'பாக்கெட் பாலில் தண்ணீர் கலந்தோம்'.. 10 ஆண்டு தவத்திற்குப் பின் கிடைத்த மழலை இந்தூரில் மௌனமானது
போபால்: "பத்து வருடம் கழித்து கடவுள் எங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தார்... அப்புறம் அவரே அதைப் பறித்துக்கொண்டுவிட்டார்," என்று இந்த வார்த்தைகளையே மீண்டும் மீண்டும் முணுமுணுத்தபடி, இந்தூர் பாகீரத்புராவின் ஒரு குறுகிய சந்தில் ஒரு முதியவர் அமைதியாக அழுதுகொண்டிருந்தார். அவருக்கு முன்னால் உள்ள அறையில் ஒரு சிறிய மெத்தை இருக்கிறது. அந்த வீட்டில் எந்த சத்தமும் கேட்கவில்லை.. மனதில் நீக்கவே முடியாத ஆற்ற முடியாத நிசப்தம் தான் நிலவுகிறது.
அதே வீட்டின் ஒரு மூலையில் ஒரு தாய் அமர்ந்துள்ளார. அவரது உடலில் தாய்ப்பால் சுத்தமாக சுரக்கவில்லை. ஆனால் அவருக்கு எந்த நோயும் இல்லை.. ஒரு உயிரியல் யதார்த்தம் மட்டுமே. மருத்துவரின் அறிவுரைப்படி, தனது பால்வடியும் பாலகனுக்கு பாக்கெட் பாலுடன் சிறிது குழாய் நீர் கலந்து கொடுத்தார். எந்தத் தண்ணீரை அந்தக் குடும்பம் நம்பியதோ, அதே தண்ணீர் விஷமாக மாறியிருக்கிறது. ஐந்து மாதக் குழந்தையான அவ்யான்.. இப்போது உயிருடன் இல்லை.

அசுத்தமான குடிநீர்
இந்தூரின் பாகீரத்புரா பகுதியில் அசுத்தமான குடிநீரைப் பருகியதால் பல பேர் உயிரிழந்திருக்கிறார். வீசும் காற்று டெல்லி மக்களை கொஞ்சம் கொஞ்சமாக காலி செய்து வரும் நிலையில், மத்திய பிரதேசத்தின் இந்தூரில் குடிக்கும் தண்ணீரே விஷமாகி உள்ளது. அசுத்தமான நர்மதை ஆற்று நீரை பருகியதால் பலர் உயிருடன் இல்லை
தவமாய் தவமிருந்து பெற்ற குழந்தை
ஐந்து மாத பாலகனான அவ்யானின் தந்தை சுனில் சாஹு, ஒரு தனியார் கூரியர் நிறுவனத்தில் தினசரி கூலை வேலை செய்து வருகிறார். பல ஆண்டு காலம் கடவுளிடம் வேண்டி, தவமாய் தவமிருந்து குழந்தை பெற்றுள்ளார். தங்கள் குழந்தை அவ்யானை தெய்வமே தங்களுக்கு குழந்தை வரம் தந்ந்தாக கருதி மகிழ்ச்சியாக இருந்தார்கள். ஜூலை 8-ஆம் தேதி அவ்யான் பிறந்தான் - அவர்களின் மகள் கிஞ்சல் பிறந்து பத்து ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த குழந்தை அவன்.
நிலைமை மோசம்
குழந்தை ஆரோக்கியமாகத்தான் இருந்தான். எந்த நோயும் இல்லை. ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்பு, அவ்யானுக்கு காய்ச்சலும் வயிற்றுப்போக்கும் ஏற்பட்டுள்ளது. மருத்துவரிடம் அழைத்துச் சென்று மருந்துகள் கொடுக்கப்பட்டன, ஆனால் அவனது நிலைமை மோசமடைந்து கொண்டே சென்றுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு குழந்தை அவ்யானின் நிலைமை கவலைக்கிடமானது. திங்கள்கிழமை காலை மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவ்யான் பரிதாபமாக உயிரிழந்தான்.
தண்ணீர் மோசம்
தண்ணீரால் தான் இந்த நோய் ஏற்பட்டது என்று அந்தக் குடும்பம் உறுதியாக நம்புகிறது. தண்ணீர் அசுத்தமாக இருப்பது பற்றி யாரும் தங்களுக்குச் சொல்லவில்லை என்று அவ்யானின் தந்தை சுனில் கண்ணீர் மல்க செய்தியாளரிடம் கூறினார். அவர்கள் தண்ணீரை வடிகட்டி, படிகாரம் (alum) சேர்த்து தற்காப்பு நடவடிக்கைக்கு பின்னரே குடித்து வந்துள்ளனர். அந்தப் பகுதி முழுவதும் அதே குடிநீரைத்தான் குடிக்க பயன்படுத்தியது. குடிநீர் அசுத்தம் தொடர்பாக எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை, எந்த அறிவுறுத்தலும் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
பாலில் தண்ணீர்
இதுபற்றி சுனில் கூறுகையில், "நாங்கள் பாலில் கலந்த தண்ணீரே அவனுக்குத் தீங்கு விளைவித்தது என்று நான் நம்புகிறேன். என் மனைவிக்கு தாய்ப்பால் சுரக்காததால், மருத்துவர்கள் அறிவுறுத்தியபடி பாக்கெட் பாலில் தண்ணீர் கலந்து கொடுத்தோம். நாங்கள் நர்மதா ஆற்று நீர் வரும் குழாய் நீரைப் பயன்படுத்தினோம்.
வயிற்றுப்போக்கு
அது இவ்வளவு மாசடைந்திருக்கும் என்று நாங்கள் கற்பனை கூட செய்தது இல்லை. எங்கள் குழந்தை அவ்யானுக்கு இரண்டு நாட்களாக வயிற்றுப்போக்கு இருந்தது. நாங்கள் மருந்து கொடுத்தோம். பின்னர் திடீரென்று அவன் சுருண்டு விழுந்தான். பின்னர் தான் இங்குள்ள மக்கள் எங்களுக்கு தண்ணீர் அசுத்தம் பற்றிய உண்மையைச் சொன்னார்கள்" இவ்வாறு சுனில் கூறினார்.
கடவுள் பறித்துக் கொண்டார்
பேசுதற்கு முடியாமல், எச்சிலை விழுங்க முடியாமல் மெல்லிய குரலில் பேசிய சுனிலின் தாய், நாங்கள் ஏழைகள். என் மகன் தனியார் கூரியரில் கூலி வேலைக்கு போகிறேன். அவனது சம்பளம் தான் வீடு ஓடுகிறது. நாங்கள் யாரையும் குற்றம் சொல்ல முடியாது. கடவுள் எங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தார்... பிறகு அவரே அதைப் பறித்துக்கொண்டார்," என்றார் வேதனையுடன்.
தாயின் நிலை என்ன
வீட்டிற்குள், குழந்தையின் தாய் அவ்வப்போது மயக்கமடைந்து விழுந்ததை காண முடிந்தது. பின்னர் உணர்வு பெற்று எழுகிறார். அவரது பத்து வயது மகள் கிஞ்சல், சரிசெய்ய முடியாத ஒன்று உடைந்துவிட்டது என்பதைப் புரிந்துகொண்டவள் போல மௌனமாக அமர்ந்திருந்தாள்.
தூய்மை நகரத்தின் கதை
இது அவ்யான் சாஹுவின் கதை மட்டுமல்ல. தாய்ப்பால் இல்லை என்றாலும் நம்பிக்கையை வைத்திருந்த ஒரு தாயின் கதையாகும். வார்த்தைகள் இன்றி கண்ணீர் மட்டுமே கொண்ட ஒரு பாட்டியின் கதையாகும். தன்னைத் தூய்மையான நகரம் என்று அழைத்துக்கொள்ளும், ஆனால் அதன் மௌனமே அதன் ஆழமான கறையாக மாறியுள்ள இந்தூர் நகரத்தின் கதையாகும். அரசியல்வாதிகள், உள்ளூர் மாநகராட்சி அதிகாரிகள், தண்ணீரைசுத்தமாக பராமரித்து அனுப்ப வேண்டிய நபர் என எல்லாருக்குமே இதில் பொறுப்பு உள்ளது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications