டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மீண்டும் வந்த கெஜ்ரிவால்.. சோர்ந்து போன பாஜக.. ஆம் ஆத்மியின் அதிரடி வெற்றிக் கதை!

Google Oneindia Tamil News

Recommended Video

    Delhi Exit Poll Results| வலுவான தலைவராக உருவெடுக்கும் கெஜ்ரிவால்

    டெல்லி: சமூக ஆர்வலரான அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது மூன்றாவது முறையாக டெல்லி முதல்வராக மக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஊழலை ஒழிக்கும் முனைப்புடன் உள்ள கெஜ்ரிவாலுக்கு டெல்லி மக்கள் அமோக ஆதரவை வழங்கியுள்ளார்.

    டெல்லி சட்டசபை தேர்தலில் பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகித்து வெற்றியை நோக்கி பயணித்து வருகிறார் கெஜ்ரிவால் . வளர்பிறை போல் வளர்ந்து கொண்டிருக்கும் இவர் யார் என்பதை பார்ப்போம்.

    அண்ணா அசாரே தலைமையிலான ஊழல் எதிர்ப்பு போராட்டங்களில் கடந்த 2012-இல் ஈடுபட்டார். இதையடுத்து ஆம் ஆத்மியை தொடங்கினார். 2013-இல் டெல்லி சட்டசபை தேர்தலில் அரசியல் பின்னணி இல்லாதவர்களை வேட்பாளர்களாக அறிவித்தார்.

    டெல்லி தேர்தல் தோல்வி.. பாஜக அலுவலகம் எப்படி இருக்கு பாருங்க.. ஒரு தலைவரையும் காணோமேடெல்லி தேர்தல் தோல்வி.. பாஜக அலுவலகம் எப்படி இருக்கு பாருங்க.. ஒரு தலைவரையும் காணோமே

    அறிக்கை

    அறிக்கை

    இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் டெல்லி முதல்வராக இருந்த ஷீலா தீட்சித்தை 25,864 வாக்குகளில் தோற்கடித்தார். இதையடுத்து 2013-இல் டெல்லி முதல்வராக பதவியேற்றார். ஜன் லோக்பால் சட்டத்தை நிறைவேற்ற சட்டசபையில் போதிய ஆதரவு இல்லாததால் அவர் தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி பதவி விலகினார்.

    சட்டசபை தேர்தல்

    சட்டசபை தேர்தல்

    இதையடுத்து 2014-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட போவதில்லை என கெஜ்ரிவால் கூறியிருந்தார். ஆனால் ஆதரவாளர்களின் வற்புறுத்தலால் அவர் வாரணாசி எம்பி தொகுதியில் மோடியை எதிர்த்து போட்டியிட போவதாக அறிவித்தார். இதையடுத்து கடந்த 2015-ஆம் ஆண்டு நடந்த டெல்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றார்.

    வெளிப்படைத்தன்மை

    வெளிப்படைத்தன்மை

    1968-ஆம் ஆண்டு ஹரியானாவில் இசாரில் பிறந்தார் கெஜ்ரிவால். இவர் ஐஐடி காரக்பூரில் இயந்திரவியலில் பொறியியல் பட்டம் பெற்றார். 1992-ஆம் ஆண்டு இந்தியக் குடியுரிமை பணிகளில் ஒன்றான இந்திய வருவாய்த் துறை பணியில் சேர்ந்து டெல்லியில் வருமான வரி ஆணையராக பணி புரிந்தார். அங்கு அரசுத் துறையில் தகவல்கள் வெளிப்படையாக இல்லாதது ஊழலுக்கு வழிவகுக்கும் என எண்ணினார்.

    உரிமை சட்டம்

    உரிமை சட்டம்

    இதில் மாற்றங்களை கொண்டு வர 2000-ஆம் ஆண்டு தற்காலிக பணி ஓய்வு பெற்றுக் கொண்டு பரிவர்த்தன் என்ற குடிமக்கள் இயக்கத்தை தொடங்கினார். பின்னர் 2006-ஆம் ஆண்டு முழுமையாக பணியிலிருந்து ஓய்வு பெற்று கொண்டார். அருணா ராய் போன்றவர்களுடன் இணைந்து தகவல் பெறும் உரிமைக்காக அமைதியான சமூக இயக்கத்தை நடத்தினார். 2001ஆம் ஆண்டில் தில்லியில் தகவல்பெறும் உரிமைச் சட்டம் நிறைவேறியது.

    பெருமை

    பெருமை

    ஊழலுக்கு எதிராகப் போராடும் வகையில் அரசைப் பொறுப்பேற்க வைத்ததற்காக 2006 ஆம் ஆண்டுக்கான ராமன் மகசசே பரிசு இவருக்கு அளிக்கப்பட்டது. 2007இல் சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சி 2006 ஆம் ஆண்டுக்கான "ஆண்டின் சிறந்த இந்தியர்" பட்டத்தை பொதுமக்கள் சேவைக்காக வழங்கியது. இவருக்கு மனைவி சுனிதா. ஹர்ஷிதா என்ற மகளும் புல்கித் என்ற மகனும் உள்ளனர். கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் டெல்லி மக்களுக்காக கடுமையாக உழைத்தார். அங்குள்ள அரசு பள்ளிகளில் உள்ள கழிப்பறைகளை பளபளக்க வைத்த பெருமை இவரையே சாரும். இன்றும் ஊழலை எதிர்த்து போராடுகிறார்.

    English summary
    A man who is known for Anti corruptionist won in Delhi assembly election 2020 and to be sworn in as CM of Delhi. Who is Aravind Kejriwal?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X