தங்கம் விலை முதல் வருமான வரி விலக்கு வரை.. ‛டாப்’ 6 எதிர்பார்ப்பை நிறைவேற்றாத மத்திய பட்ஜெட்
டெல்லி: 2026-27ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்பதால் நாட்டு மக்கள் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்நிலையில் தான் பட்ஜெட் அறிவிப்பில் தங்கம் விலை குறைப்பு முதல் வருமான வரி விலக்கு என மொத்தம் ’டாப்’ 6 எதிர்பார்ப்புகளும் பொய்த்துப்போய் உள்ளது.
நம் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 1ம் தேி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று 2026-27 ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று காலை 11 மணிக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
பல்வேறு புதிய அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். துறை வாரியாக ஒதுக்கப்பட்ட நிதி குறித்தும் அறிவித்தார். மேலும் வருமான வரியில் மேற்கொள்ளப்படும் சீர்த்திருத்தம் பற்றியும் விளக்கியிருந்தார். இது நிர்மலா சீதாராமன் தொடர்ச்சியாக தாக்கல் செய்யும் 9-வது பட்ஜெட்டாகும்.

பொய்த்துப்போன 6 எதிர்பார்ப்பு
இதன்மூலம் இந்தியாவில் அதிக பட்ஜெட் தாக்கல் செய்த நபர்களின் பட்டியலில் ப சிதம்பரத்துடன் 2வது இடத்தை நிர்மலா சீதாராமன் பகிர்ந்து கொள்ள உள்ளார். இந்த பட்டியலில் 10 பட்ஜெட்டுடன் மொராஜி தேசாய் முதலிடத்தில் உள்ளார். இந்நிலையில் தான் இன்று தாக்கலான பட்ஜெட்டில் மக்கள் எதிர்பார்த்த டாப் 6 விஷயங்கள் பொய்த்துப்போயின. அதுபற்றி பார்க்கலாம்.
வருமான வரி விலக்கு இல்லை
* கடந்த முறை பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு (புதிய வருமான வரி திட்டம்) ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டது. நிலைக்கழிவு ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.75 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. இதனால் ஓராண்டு வருமான ரூ.12.75 லட்சமாக இருந்தால் வருமான வரி செலுத்த தேவையில்லை என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று அதன் உச்சவரம்பு அதிகரிக்குமா என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதனால் அதேநிலை தொடர்கிறது. இதன்மூலம் வருமான வரி விலக்கின் உச்ச வரம்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு இது ஏமாற்றமாவே அமைந்துள்ளது.
தங்கம் இறக்குமதி வரி குறைப்பு இல்லை
* தங்கம் - வெள்ளி விலைகள் கிடுகிடுவென அதிகரிக்கப்பட்டுள்ளது. தங்கம் ஏழைகளுக்கு எட்டாத நிலையில் உள்ளது. அதேபோல் தான் நாள்தோறும் வெள்ளி விலை உச்சமடைந்து வருகிறது. இந்நிலையில் தான் தங்கம், வெள்ளி விலையை குறைக்கும் வகையில் அதன் இறக்குமதியின் மீது விதிக்கப்படும் சுங்க வரி குறைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
தற்போது தங்கம் மீதான இறக்குமதி வரி 6 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இதனை குறைத்தால் தங்கத்தின் விலை ஓரளவு சரியும். இதனால் மக்கள் இந்த அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்படவில்லை. அப்படியே தொடர்கிறது. இதனால் தங்கம் விலை சரிவு என்ற எதிர்பார்ப்பு பொய்த்துப்போனது.
விவசாயிகள் ஏமாற்றம்
* விவசாயிகளுக்கு பிஎம் கிசான் சம்மன் நிதி என்ற திட்டத்தின் கீழ் ஒவ்வொரு 4 மாதங்களுக்கு ஒருமுறை ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதி ரூ.9 ஆயிரமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தது. இதுபற்றிய அறிவிப்பு இன்றைய பட்ஜெட்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது நடக்கவில்லை.
தமிழகத்துக்கு திட்டங்கள்
* தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தமிழக வாக்காளர்களை கவர புதிய திட்டங்களும், தமிழ்நாட்டுக்கு என்று பிரத்யேக திட்டங்களும் வெளியாகுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் பெரிய அளவில் திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை. ஹைதராபாத் - சென்னை, சென்னை - பெங்களூர் இடையே அதிவிரைவு ரயில் வழித்தடம் அமைக்கப்படும்.
தமிழ்நாட்டில் கனிம காரிடார் அமைக்கப்படும். தமிழகத்தில் தொல்லியல் ஆய்வு இடமான ஆதிச்சநல்லூரில் சுற்றுலா கலாச்சார மையம் அமைக்கப்படும். பொதிகை மலையில் மலையேற்ற சுற்றுலாவை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆந்திரா-தமிழக எல்லையில் அமைந்துள்ள பழவேற்காடு ஏரி பறவைகள் சரணாலயத்தை பார்வையிட சுற்றுலாவை மேம்படுத்த திட்டம் என்பது மட்டுமே தனி அறிவிப்பாக வந்தன. இது ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
வெளிநாட்டு பாதிப்பை சரிசெய்ய..
* அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரி விதிப்பால் நம் நாட்டின் ஜவுளி, கடல் உணவு பொருட்கள், ஆபரணங்கள் சார்ந்த தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த துறையை சேர்ந்தவர்கள் அரசின் சலுகைகளை எதிர்பார்த்தனர். அதில் ஜவுளி, கண்டெய்னர் உற்பத்தி போன்ற துறைகளில் உற்பத்தியை ஊக்குவிக்க பூங்காக்கள், உயிரி மருத்துவ பூங்கா, உற்பத்தி மண்டலங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகின. ஆனால் கடல் உணவு பொருட்கள், ஆபரணங்கள் தொழில் சார்ந்து அறிவிப்புகள் வரவில்லை.
* அதேபோல் இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால் ஐரோப்பிய ஒன்றியத்தில் இறக்குமதி செய்யப்படும் கார்கள் மீதான தற்போதைய வரி சுமார் 110% ஆக இருப்பது காலப்போக்கில் 10 சதவீதமாக குறையும். இது நம் நாட்டின் வாகன உற்பத்தியாளர்களை பாதிக்க வாய்ப்புள்ள நிலையில் அதற்கான நிவாரணமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications