டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கவனிச்சீங்களா வங்கிகளை.. கடன் விஷயத்தில் நடந்த புதிய மாற்றங்கள்.. இது தான் தகுதியாம்!

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா நெருக்கடி கடன் விஷயத்தில் வங்கிகளின் தாராள மனசை குறைத்துவிட்டது. பொருளாதாரம் முடங்கிவிட்டதால் கொடுக்கும் பணம் திருப்பி வருமோ, வராதோ என்று எச்சரிக்கையுடன் செயல்படுகின்றன வங்கிகள். கடந்த சில மாதங்களாக கடன் விதிகளை அமைதியாக கடுமையாக்கியுள்ளன.

மார்ச் மாதம் 20ம் தேதிக்கு முன்பு கடன் வாங்கும் தகுதி பட்டியலில் இருந்த பலருக்கு அதன்பிறகு கடன் பட்டியலில் காணாமால் போய்விட்டார்கள். இப்படி காணாமல் போனவர்கள் யார் என்று பார்த்தால் பலர் லட்சங்களிலும், பல ஆயிரங்களிலும் ஊதியம் பெற்று வந்தவர்கள். இவர்களை தேடி தேடி பிடித்து கடன் கொடுத்த வங்கிகள், 10 நிமிடத்தில் லோன், 5 நிமிடத்தில் இன்ஸ்டன்ட் லோன் என்று ஆபர்களை அளிக்கிகொடுத்த நிறுவனங்கள், இப்போது அவர்களே போன் செய்து ஆபர் இருக்கா என்று கேட்டால் இல்லை என்று கதவை சாத்துகின்றன.

பல்வேறு அறிக்கைகளின்படி, ஊடகங்கள், விமான போக்குவரத்து மற்றும் விருந்தோம்பல் போன்ற துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடன் கிடக்கவில்லை. அவர்களின் விண்ணப்பங்களை பரிசீலிக்க வங்கிகள் விரும்புவதில்லை. அத்தகைய வாடிக்கையாளர்கள் எவருக்கும் இப்போது கடன்களை தர தனியார் வங்கிகள் விரும்பவில்லை என்று பைனான்சியல் எக்ஸ்பிரஸ் அறிக்கை தெரிவித்துள்ளது.

சென்னைக்கு முக்கியம்.. தெற்கு ரயில்வே அளித்தது சூப்பர் பரிந்துரை.. 300 கோடி திட்டம்!சென்னைக்கு முக்கியம்.. தெற்கு ரயில்வே அளித்தது சூப்பர் பரிந்துரை.. 300 கோடி திட்டம்!

யாருக்கு கடன் தர

யாருக்கு கடன் தர

கொரோனா தொற்றால் பெரும் பாதிப்புக்கு உள்ளான துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடன் வழங்குவதில் வங்கிகள் மிகவும் எச்சரிக்கையாக உள்ளன என்று ஒரு மூத்த தனியார் வங்கியில் பணிபுரியும் மூத்த வங்கியாளரும் தொழில் துறையினருமான சஞ்சய் தாக்கூர் கூறுகிறார்.

சுயதொழில் செய்பவர்கள்

சுயதொழில் செய்பவர்கள்

நீங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட துறைகளில் பணியாற்றும் (எல்லோமே பாதிப்பு) நபராக இருந்தும், இன்னும் கடன் பெற முடிந்தால், அது சிறிய தொகையாகவே இருக்கும், அத்துடன்அதிக வட்டி விகிதத்தில் இருக்கும். கடுமையான ஆய்வின் காரணமாக சுயதொழில் செய்பவர்கள் நிலைமை இன்னமும் மோசமாக உள்ளது.

இவர்களுக்கு கடன் இல்லை

இவர்களுக்கு கடன் இல்லை

சஞ்சய் தாகூரின் கூற்றுப்படி, உணவு அல்லாத சில்லறை மற்றும் மொத்த விற்பனை, ஜவுளி, ஆர்.எம்.ஜி, பொழுதுபோக்கு, கற்கள் மற்றும் நகைகள், விருந்தோம்பல், ரியல் எஸ்டேட், பயணம் மற்றும் சுற்றுலா ஆகிய துறை தொழில் நிறுவனங்களுக்கு கடன் தர வங்கிகள் கூடுதல் எச்சரிக்கையுடன் உள்ளன" என்றார்

புள்ளி விவரம் என்ன

புள்ளி விவரம் என்ன

இந்த கடுமையான கடன் விதிமுறைகள் காரணமாக இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் தொழில்துறைக்கு கடன் வழங்க வங்கிகள் தயக்கம் காட்டியுள்ளன, இது கடந்த காலாண்டில் (QoQ) 1.7 சதவீதமாகக் குறைந்துள்ளது. மைக்ரோ மற்றும் சிறு நிறுவனங்களுக்கான கடன் 3.4 சதவீதம் அளவிற்கு சுருங்கி உள்ளது. ரத்தில் நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்குவது 5.3 சதவீதம் குறைந்துள்ளது.

கடன் யாருக்கு கிடைக்கும்

கடன் யாருக்கு கிடைக்கும்

இருப்பினும், குறைவாக வாங்குபவர்களுக்கு இது மோசமான செய்தி அல்ல. உடல்நலம், மருந்தகம், உணவு பதப்படுத்துதல், வேளாண்மை மற்றும் தொழில்நுட்பம் போன்ற குறைந்த பாதிப்புக்குள்ளான துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் வங்கிகளால் சாதகமாகப் பார்க்கப்படுகிறார்கள். பைசபஜார்.காமின் இயக்குநரும் பாதுகாப்பற்ற கடன்களின் தலைவருமான கௌரவ் அகர்வால் கூறுகையில் "அவர்கள் (வங்கிகள்) பிரிவுகளுக்கு கடன் கொடுக்க விரும்புகிறார்கள். மற்றவர்களுடன் ஒப்பீட்டளவில் இவர்கள் கடனை திருப்பி செலுத்தாமல் தப்பியோடமுடியாது, ஏனெனில் எதிர்கால திறன் காரணமாக அவர்களால் திருப்பிச் செலுத்த முடியும்." என்றார்.

கடன் தருவது எளிதாவது எப்போது

கடன் தருவது எளிதாவது எப்போது

வங்கி அமைப்பில் அதிகப்படியான பணப்புழக்கம் காரணமாக, வட்டி விகிதங்கள் மிகக் குறைவாகவே உள்ளது. ஆயினும், கடன் தடை நிறுத்தப்பட்ட பின்னர், வங்கிகள் திருப்பிச் செலுத்துதல் தடுமாற்றம் அதிகமானால், கடன் விதிமுறைகளை மேலும் கடுமையாக்கும் என்ற கவலையும் உள்ளது. இனி வரும் மாதங்களான "செப்டம்பர் மற்றும் அக்டோபர் முக்கியமானதாக இருக்கும், ஏனென்றால் அது தடை நீக்கம் மற்றும் கடன் வழங்குநர்கள் மொராட்டோரியம் போர்ட்ஃபோலியோவிற்கான முதல் திருப்பிச் செலுத்தும் தரவைப் பார்க்க வாய்ப்புள்ளது. அதன்பிறகுதான் கடன் கொள்கை மற்றும் விலை நிர்ணயம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த அமைப்பு மீண்டும் சமநிலைக்கு வரும்" என்று பைசபஜார்.காமின் இயக்குர் அகர்வால் கூறினார்.

English summary
Now Banks quietly tightened loan rules due to the significant supply and demand disruptions caused by the Covid-19 crisis.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X