Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திரும்பும் பக்கமெல்லாம் அடி.! அடுத்தடுத்து சரியும் வலதுசாரி "தலை"கள்.. திரும்பி வரும் இடதுசாரிகள்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உலகின் பல்வேறு நாடுகளிலும் வலதுசாரி தலைவர்களும், தீவிர தேசியவாதம் பேசும் தலைவர்களும் தொடர்ச்சியாகத் தோல்வியைச் சந்தித்து வருவது உலக நாடுகளைக் கவனிக்க வைத்து உள்ளது.

உலகில் இதுவரை பல தத்துவங்கள் தோன்றியும் வளர்ந்தும் அழிந்தும் உள்ளன. ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு தத்துவங்கள் வளர்ச்சிக்கு வித்திட்டு உள்ளன.

இப்போது பெரும்பாலான நாடுகளில் ஒற்றை ஆட்சி முறை ஒழிக்கப்பட்டு, ஜனநாயக முறையில் மக்களாட்சி நடைபெறுகிறது. தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடிக்கவே பலரும் இங்கு முயல்கின்றன.

உலக நாடுகள்

உலக நாடுகள்

கடந்த சில ஆண்டுகளாகவே உலகெங்கும் வலதுசாரிகள் மற்றும் தேசியவாதிகளின் கைகளே ஓங்கத் தொடங்கின. அமெரிக்கா முதலே ஆஸ்திரேலியா வரை பல உலக நாடுகளில் வலதுசாரிகள் அடுத்தடுத்து ஆட்சியைப் பிடித்தன. இது அங்குள்ள பெரும் நிறுவனங்கள் வளர பெரியளவில் உதவினாலும் கூட, அங்குள்ள உழைக்கும் மக்கள் மேலும் மேலும் சுரண்டலுக்கே ஆளானார்கள்.

அதிகார குவியல்

அதிகார குவியல்

சமீப காலங்களில் வலதுசாரிகள் பெற்ற வளர்ச்சிக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. குறிப்பாக, 2004 இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பின்னர், அனைத்து அரசுகளும் மிகவும் வலிமையானதாக மாற தொடங்கின. தங்கள் சொந்த நாட்டு மக்களையே முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் கண்காணிக்கத் தொடங்கின. இத்துடன் பொருளாதார வளர்ச்சி, வலுவாகும் போலீஸ் கட்டமைப்பு என அனைத்தும் வலதுசாரிகளின் வளர்ச்சிக்கு வித்திட்டன.

புள்ளி வைத்த டிரம்ப்

புள்ளி வைத்த டிரம்ப்

இதனால் ஒவ்வொரு நாடும் மெல்ல வலதுசாரிகளின் கைகளுக்குச் செல்ல தொடங்கின. இருப்பினும், சமீப ஆண்டுகளில் நிலைமை மெல்ல மாற தொடங்கி உள்ளன. அதி தீவிர வலதுசாரி கொள்கை கொண்ட டிரம்ப் முதலில் அமெரிக்காவில் கடந்த 2020இல் வீழ்ந்தார். மெக்சிகோ சுவர் தொடங்கி டிரம்ப் காலத்தில் அவர் செய்த அடாவடிகளுக்கு எல்லையே இல்லை. கொரோனா பெருந்தொற்று பரவ தொங்கிய பின் நடந்த தேர்தலில் டிரம்ப் படுதோல்வி அடைந்தார்.

இஸ்ரேல்

இஸ்ரேல்

அதன் பின்னர் உலகின் பல நாடுகளிலும் வலதுசாரிகளின் செல்வாக்கு சரியத் தொடங்கியது. இஸ்ரேலில் கடந்த 2009 முதல் 11 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த தீவிர வலதுசாரியான பெஞ்சமின் நெதன்யாகு வீழ்த்தப்பட்டார். அங்கு யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதால், ஆட்சியைப் பிடிக்க பெஞ்சமின் நெதன்யாகு எவ்வளவோ முயன்ற போதிலும் பலன் தரவில்லை.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா

அடுத்து ஆஸ்திரேலியா! அங்கும் லிபரல் கட்சியைச் சேர்ந்த ஸ்காட் மாரிசன் இரு தேர்தல்களில் அடுத்தடுத்து வென்று ஆட்சியில் இருந்தார். அப்போது பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாக அவர் பல நடவடிக்கையை எடுத்தார். அவரும் இப்போது ஓரங்கட்டப்பட்டு இருக்கிறார். அங்குத் தொழிலாளர் கட்சியை மீண்டும் ஆட்சியைப் பிடித்து உள்ளது. அதிலும், கடந்த 2007க்கு பின் முதல்முறையாகத் தொழிலாளர் கட்சி தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சியைப் பிடித்து உள்ளது.

இதே நிலை தான்

இதே நிலை தான்

அதேபோல வலதுசாரியான கன்சர்வேடிவ் கட்சி ஆட்சியில் இருக்கும் பிரிட்டனை சொல்லலாம். அங்கு இப்போது மிக மோசமான பொருளாதார சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாகவே வெறும் சில மாதங்களில் மூன்று பிரதமர்களைப் பிரிட்டன் பார்த்து இருக்கிறது. இப்போதும் கூட அங்கு நிலைமை சரியாகவில்லை. தீவிர தேசியவாதம் பேசும் ராஜபக்ச ஆட்சியில் இருந்த இலங்கைக்கு நேர்ந்த கதியும் அனைவருக்கும் தெரியும்.

புதிய நாடு பிரேசில்

புதிய நாடு பிரேசில்

இப்போது இந்த லிஸ்டில் பிரேசிலும் இணைந்து இருக்கிறது. அங்கு அதிபராக இருந்தவர் ஜெய் போல்சார்னோ. இவர் தான் கொரோனா வேக்சின் போட்டால் முதலையாக மாறிவிடுவோம் என்றெல்லாம் கூறியவர். இப்போது இவரும் வீழ்ந்துள்ளார். இவரையும் அங்குள்ள தொழிலாளர் கட்சியே வீழ்த்தி உள்ளது. தொழிலாளர் கட்சியின் லூலா சில்வா 12 ஆண்டுகளுக்குப் பின் அதிபராகி உள்ளார்.

குறையத் தொடங்குகிறது

குறையத் தொடங்குகிறது

அதேநேரம் இந்த காலகட்டத்தில் நடந்த அனைத்து தேர்தல்களிலும் இடதுசாரிகளே ஆட்சியைப் பிடித்து உள்ளனர் எனச் சொல்ல முடியாது. பிரான்ஸ் நாட்டில் மக்ரோன் மீண்டும் அதிபரானார். இத்தாலியிலும் வலதுசாரியான ஜார்ஜியா மெலோனி கைகளில் அதிகாரம் சென்று இருக்கிறது. இருப்பினும், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது, தீவிர வலதுசாரி தத்துவம் பேசுபவர்களுக்கு மக்கள் ஆதரவு குறையத் தொடங்கியுள்ளதையே இது காட்டுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+