டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனாவுக்கு அடைக்கலம் கொடுக்கும் பிளாஸ்டிக்.. இனியாவது ஒழிக்கப்படுமா? இப்போது இல்லாட்டி எப்போது?

Google Oneindia Tamil News

டெல்லி: சுற்றுச்சூழலுக்கு மாசை ஏற்படுத்தி வரும் பிளாஸ்டிக்குகளில் கொரோனா வைரஸ் 2 முதல் 5 நாட்கள் வரை உயிரோடு இருக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. சுற்றுச்சூழல் தொடங்கி உயிருக்கே உலை வைக்கும் பிளாஸ்டிக்குகளை போர்க்கால அடிப்படையில் இந்தியா ஒழிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

உலகம் முழுவதும் பிளாஸ்டிக்குகளால் சுற்றுச்சூழல் சீர்கேடு நடைபெறுகிறது. மேலும் அவை பூமியில் புதைத்தாலும் மக்காத தன்மை கொண்டுள்ளதால் மண்ணின் வளத்தையும் கெடுக்கிறது. மேலும் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் சென்று கலப்பதால் கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன.

Recommended Video

    கொரோனாவை தடுக்க கோவையில் ஒரு வித்தியாசமான ஏற்பாடு

    குப்பைகளில் வீசப்படும் பிளாஸ்டிக் கவர்களை உண்டு கால்நடைகள், விலங்குகள் ஆண்டுதோறும் பலியாகின்றன. இதனால் இந்த ஆபத்தான பிளாஸ்டிக்குகளை பெரும்பாலான நாடுகள் ஒழித்துவிட்டன.

     சமூக விலகல் முக்கியம்தான்.. ஆனால் 14 மணி நேர ஊரடங்கு வைரஸை கட்டுப்படுத்துமா?.. உண்மை நிலவரம் இதோ.. சமூக விலகல் முக்கியம்தான்.. ஆனால் 14 மணி நேர ஊரடங்கு வைரஸை கட்டுப்படுத்துமா?.. உண்மை நிலவரம் இதோ..

    ஒழிப்பு

    ஒழிப்பு

    அந்த வகையில் கென்யா, பிரிட்டன், தைவான், ஜிம்பாம்வே, கனடா, சியாட்டில், ஆஸ்திரேலியா, அம்பர்க், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகள் பிளாஸ்டிக்கை அறவே ஒழித்துவிட்டன. வங்கதேசம்தான் முதன்முதலில் பிளாஸ்டிக்கை ஒழித்தது. இன்னும் சில நாடுகள் சுற்றுப்புறத்திற்கு மாசில்லாத பிளாஸ்டிக்குகளை பயன்படுத்தி வருகின்றன. இந்தியாவில் சில மைக்ரான்களுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக்குகள் மட்டும் ஒழிக்கப்பட்டுள்ளன.

    அசுத்தம்

    அசுத்தம்

    எனினும் திருட்டுத்தனமாக அந்த குறைந்த அளவிலான மைக்ரான் பிளாஸ்டிக்குகள் இன்னும் புழக்கத்தில் இருக்கத்தான் செய்கின்றன. பிளாஸ்டிக்குள் மண்ணில் புதைந்து மரம் வளர்த்தலை தடுக்கும். சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும். வளி மண்டலத்தை அசுத்தப்படும் என பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.

    பிளாஸ்டிக்

    பிளாஸ்டிக்

    அதில் முக்கியமானது பிளாஸ்டிக்குகளை எரிப்பது மிகவும் ஆபத்தானது. இதிலிரிந்து டையாக்சின் என்ற நச்சு புகை வெளியேறுகிறது. இதனால் சுற்றுச்சூழல் மாசைவதுடன், அப்பகுதியில் உள்ள மக்கள் விஷ காற்றை சுவாசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பிளாஸ்டிக் பொருட்களில் அதிக தீங்கு விளைவிக்கும் வேதிப் பொருட்கள் சேர்க்கப்படுகிறது. மேலும் அவை தொழிற்சாலைகளில் உருகும்போது வெளியேறும் காற்று சுற்றுச்சூழலுக்கு உகந்ததல்ல.

    சீறுநீரகக் கோளாறுகள்

    சீறுநீரகக் கோளாறுகள்

    இதன் மூலம் தோல் நோய் முதல் புற்றுநோய் வரை பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. மூச்சுக் குழாய் பாதிப்பு, செரிமானத்தன்மை, சிறுநீரகக் குறைபாடு உள்ளிட்டவை ஏற்படுகிறது. தற்போது கொரோனா வைரஸின் தாக்கம் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பிளாஸ்டிக் பொருட்கள் மீது 2 முதல் 5 நாட்கள் வரை உயிரோடு இருக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன.

    போர்கால நடவடிக்கை

    போர்கால நடவடிக்கை

    இந்த பிளாஸ்டிக்கை இந்தியாவில் பயன்படுத்துவதால் கொரோனா நோய் தொற்றின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த பிளாஸ்டிக் பொருட்கள் மீது நோய் தொற்று ஏற்பட்டால் அது 5 நாட்கள் வரை அப்படியே இருக்கும். அந்த பொருளை தொடும் மற்றவர்களுக்கும் இந்த வைரஸ் தொற்று பரவும். எனவே சுற்றுச் சூழலுக்கும் சுகாதாரத்திற்கும் உயிருக்கும் உலை வைக்கும் பிளாஸ்டிக்குகளை கொரோனா பாதிப்புள்ள தருணத்திலாவது இந்தியாவில் முற்றிலும் ஒழிக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாகும். இப்போது இல்லாவிட்டால் வேறு எப்போது?

    English summary
    Will the Government of India bans the usage of Plastics? as the Coronavirus lives in Plastics for 5 days.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X