முதுகில் குத்திய உக்ரைன்! இந்தியாவுக்கு எதிராக திரும்பிடுச்சே.. பெரிதாக நீளும் லிஸ்ட்! பகீர் பின்னணி
டெல்லி: இந்தியா மீது கூடுதல் வரி விதிக்கும் அமெரிக்காவுக்கு உக்ரைன் ஆதரவு தெரிவித்துள்ளது. அதாவது இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை உக்ரைன் எடுத்திருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் பல நாடுகள் பல்வேறு காரணங்களால் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போரைக் காரணமாகச் சொல்லி இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா 50% வரி விதித்தது. இதற்கிடையே இந்த வரிக்கு உக்ரைனும் கூட ஆதரவளித்துள்ளது. அதாவது ரஷ்யாவிடம் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்குக் கூடுதல் வரி விதித்தாலும் அதற்கு உக்ரைன் ஆதரவளிக்கும் என உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்.. கடந்த காலங்களில் இந்தியாவின் நட்பு நாடாக இருந்த உக்ரைனும் இப்போது இந்தியாவுக்கு எதிராகத் திரும்பியுள்ளது.

இந்தியாவுக்கு எதிராக
ஆனால், உண்மையில் புவிசார் அரசியல் காரணங்களால் கடந்த சில ஆண்டுகளில் பல நாடுகள் இந்தியாவுக்கு எதிராகத் திரும்பியுள்ளன. அமெரிக்கா, வங்கதேசம், நேபாளம், துருக்கி மற்றும் அஜர்பைஜான் எனப் பல நாடுகளைச் சொல்லலாம். இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்.
அமெரிக்கா
அமெரிக்கா இந்தியா இடையே கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நல்லுறவே இருந்தது. டிரம்ப் இதற்கு முன்பு அதிபரான சமயத்திலும் கூட இந்தியாவுடன் சிறப்பான உறவையே கொண்டிருந்தார். ஆனால், இந்த முறை அவர் தொடர்ச்சியாக மோதல் போக்கை கொண்டிருக்கிறார். இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தில் சிக்கல், ரஷ்ய எண்ணெய்யை இந்தியா வாங்குவது உள்ளிட்ட காரணங்களால் இந்தியா மீது அவர் 50% வரி விதித்தார்.
மேலும், அமெரிக்க விசாவுக்கான கட்டுப்பாடுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுபோல இந்தியா மீது சமீப காலங்களில் அவர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளார். இது இந்தியா அமெரிக்கா உறவையும் வர்த்தகத்தையும் கடுமையாகப் பாதித்துள்ளது.
வங்கதேசம்
அடுத்து வங்கதேசம்.. 2024 வரை இந்தியா வங்கதேச உறவு சீராகவே இருந்தது. அப்போது பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவுக்கு எதிராகப் போராட்டம் வெடித்த நிலையில், அவர் நாட்டை விட்டு வெளியேறினார். அதன் பிறகு இரு நாட்டு உறவுகள் மோசமடைந்தன. முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு, இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்தியா வங்கதேச எல்லையில் இருந்த லேண்ட் போர்ட்கள் மூடப்பட்டன. மேலும், சீனாவுடன் நெருக்கம் காட்டவும் தொடங்கியது. இது மட்டுமின்றி நமது வடகிழக்கு மாநிலங்கள் குறித்து யூனுஸின் கருத்துக்களும் விரிசல் விரிவடையக் காரணமாக இருந்தது.
1971இல் பாகிஸ்தானில் இருந்து சுதந்திரம் பெற்றபோது இந்தியாவின் வங்கதேசத்திற்கு ஆதரவு இருந்தது. அப்போது முதலே இந்தியாவுக்கும் பங்களாதேஷுக்கும் இடையே வலுவான உறவுகள் இருந்தன. ஆனால், ஹசீனாவின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் இந்தியா உடனான உறவை கடுமையாகப் பாதித்துள்ளது.
நேபாளம்
அதேபோல நேபாளம் இந்தியா உறவும் சமீப காலங்களில் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அந்நாட்டின் பிரதமர் ஷ்ரமா ஒலி கூறும் கருத்துகளே இதற்குப் பிரதான காரணம். இந்தியா குறித்த அவரது கருத்துகள் சர்ச்சையைக் கிளப்பின. "இந்திய வைரஸ்" வுஹான் வைரஸை விட ஆபத்தானது என்றும் இந்து கடவுளான ராமர் இந்தியர் அல்ல, நேபாளத்தை சேர்ந்தவர் என்றும் சர்மா கூறியது சர்ச்சையானது.
இது மட்டுமின்றி கலாபானி, லிம்பியாதுரா மற்றும் லிபுலேக் போன்ற இந்தியப் பகுதிகள் தன்னுடைய நாட்டிற்குச் சொந்தமானவை என நேபாளம் உரிமை கோரியது. மேலும், சில இந்திய ஊடகங்களுக்கும் நேபாளம் தடை விதித்தது. இது இரு நாட்டு உறவைப் பாதித்தது.
இலங்கை
நமது மற்றொரு அண்டை நாடான இலங்கையும் கூட கடந்த சில ஆண்டுகளாகவே இலங்கை ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை இலங்கை எடுக்கவில்லை என்ற போதிலும், சீனாவுடன் நெருக்கம் காட்டி வருகிறது. இந்தியா பல உதவிகளைச் செய்தாலும் கூட அதையும் தாண்டி சீனாவுக்கு நெருக்கம் காட்டி வருகிறது.
துருக்கி
அதேபோல துருக்கியையும் நாம் சொல்லலாம்.. கடந்த மே மாதம் இந்தியப் பாகிஸ்தான் மோதலின் போது இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டைத் துருக்கி எடுத்தது. துருக்கி பாகிஸ்தானுக்கு ஆதரவளித்ததுடன், காஷ்மீர் குறித்தும் சர்ச்சை கருத்தைக் கூறியது. இந்தியாவுக்குச் சொந்தமான பகுதியைப் பாகிஸ்தான் அத்துமீறி உரிமை கொண்டாடும் நிலையில், அதற்குத் துருக்கி ஆதரவு அளித்தது சர்ச்சையானது. முஸ்லீம் மக்கள் அதிகம் கொண்ட துருக்கி, அதன் பிறகு இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டுள்ளது.
துருக்கியை போலவே அஜர்பைஜானும் அதே நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இந்திய-பாகிஸ்தான் மோதலின் போது, பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தது. காஷ்மீர் குறித்த பாகிஸ்தானின் நிலைப்பாட்டிற்கு ஆதரவு அளித்த அஜர்பைஜான், இந்தியாவுக்கு எதிரான கருத்துகளையும் கூறி வந்தது. இப்படி சமீபத்திய ஆண்டுகளில் மட்டும் பல நாடுகள் இந்தியாவுக்கு எதிராகத் திரும்பியுள்ளது. இந்தச் சூழலில் தான், அந்த லிஸ்டில் இப்போது உக்ரைனும் இணைந்துள்ளது.












Click it and Unblock the Notifications