அபிஜித் தீப்கே எங்கே? 12 மணி நேரம் கடந்தும் எந்த தகவலும் இல்லை.. CJP ஆக்ரோஷ பதிவு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: CJP நிறுவனர் அபிஜித் தீப்கே, இணை ஒருங்கிணைப்பாளர் சவுரவ் தாஸ் உள்ளிட்டோரை டெல்லி போலீசார் கடத்திச் சென்றுவிட்டதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இதுவரை அவர்கள் எங்கு வைக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் வெளிவராததால் பரபரப்பு நிலவுகிறது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியில் (SIR) தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தன்னிச்சையாக செயல்பட்டு சில முடிவுகளை எடுத்ததாக மற்ற தேர்தல் ஆணையர்கள் குற்றம்சாட்டியதை அடுத்து பல்வேறு கட்சிகள் விமர்சித்து வருகின்றன. தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

Where are Abhijeet Dipke and other leaders CJP asks Delhi police

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் இன்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். போராட்டத்திற்கு டெல்லி போலீசார் அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி போராட்டம் நடைபெற்றது.

டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் இன்று நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற சுமார் 3 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் தலைவர் அபிஜித் தீப்கே மற்றும் அசுதோஷ் ரங்கா மற்றும் சவுரவ் தாஸ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் போராட்டத்தில் பங்கேற்பதற்கு முன்பே போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

அதேபோல், சிஜேபி போராட்டத்திற்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் கேரள முன்னாள் முதலமைச்சருமான பினராயி விஜயன் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் போலீசாரால் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், டெல்லியில் போராட்டத்தை முன்னெடுத்த சிஜேபி கட்சியின் நிறுவனரான அபிஜீத் தீப்கேவை காவல்துறையினர் எங்கு அடைத்து வைத்துள்ளனர் எனத் தெரியவில்லை என சிஜேபி கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

அபிஜீத் தீப்கே இன்று காலை விமானத்தில் டெல்லி வந்தபோது அவருடன் சேர்த்து சிஜேபி முக்கியத் தலைவர்களான அசுதோஷ் ரங்கா மற்றும் சவுரவ் தாஸ் ஆகியோரையும் காவல்துறையினர் விமானத்தில் வைத்து கைது செய்தனர். அவர்கள் எங்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

அபிஜீத் தீப்கேவின் பாட்டி இன்று மறைந்ததாகச் செய்திகள் வெளியானது. அவரது மறைவு தொடர்பாக அபிஜீத்துக்குத் தகவல் தெரிவித்ததாக காவல்துறையினர் கூறினர். ஆனால், அபிஜித் இதுவரை அவரது வீட்டுக்கும் செல்லவில்லை. நாளை காலை அவரது பாட்டியின் இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது.

இதுதொடர்பாக கண்டனம் தெரிவித்த சிஜேபி கட்சியினர், "அபிஜீத் தீப்கேயின் குடும்பத்தினருக்கோ அல்லது சிஜேபி வழக்கறிஞர்களுக்கோ அவர் எங்கு இருக்கிறார் என்பது குறித்து எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை" எனப் பதிவிட்டிருந்தனர்.

சிஜேபி-இன் மூன்று தலைவர்களின் பாதுகாப்பு குறித்து நாங்கள் மிகுந்த கவலை கொண்டுள்ளோம் எனக் குறிப்பிட்டுள்ள அவர்கள் தற்போது வரை அவர்களை வைத்திருக்கும் இடம் பற்றி காவல்துறை தகவல் தெரிவிக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர்.

சிஜேபி கட்சியின் சமூக ஊடகப் பதிவில், "டெல்லி காவல்துறை அபிஜீத் திப்கே, அஷுதோஷ் ரங்கா மற்றும் சௌரவ் தாஸ் ஆகியோரைக் கடத்திக் கொண்டுபோய் 12 மணி நேரம் ஆகிவிட்டது. அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று இன்னும் தெரியவில்லை. அவர்களுடன் தொடர்புகொள்ள முடியவில்லை. டெல்லி காவல்துறை அவர்களை எங்கே வைத்திருக்கிறது? ஒருவரை இப்படிக் கடத்தி வைப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அவர்களை சட்டவிரோத தடுப்புக் காவலில் இருந்து உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும், அவர்கள் எங்கு உள்ளனர் என்ற தகவலை தெரிவிக்க வேண்டும் என்றும், அவர்களின் வழக்கறிஞர்களுடன் அவர்கள் பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கவேண்டும் என்றும் கோரிக்கைகளை டெல்லி காவல் ஆணையருக்கு முன்வைத்துள்ளனர்.

அபிஜீத் தீப்கே, அசுதோஷ் ரன்கா, துருவ் ரதி மற்றும் சௌரப் தாஸ் ஆகியோர் எங்கே? என்று டெல்லி முன்னாள் முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.

"பிரதமர் அவர்களே.. அபிஜீத் தீப்கே, அசுதோஷ் ரன்கா, துருவ் ரதி மற்றும் சௌரப் தாஸ் ஆகியோர் எங்கே? காவல்துறையின் மூலம் அவர்களை எங்கே வைத்துள்ளீர்கள்? இதைத் தெரிந்துகொள்ள நாடு விரும்புகிறது," என்று அரவிந்த் கெஜ்ரிவால் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+