டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பெரிய ட்விஸ்ட்.. ரிஷப் பண்ட் கார் விபத்திற்கு காரணமே இதுதான்.. வெளியான உண்மை! உறுதி செய்த முதல்வர்

Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய அணியின் இளம் கீப்பர் ரிஷப் பண்ட் விபத்தில் சிக்கிய நிலையில் அவரின் விபத்திற்கு உண்மையான காரணம் என்ன என்ற விவரம் வெளியாகி உள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை உத்தரகாண்டில் வேகமாக காரில் சென்ற ரிஷப் பண்ட் விபத்திற்கு உள்ளானார். பண்டிற்கு தலையில் இரண்டு இடங்களில் வெட்டு ஏற்பட்டுள்ளது. அவருக்கு வலது காலில் சதை கிழிந்துள்ளது.

அதேபோல் மணிக்கட்டு, கெண்டை கால், கணுக்காலில் காயங்கள் ஏற்பட்டு உள்ளன. முதுகில் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டுள்ளன, என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ரிஷப் பண்ட் கார் விபத்து: ரியல் காரணமே இதுதான்.. உத்தரகாண்ட் முதல்வர் வெளியிட்ட முக்கிய தகவல் ரிஷப் பண்ட் கார் விபத்து: ரியல் காரணமே இதுதான்.. உத்தரகாண்ட் முதல்வர் வெளியிட்ட முக்கிய தகவல்

சிகிச்சை

சிகிச்சை

தற்போது இவர் முழு கண்காணிப்பில் இருக்கிறார். இவர் ஆபத்தில் இருந்து தப்பித்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். இவரின் உடல்நிலை தேறி உள்ளது. ஆனால் இன்னும் 7 மாதங்களுக்கு இவர் கிரிக்கெட் ஆட முடியாது என்று கூறப்படுகிறது. ரிஷப் பண்ட் உத்தரகாண்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்று இருக்கிறார். வங்கதேசம் தொடர் முடிந்து டெல்லிக்கு இவர் வந்துள்ளார். அதன்பின் உத்தரகாண்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

விபத்து

விபத்து

இதையடுத்து வெள்ளிக்கிழமை அதிகாலை திரும்பி காலை பண்ட் டெல்லிக்கு வருவதாக திட்டமிடப்பட்டு இருந்தது. டெல்லியில் சனிக்கிழமை சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகவும், அதன்பின் புத்தாண்டு தின கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காகவும் பண்ட் டெல்லி திரும்பி இருக்கிறார். வீட்டில் சொல்லாமல் இவர் டெல்லி நோக்கி வந்துள்ளார். டெல்லியில் புத்தாண்டு அன்று தனது குடும்பத்திற்கு சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என்று பண்ட் நினைத்துள்ளார். இந்த நிலையில்தான் டெல்லி வரும் வழியில் அவர் விபத்துக்கு உள்ளானார்.

காரணங்கள்

காரணங்கள்

இந்த விபத்திற்கு பல்வேறு காரணங்கள் தொடக்கத்தில் சொல்லப்பட்டன. அதன்படி பண்ட் காரில் வேகமாக செல்லும் போது பனி மூட்டம் காரணமாக சாலையில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. இடையில் திடீரென டிவைடர் வந்துவிட்டதால் அவர் குழம்பிவிட்டார். இதுதான் விபத்திற்கு காரணம் என்று கூறப்பட்டது. நெடுஞ்சாலைகளில் கிராஸிங் இருக்கும் பகுதிகளில் டிவைடர் இருக்காது. அதை கடந்ததும் டிவைடர் வரும். பொதுவாக இது போன்ற டிவைடர்கள் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும். இதுதான் பண்டின் விபத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்டது.

பனி

பனி

இன்னொரு பக்கம் பண்டிற்கு தூக்கம் வந்துவிட்டது. அவர் அதிகாலை 3 மணிக்கு முன்பாக வண்டியை எடுத்துள்ளார். வேகமாக வந்துள்ளார் அதிகாலை 5.30 மணிக்கு அவருக்கு தூக்கம் வந்துள்ளது. 100 கிமீக்கும் அதிக வேகத்தில் காரை ஓட்டி இருக்கிறார். ஒரு நிமிடம் அவர் தூங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது. அவர் தூக்க கலக்கத்தில் சாலையை பார்க்கவில்லை என்றும் கூறப்பட்டது. இந்த இரண்டு விஷயங்கள் விபத்திற்கு காரணம் என்று கூறப்பட்டன. ஆனால் தற்போது விபத்திற்கு உண்மையான காரணம் என்ன என்று தகவல் வெளியாகி உள்ளது.

உண்மை என்ன?

உண்மை என்ன?

உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி இது தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ளார். அதில் பண்ட் வேகமாக காரை ஓட்டி வந்தாலும் அவர் தூங்கவில்லை. அவர் சுயநினைவோடுதான் இருந்திருக்கிறார். பனியால் தூரத்தில் சாலையில் இருந்த பள்ளம் தெரியவில்லை. பள்ளம் பக்கத்தில் வந்ததும், அதை தவிர்க்க பண்ட் காரை திருப்பி உள்ளார். வலது பக்கம் இவர் காரை வேகமாக திருப்பி உள்ளார். இதில் அவரின் கார் விபத்தில் சிக்கி உள்ளது. பள்ளத்தை தவிர்க்க அவர் முயன்றதே விபத்திற்கு காரணம் என்று முதல்வர் தாமி தெரிவித்துள்ளார். இதன் மூலம் பண்ட் விபத்தில் சிக்க காரணம் சாலையில் இருந்த பள்ளம்தான் என்பது உறுதி ஆகி உள்ளது.

English summary
What is the true reason behind the car accident of Rishabh Pant? Uttarkhand CM Dhami reveals it.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X