இதை எதிர்பார்க்கவே இல்லையே! டைம் தராத பிரதமர் அலுவலகம்.. இருந்தாலும் விடாத திமுக.. இதுதான் நாகரீகம்!
டெல்லி: டெல்லியில் திமுக சார்பாக திறக்கப்பட உள்ள புதிய அலுவலக திறப்பு விழாவிற்கு திமுக தோழமை கட்சிகள் மட்டுமின்றி பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. திமுகவின் இந்த திடீர் மூவ் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
முதல்வர் ஸ்டாலின் தற்போது அபுதாபியில் இருக்கிறார். துபாயில் அரசு நிகழ்வுகளை முடித்துக்கொண்டு முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள முதல்வர் ஸ்டாலின் அபுதாபி சென்றுள்ளார். இதையடுத்து நாளை சென்னைக்கு திரும்புகிறார் முதல்வர் ஸ்டாலின்.
அதன்பின் மார்ச் 31ம் தேதி முதல்வர் ஸ்டாலின் டெல்லிக்கு சென்று பிரதமர் மோடியை சந்திக்கிறார். பின்னர் . டெல்லியில் புதிதாக கட்டப்பட்ட திமுக கட்சி அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.

டெல்லி திமுக
இந்த கட்டிடம் ஏப்ரல் 2ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. திமுக கட்சி அலுவலகத்திற்கு 'அண்ணா - கலைஞர்' அறிவாலயம் என்று பெயர் வைத்துள்ளனர். இதன் திறப்பு விழா மிக பிரம்மாண்டமாக நடக்க உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று ஏற்கனவே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு திமுக எம்பிக்கள் அழைப்பு விடுத்தனர். அதன்பின் திமுகவின் தேசிய அளவிலான தோழமை கட்சி தலைவர்களுக்கு திமுக சார்பாக அழைப்பிதழ் அனுப்பப்பட்டது.

பாஜக திமுக அழைப்பு
இந்த நிகழ்ச்சி எதிர்க்கட்சிகள் சங்கமிக்கும் இடமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு திமுக சார்பாக இதில் நேரில் கடிதம் வழங்கப்பட்டது. அதேபோல் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், அஷ்வினி வைஷ்ணவ் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

பாஜக கூட்டணி
இது போக பாஜக கூட்டணியில் உள்ள மற்ற சில கட்சிகளுக்கும் அழைப்பு சென்றுள்ளது. அதெல்லாம் விட அதிமுகவிற்கு முறையாக கடிதம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக பிரதமர் மோடியை சந்தித்து அழைப்பு விடுக்க திமுக எம்பிக்கள் முயன்று உள்ளனர். ஆனால் பிரதமர் அலுவலகம் இதற்காக நேரம் கொடுக்கவில்லை. ஏற்கனவே மார்ச் 31ம் தேதி முதல்வர் ஸ்டாலினை சந்திக்க உள்ளதால் இதற்காக தனியாக நேரம் கொடுக்க பிரதமர் அலுவலகம் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

மோடி ஸ்டாலின் சந்திப்பு
அதோடு பிரதமர் வேறு சில பணிகளில் பிஸியாக இருந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. பிரதமர் அலுவலகம் இதற்கு நேரம் கொடுக்கவில்லை என்றாலும் முதல்வர் ஸ்டாலின் வரும் 31ம் தேதி சந்திப்பில் பிரதமர் மோடியை இந்த நிகழ்விற்கு அழைக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோருக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திமுக நாகரீகம்
திமுகவின் இந்த நிலைப்பாடு அரசியல் கடந்தது என்கிறார்கள். எதிர்க்கட்சிகள் கூட்டம் தனியாக நடக்கும். அதற்கும் இதற்கும் தொடர்பு இல்லை. டெல்லியில் அலுவலகம் திறப்பது என்பது சுப நிகழ்வு. இதில் அரசியல் கடந்து எல்லோரும் கலந்து கொள்வதை திமுக விரும்புகிறது. முறையாக அழைப்பிதழ் தரப்பட்டுள்ளது. வருபவர்கள் வரட்டும், வரவில்லை என்றாலும் ஓகேதான்.. அழைப்பதுதான் நாகரீகம் என்று கருதி இப்படி பாஜக தலைவர்களுக்கும் அழைப்பிதழ் தரப்பட்டுள்ளதாம்.
-
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி!












Click it and Unblock the Notifications