டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திடீரென உள்ளே வந்த அதானி.. டக்கென யோசிக்கும் அம்பானி! 20 ஆண்டுகளில் முதல்முறை! மோதும் ஜாம்பவான்கள்

Google Oneindia Tamil News

டெல்லி: கடந்த ஜூன் மாதம் 5ஜி ஏலம் தொடர்பாக முக்கிய தகவல் ஒன்று வெளியான போது, முகேஷ் அம்பானி திடீரென சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் இப்போது பெரும்பாலும் அனைத்து ஊர்களுக்கும் 4ஜி சென்று விட்டது. அதிலும் ஜியோ வருகை, டெலிகாம் துறையையே புரட்டிப் போட்டுவிட்டது.

அடுத்த கட்டமாக 5ஜி தொழில்நுட்பத்தை சில ஆண்டுகளுக்கு முன்னரே நாட்டில் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு இருந்தது. இருப்பினும், கொரோனா உள்ளிட்ட பல காரணங்களால் 5ஜி ஏலம் தாமதம் ஆனது.

உஷார்.. நெல்லை, குமரி, தென்காசி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. 3 நாட்களுக்கு கன மழை வெளுக்கும் உஷார்.. நெல்லை, குமரி, தென்காசி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. 3 நாட்களுக்கு கன மழை வெளுக்கும்

 5ஜி தொழில்நுட்பம்

5ஜி தொழில்நுட்பம்


நீண்ட தாமதத்திற்குப் பின்னர், சமீபத்தில் தான் 5ஜி ஏலம் நடைபெற்றது. இந்தச் சூழலில் கடந்த ஜூன் மாதம் 5ஜி ஏலம் தொடர்பாக முக்கிய தகவல் வெளியான போது, முகேஷ் அம்பானி திடீரென இக்கட்டான சூழலுக்குத் தள்ளப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மற்ற நிறுவனங்களை விட வேகமாக வளர்ந்த ஜியோ நிறுவனம், மேலும் வேகமாகத் தனது பயனாளர்களை அதிகப்படுத்தத் திட்டமிட்டு இருந்தது. இதற்காக வெளிநாட்டு நிறுவனம் ஒன்றை வாங்குவது குறித்து அம்பானி தீவிரமாக ஆலோசித்து வந்தார்.

 அதானி

அதானி

அந்த சமயத்தில் தான் 5ஜி ஏலத்தில் அதானி பங்கேற்க உள்ளதாகத் தகவல் வெளியானது. சமீபத்தில் தான் ஆசியாவில் மிகப் பெரிய பணக்காரர் என்ற பெயரை அம்பானியிடம் இருந்து தட்டிப் பறித்தார். அம்பானியின் ஜியோ நிறுவனம் தான் இப்போது நாட்டில் டெலிகாம் சந்தையில் முன்னணியில் இருக்கிறது. அதே சமயம் அதானி குழுமத்திற்கு டெலிகாம் உரிமம் கூட இல்லை. இருப்பினும், அவர் 5ஜி ஏலத்தில் பங்கேற்பதே அம்பானியின் டேட்டா குறித்த கனவுக்கு எச்சரிக்கை விடுப்பதாக அமைந்தது.

 தீவிர ஆலோசனை

தீவிர ஆலோசனை

ஒரு தரப்பினர் அந்த வெளிநாட்டு நிறுவனத்தை வாங்கலாம் என்றும் மற்றொரு தரப்பினர் இப்போதைய சூழலில் நிதியைக் கையில் வைத்து இருக்கவும் ஆலோசனை அளித்து உள்ளனர். இரு தரப்பு அறிவுரையையும் கேட்ட அம்பானி, இறுதியாக அந்த வெளிநாட்டு நிறுவனத்தை வாங்க வேண்டாம் என முடிவெடுத்துவிட்டாராம். அதானி முழு வீச்சில் இந்தியா டெலிகாம் துறையில் நுழைந்தால், அதை எதிர்கொள்ள நிதி வேண்டும் என்பதாலேயே இந்த முடிவாம்.

 அதானி விளக்கம்

அதானி விளக்கம்

ஆனால், டெலிகாம் சேவையில் நேரடியாக நுழையும் திட்டம் எதுவும் இல்லை என்றே அதானி தரப்பில் கூறப்பட்டது. தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் துறைமுகம் மற்றும் விமான நிலையங்களை ஒரே நெட்வோர்க்கில் கொண்டு வரவே 5ஜி அலைக்கற்றையை வாங்குவதாக அதானி தரப்பில் கூறப்படுகிறது. இருப்பினும், அதானியின் நிலைப்பாடு எப்போது வேண்டுமானாலும் மாறலாம் என்றும் அவர்கள் மிக விரைவிலேயே டெலிகாம் துறையில் நுழையும் வாய்ப்பு அதிகம் என்றே துறை சார்ந்த வல்லுநர்கள் குறிப்பிடுன்றனறர்.

 இருவேறு பிளான்

இருவேறு பிளான்

அம்பானி, அதானி என இருவருமே பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தைச் சேர்ந்தவர்கள். இதில் சர்வதேச அளவில் பொருளாதார நிச்சயமற்ற இருப்பதால், அம்பானி வெளிநாடுகளில் முதலீடு செய்ய எச்சரிக்கை உடனேயே இருந்து வருகிறார். ஆனால், அதானி குழுமம் இஸ்ரேலில் உள்ள ஹைஃபா துறைமுகத்தை ஜூலை மாதம் 1.2 பில்லியன் டாலருக்கு வாங்கியது. மே மாதம், அவர் ஹோலிகிம் நிறுவனத்தின் இந்திய சிமெண்ட் அலகுகளை $10.5 பில்லியன்களுக்கு வாங்கி தனது சாம்ராஜ்ஜியத்தை விரிவு செய்தார் அதானி

Recommended Video

    5G Spectrum Auction: தயாராகும் Reliance Jio, Adani | Technology
     அம்பானி & அதானி

    அம்பானி & அதானி

    கடந்த 20 ஆண்டுகளாகவே அம்பானியும் சரி, அதானியும் சரி இந்தியாவின் முக்கியமான பணக்காரர்களாக வளர்ந்து வந்தனர். இருப்பினும், இதுவரை அவர்கள் ஒரே துறையில் நேரடியாக மோதிக் கொண்டது இல்லை. இந்தச் சூழலில் தான் டெலிகாம் துறையில் நேரடியாக மோத இரு கோடீஸ்வரர்களும் முஷ்டியை முறுக்கிக் கொண்டு இருக்கிறார்கள். இதில் யார் வெல்வார்கள் என்பதற்குக் காலம் தான் பதில் சொல்ல வேண்டும்

    English summary
    Adani's 5G Plan might put heavy challenge to Ambani: (டெலிகாம் சந்தையில் உருவாகும் புதிய போர் அம்பானி & அதானி) Telecom industry might face chaos after Adani's 5G Plan.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X