அமித் ஷா மீட்.. ஹர்ஷ வர்தனுக்கு செக்?.. சுகாதாரத்துறை அமைச்சராகிறாரா "தேவிஷெட்டி".. உண்மை என்ன?
டெல்லி: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் பதவி விலக உள்ளதாகவும், கர்நாடகாவின் தேவி ஷெட்டி சுகாதாரத்துறை அமைச்சராக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் தகவல்கள் பரவி வருகின்றன.
இந்தியாவில் கொரோனா கேஸ்கள் அதிகம் ஆவதும், அடுத்தடுத்து பல மரணங்கள் நிகழ்ந்ததும் மத்திய அரசுக்கு நெருக்கடியை கொடுத்துள்ளது. முக்கியமாக பிரதமர் மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு இந்த கொரோனா பரவல் பெரிய சரிவை கொடுத்துள்ளது.
உத்தர பிரதேச சட்டசபை தேர்தல் இன்னும் 8-9 மாதங்களில் நடக்க உள்ள நிலையில், கொரோனா பரவல் பாஜகவிற்கு மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது. அடுத்த வருட தொடக்கத்தில் 3ம் அலை வேற வரலாம் என்று இப்போதே கணிப்புகள் வெளியாகிக்கொண்டு இருக்கின்றன.

கணிப்பு
இதனால் "டேமேஜ் கண்ட்ரோல்" செய்யும் வகையில் மத்திய அமைச்சரவை மொத்தமாக மாற்றப்படலாம் என்று கூறுகிறார்கள். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆர்எஸ்எஸ் தலைவர்கள் முக்கியமான ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார்கள். இதில் பாஜகவை இமேஜை காக்க என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனை செய்யப்பட்டது.

ஆலோசனை
இந்த ஆலோசனையின்படி, கொரோனா பரவலுக்கு பொறுப்பேற்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் பதவி விலக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை என்றாலும், பெரும்பாலும் இவர் மாற்றப்படலாம் என்று கூறுகிறார்கள்., கர்நாடகாவின் டாக்டர் தேவி ஷெட்டி சுகாதாரத்துறை அமைச்சராக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் தகவல்கள் பரவி வருகின்றன. டாக்டர் தேவி ஷெட்டி மங்களூரை சேர்ந்தவர்.

கர்நாடகா
இந்தியா முழுக்க பல்வேறு கிளைகள் கொண்ட நாராயண ஹெல்த் மருத்துவ நிறுவனங்களின் தலைவர். இவர் பாஜகவிற்கு மிகவும் நெருக்கமானவர். மோடிக்கும் பிடித்தமானவர். அதோடு கர்நாடகாவில் கொரோனா மூன்றாம் அலையை தடுக்க அமைக்கப்பட்டுள்ள குழுவின் தலைவர் இவர்தான். கர்நாடக பாஜக தலைவர்களுக்கு நெருக்கமான நபர்.

வாய்ப்பு
இவரை ராஜ்ய சபா எம்பியாக்கி, சுகாதாரத்துறையை கொடுக்கும் முடிவில் பாஜக இருப்பதாக கூறுகிறார்கள். மூன்றாம் அலைக்கு தயார் ஆகும் வகையில் இந்த பணிகளை செய்ய உள்ளனர். இது போக அமைச்சரவை மாற்றம் நடக்கும். ஜோதிரித்ய சிந்தியா, சார்பானந்தா சோனாவால், சுஷில் மோடி, மீனாட்சி லேகி உள்ளிட்ட பலருக்கு அமைச்சரவையில் வாய்ப்பு கிடைக்கலாம் என்றும் கூறுகிறார்கள். ஆனால் இந்த தகவல்கள் எதுவும் உறுதி செய்யப்படாத நிலையில்.. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications
