டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இது என்ன வெள்ளை வெளேரென? ஆஆ.. உற்றுப்பார்த்தால் ஷாக்.. சமூக வலைத்தளத்தை உலுக்கிய குட்டி விலங்கு!

Google Oneindia Tamil News

டெல்லி: காட்டில் தனது தாய் மற்றும் இதர குட்டிகளுடன் சேர்ந்து வெள்ளை சிங்கக்குட்டி ஒன்று ஓடி ஆடி விளையாடும் வீடியோதான் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

இந்த வீடியோவை பார்க்கும் நெட்டிசன்கள் அந்த வெள்ளை சிங்கக்குட்டியை கண்டு ஆச்சரியத்தில் ஆழ்ந்து வருகின்றனர். மேலும் பலர், இது உண்மைதானா என்றும் கேள்வியெழுப்பி வருகிறார்கள்.

பொதுவாக, சிங்கங்கள் வெள்ளையாக இருப்பது அரிதிலும் அரிதாக கருதப்படுகிறது. எனவேதான் இந்த வீடியோ உலக அளவில் வைரலாகி வருகிறது.

 'மசூதியா இது! பச்சையா இருக்கு?' சர்ச்சையை கிளப்பிய இந்துத்துவ அமைப்பினர்.. வெள்ளை அடித்த ரயில்வே 'மசூதியா இது! பச்சையா இருக்கு?' சர்ச்சையை கிளப்பிய இந்துத்துவ அமைப்பினர்.. வெள்ளை அடித்த ரயில்வே

வெள்ளை விலங்குகள்

வெள்ளை விலங்குகள்

பொதுவாக, நாய், பூனை, முயல் போன்ற விலங்குகளில் வெள்ளை நிறம் சாதாரணமானது தான். ஆனால், மற்ற வகை விலங்குகள் வெள்ளையாக இருப்பது அரிதான ஒன்றாகும். உதாரணமாக, காகம், யானை, மயில், சிங்கம், புலி, ஒட்டகம் போன்ற விலங்கினங்களில் வெள்ளை தோல் கொண்டிருப்பது அரிதிலும் அரிதாக நிகழக்கூடிய ஒன்றாகும். அப்படி வெள்ளை தோலுடன் இருக்கும் இந்த விலங்குகள் பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும். அந்த வகையில், வெள்ளை நிறத்தில் இருக்கும் ஒரு சிங்கக்குட்டியின் வீடியோ தான் நெட்டிசன்களின் கவனத்தை இழுத்துள்ளது.

வெள்ளை சிங்கக்குட்டி

வெள்ளை சிங்கக்குட்டி

இந்த வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், அடர்ந்த காடு ஒன்றில் பெண் சிங்கம் கம்பீரமாக செல்ல அதை பின்தொடர்ந்து அதன் 5 குட்டிகள் வருகின்றன. இதில் 4 குட்டிகள் சிங்கங்களின் சாதாரண நிறத்தில் இருக்க, ஒரு குட்டி மட்டும் உஜாலாவில் முக்கி எடுத்தது போல வெள்ளை வெளரேன்று இருக்கிறது.

அரிதிலும் அரிது

அரிதிலும் அரிது

அந்த வெள்ளை சிங்கக்குட்டி, முயலை போல அங்குமிங்கு ஓடிக்கொண்டும், புதருக்குள் சென்று வருவதுமாக குட்டிகளுக்கே உரிய சேட்டையை செய்து வருவது காண்பவர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. புலி, மயில், ஒட்டகம் போன்ற விலங்குகளில் கூட நூறில் ஒன்றை வெள்ளையாக பார்க்க முடியும். ஆனால், சிங்கங்கள் மிக மிக அரிதாகவே வெள்ளை தோலுடன் பிறக்கின்றன.

மரபணு குறைபாடு

மரபணு குறைபாடு

உலக அளவிலேயே, இந்த வெள்ளை சிங்கக்குட்டியுடன் சேர்த்து மொத்தம் 3 வெள்ளை சிங்கங்கள் தான் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், இவ்வாறு வெள்ளை நிறத்தில் விலங்குகள் பிறப்பது ஒரு வகை மரபணு குறைபாடு என மருத்துவர்கள் தெரிவிக்கின்றன. பிறவிலேயே நிறமி சுரப்பிகள் இல்லாமல் பிறக்கும் விலங்குகள் தான் இப்படி வெள்ளை தோலுடன் பிறப்பதாக கூறப்படுகிறது.

English summary
A video of a white lion cub running and playing with its mother and other cubs in the forest has gone viral on social media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X