கொரோனா வந்தாலும் வந்தது.. மது குடிக்கும் பெண்கள் எண்ணிக்கை கூடிப்போச்சு! எந்த மாநிலம் டாப் தெரியுமா?
டெல்லி: இந்தியாவில் மதுபானங்கள் அருந்தும் பெண்களின் சதவீதம் 7ஆக உயர்ந்துள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் 16 கோடி பேருக்கு மதுபானம் குடிக்கும் பழக்கம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா தொற்றுக்கு பின்னர் மதுக்குடிக்கும் பழக்கம் பெண்களுக்கு அதிகம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா, சிக்கிம், அரியானா, இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தான் மதுப்பிரியர்கள் அதிகமாக உள்ளதாகவும் யுபிஎஸ் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

மதுபான சந்தையில் முதலிடம்
இந்தியாவில் உள்ள மதுபான சந்தைகளில் யூனியன் ஸ்பிரிட்ஸ் என்ற பிராண்டின் கீழ் வரும் மதுபானங்களை மதுபிரியர்கள் அதிகம் விரும்பி வாங்குவதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கின்றது. யுனைடெட் ப்ரூவெரிஸ் நிறுவனத்தின் பீர்கள் அதிகளவில் விற்பனையாகி முதல் இடத்தில் உள்ளளது. அதற்கு காரணம் கிங் பிஷர் பீர் இந்த நிறுவனத்தின் தயாரிப்பு என்பதாலும் இருக்கலாம். கள் மற்றும் நாட்டு சாராய விற்பனையில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்கள் முன்னிலை வகிக்கின்றன.
காஷ்மீர், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்களில் கள் மற்றும் நாட்டு சாராயங்களின் விற்பனை குறைவாக உள்ளதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

யுபிஎஸ் நடத்திய ஆய்வு
இந்நிலையில் இந்தியாவில் மதுபானங்கள் விற்பனை எவ்வளவு, எவ்வளவு பேரு மதுபானம் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர், ஆண்கள், பெண்கள், திருநங்கைகள் மது அருந்தும் விகிதாச்சாரம் போன்றவற்றை குறித்து யுபிஎஸ் நிறுவனம் நாடு முழுவதும் ஒரு ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வுக்கு பின் யுபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் 2020ல் மொத்த மதுபான கொள்முதல் 29 சதவீதம் குறைந்துள்ளதாகவும், மதுபானங்கள் ஒப்பீட்டளவில் 19.7% குறைந்து உள்ளதாகவும் யுபிஎஸ் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், பீர் 39.1 சதவீதம் குறைந்துள்ளதாகவும், ஆல்கஹால் நுகர்வு என்பது ஆசிய அளவில் 6.4 லிட்டராகவும் உலக அளவில் 6.2 லிட்டராகவும் உள்ள நிலையில் சராசரிகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் 5.5 லிட்டர் குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளா, கர்நாடகாவில் அதிகம்
ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா, சிக்கிம், ஹரியானா, இமாச்சல பிரதேச மாநிலங்களில் தான் மதுபானங்கள் குடிக்கும் பழக்கம் அதிகம் உள்ளதாக தெரிவித்ககப்பட்டுள்ளது. மேலும் இந்தியா முழுவதும் சுமார் 16 கோடி பேர் மதுபானம் அருந்துவதாக குறிப்பிட்டுள்ள யுபிஎஸ் நிறுவனம் இவர்களில் 7 சதவீதம் பேர் பெண்கள் மதுபானம் அருந்துவதாக தெரிவித்துள்ளது. மேலும் 2020ம் ஆண்டு கொரோனா தொற்று பரவல் ஆரம்பித்த பிறகுதான் பெரும்பாலான பெண்கள் மதுபானம் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டதாகவும் யுபிஎஸ் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
Recommended Video

தமிழ்நாட்டில் மதுக்கடைக்கு எதிர்ப்பு
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக சமூக அமைப்புகளும், பெண்களும் அடிக்கடி போராட்டம் நடத்தி வருகின்றனர். டாஸ்மாக் கடையால் அதிகம் வன்முறை நிகழ்வதாகவும், உயிரிழப்பு நடைபெறுவதாகவும், பொருளாதார ரீதியாகவும் ஒவ்வொரு குடும்பமும் வாழ்வாதாரத்தை இழப்பதாகவும் குற்றம் சாட்டி வருகின்றனர். அதனால்தான் டாஸ்மாக் கடை அமைக்கும்போதெல்லாம் அவ்வப்போது போராட்டம் நடைபெற்று வருகிறது. பள்ளிகள், கோயில்கள் மற்றும் குடியிருப்புகள் அதிகம் உள்ள இடங்களில் டாஸ்மாக் கடைகள் கூடாது என தொடர்ந்து எதிர்ப்பு குரல் வலுத்து வருகிறது.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது!












Click it and Unblock the Notifications