு முன்பாக நேதாஜியின் சிலை மற்றும் கடமைப்பாதை அமைந்துள்ளது, நமது கடமைகளை அவை நினைவுப்படுத்துவதாக தெரிவித்தார்.

மேலும் மேஜர் சோம்நாத் ஷர்மா, பிரு சிங், மேஜர் ஷேத்தன் சிங் முதல் கேப்டன் மனோஜ் பாண்டே, சுபேதர் ஜோகிந்தர் சிங், நாயக் ஆல்பர்ட் ஏக்கா வரையும், வீர் அப்துல் ஹமித், மேஜர் ராமசாமி பரமேஸ்வரன், முதல் அனைத்து 21 பரம் வீரர்களும், தேசமே முதன்மை, இந்தியாவே முதன்மை என்று உறுதிபூண்டிருந்ததாகவும் பிரதமர் மோடி கூறினார்.
அந்தமான் தீவுகளில் ஒன்றுக்கு பிரதமர் மோடி சூட்டிய பெயர் மேஜர் ராமசாமி பரமேஸ்வரன் தீவு. 1987-ம் ஆண்டு இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் இந்திய அமைதிப் படைக்கும் இடையேயான யுத்தத்தில் வீர மரணம் அடைந்தவர் மேஜர் ராமசாமி பரமேஸ்வரன். அவரது பெயரைத்தான் அந்தமான் தீவுகளில் ஒன்றுக்கு சூட்டியுள்ளார் பிரதமர் மோடி. இனி இந்த தீவுகள் ராமசாமி தீவுகள் என அழைக்கப்படும்.
டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவுச்சின்னம் வளாகத்தில் பரம் வீர் சக்கரம் விருது பெற்றவர்களுக்கான வரிசையில் மேஜர் ராமசாமி பரமேஸ்வரனின் மார்பளவுச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications