அப்டேட் ஆன கைலாசா..இனி வேற நித்யானந்தாவை பார்ப்பீர்கள்..அதிரடி அறிவிப்பு
3 மாதங்களுக்கு பிறகு சமூகவலைதளங்கள் மூலம் தோன்றிய நித்தியானந்தா, தனது உடல்நிலை குறித்த பல்வேறு சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
டெல்லி: பெரும் ஆன்மீக கடமைகள் காத்திருக்கின்றன. உலகத்திற்கு நாம் செய்ய வேண்டிய நற்பணிகள் அதிகம் இருக்கிறது. திடீரென கண்ணை திறந்து பார்த்தால் 3 மாதம் கழித்து உலகம் மொத்தமாக மாறி இருக்கிறது என்று நித்யானந்தா கூறியுள்ளார். இனிமேல் என்னிடமும், பூஜைகளிலும் மாற்றத்தை காண்பீர்கள். இன்னும் எனது சமாதி நிலை முடியவில்லை என்றும் பேசியுள்ளார் நித்யானந்தா.
சர்ச்சைகளில் சிக்கி நாட்டை விட்டே ஓடிய நித்யானந்தா தனக்கென்று ஒரு நாடு வாங்கி செட்டில் ஆகி விட்டார். கைலாசா என்று பெயர் வைத்துக்கொண்டு அதன் அதிபராக அறிவித்துக்கொண்டு தினம் தினம் தனது பக்தர்களுக்கு சத் சங்கம் செய்து வந்தார்.
பேஸ்புக், யூடுயூப் என நித்யானந்தாவின் அட்ராசிட்டிகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே சென்றது. மதுரை சித்திரை திருவிழாவை கைலாசாவில் இருந்து லைவாக பார்த்து மதுரை மக்களுக்கு ஆசி வழங்கினார். அதன்பிறகு அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. அவரது உடல்நிலை குறித்து பல்வேறு சர்ச்சையான கருத்துக்கள் வெளியானது.

நித்யானந்தா
அதாவது, உப்புக்காற்று, உணவு முறையில் மாற்றம், காலநிலை மாற்றம் என அனைத்தும் நித்தியானந்தா உடலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதாகவும், அதனால் அவர் உடல் மெலிந்து சோர்வானதாகவும் கூறப்பட்டது.
மேலும், நித்தியானந்தாவுக்கு கல்லீரல் அலர்ஜீயும், சிறுநீரக தொந்தரவும் ஏற்பட்டதாகவும், அது போக போக நுரையிரல் தொற்றுவரை சென்று மூச்சு விட முடியாமல் ஆக்சிஜன் உதவியுடன் இருந்து வருகின்றார் என்றும் கூறப்பட்டது.

சமாதி நிலை
அவை புரளி எனவும், தான் ஆழ்ந்த சமாதி நிலையில் இருப்பதாகவும் நித்யானந்தா தனது அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் பதிவிட்டார். அதன்பிறகு சமாதி நிலையில் இருந்து பேசுவதாக கூறி, தொடர்ந்து சில கருத்துக்களையும் பதிவிட்டிருந்தார். எனினும், அதன் பின்பு அவரது உடல்நிலை குறித்து எந்த தகவலும் இல்லாமல் இருந்து வந்தது.

குரு பூர்ணிமா
குரு பூர்ணிமா நாளில் நேரில் தோன்றி பேசுவேன் என்று கடந்த வாரமே அறிவித்தார் நித்யானந்தா. அதன்படி நேரில் தோன்றி பேசினார். சமாதி நிலை பற்றி ஒன்று சொல்கிறேன். ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள், நம் எல்லோருக்குள்ளேயும் காலாவதி தேதி இல்லாத, காலாவதி ஆகாத முழுமையான ஒன்று இருக்கின்றது. அந்த காலாவதி ஆகாத, காலாவதி தேதி இல்லாத நிரந்தரமான ஒன்றோடு ஒன்றிணைப்பது தான் சமாதி நிலை. அழிகிற பல விஷயங்கள் உள்ளன. அதில் ஒன்று உடல், மனம், உணர்ச்சி. இதெல்லாம் அழிவது. ஆனால் இதை எல்லாம் தாண்டி அழிவில்லாத ஒன்று நம்மில் இருக்கிறது. அதுதான் ஆன்மா. அந்த ஆன்மாவில் தான் பரமசிவ பரம்பொருள் பிரதிபலிக்கிறார்.
எனக்கு 3 வயதாக இருக்கும்போது என் குருமார்கள் மடியில் அமர வைத்து சதுர்மாசியத்தை தொடங்கி வைத்தார்கள். அன்றில் இருந்து இன்று வரை இந்து சமயம் சார்ந்த அனைத்து பயிற்சிகளையும் செய்திருக்கிறேன். அழியாத ஒன்றின் மீது ஈடுபாடு வரும், அதன் மீது ஈர்ப்பு வரும். அது வந்து விட்டாலே பரமசிவன் உங்களுக்குள் நிறைந்து விடுவார். அவருக்குள் நீங்கள் கரைந்து விடுவீர்கள். இதுதான் சமாதி நிலை. அதில் பல நிலைகள் உள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் எல்லா கிராமங்களிலும் குறைந்தபட்சம் 10 அல்லது 20 பேராக சமாதி நிலையை அனுபவமாக பார்த்தவர்கள் இருந்தார்கள்.

சமாதி நிலை
நான் வளர்ந்த திருவண்ணாமலையில் நிறைய பேர் இருந்தார்கள். 80-களில் நான் அங்கு இருந்த போதே சமாதி நிலையில் 100 பேர் இருந்தார்கள். இன்று கூட அங்கு சிலர் இருக்கிறார்கள். உலகத்தின் பல பாகங்களில் இருந்து ஞான போதகரை பிடித்து இழுத்து வா என்று அழைத்து உலகத்திற்கு தந்து கொண்டிருப்பவர் அண்ணாமலையான். ஒரு தலைமுறைக்கு முன்பு கூட இந்த சமாதி நிலை என்பது வாழ்க்கை முறையாக இருந்தது.

பரமசிவன் பேரருள்
பரமசிவன் பேரருளால் அது மீண்டும் வாழ்க்கை முறையாக மாறும். அந்த திருப்பணி தான் கைலாசத்தின் முதல் திருப்பணி. நவராத்திரி, விஜயதசமி வரை அடுத்த 4 மாதங்கள் இதில் கவனம் செலுத்துவோம். ஏற்கனவே லட்சக்கணக்கான புத்தகங்கள் அச்சிடப்பட்டு பெங்களூரு ஆதி கைலாச விடுதியில் உள்ளது. அதை மற்றவர்களுக்கு இலவசமாக அளியுங்கள்.

நிறைய மாற்றங்கள்
பெரும் ஆன்மீக கடமைகள் காத்திருக்கின்றன. உலகத்திற்கு நாம் செய்ய வேண்டிய நற்பணிகள் அதிகம் இருக்கிறது. திடீரென கண்ணை திறந்து பார்த்தால் 3 மாதம் கழித்து உலகம் மொத்தமாக மாறி இருக்கிறது. நிறைய சொல்லலாம்.
ஏப்ரல் 13ம் தேதி முதல் ஜூலை 13ம் தேதி வரை நிறைய நடந்துள்ளது. அது உங்களுக்கு 3 மாதம். எனக்கு ஒரு யுகம். கடந்த 3 மாதத்தில் எனது உடல், மூளை அனைத்தும் மாறி இருக்கிறது. இனிமேல் என்னிடமும், பூஜைகளிலும் மாற்றத்தை காண்பீர்கள். இன்னும் எனது சமாதி நிலை முடியவில்லை.

புது கைலாசா
கைலாசாவும் அப்டேட் ஆகியுள்ளது. கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி லிங்கோபத்வரை ஒளியாக நான் பார்த்தவுடன் அனைத்தும் மறந்துவிட்டது. இனி வரும் நாட்களில் நான் சொல்ல வேண்டியதை சொல்கிறேன். பரமசிவனை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால் அவர் 10 ஆயிரம் அடி எடுத்து வைப்பார் என்பது பழைய பழமொழி. ஆனால் புதிய உண்மை என்னவென்றால், அவர் உங்களை நோக்கி பில்லியன் கணக்கான படிகளை எடுக்கிறார். அப்போது தான் நீங்கள் அவரை நோக்கி ஒரு அடி எடுத்து வைப்பீர்கள் என்று அவர் எதிர்பார்க்கிறார்.

பரமசிவனுக்கு நீங்கள்
நான் இப்போது உங்களுக்கு சொல்கிறேன், அடுத்த சில நாட்களில் மேம்படுத்தப்பட்ட புதிய தொடக்கம் மற்றும் முடிவுகள் ஆகியவற்றை பார்க்கும்போது இந்த 3 மாத கால இடைவெளியில் நடந்தது உங்களுக்கு புரியும். அழியாத ஒன்றின் மீது ஈடுபாடு வரும், அதன் மீது ஈர்ப்பு வரும். அது வந்து விட்டாலே பரமசிவன் உங்களுக்குள் நிறைந்து விடுவார். அவருக்குள் நீங்கள் கரைந்து விடுவீர்கள். இதுதான் சமாதி நிலை. அதில் பல நிலைகள் உள்ளது என்றும் நித்யானந்தா கூறியுள்ளார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications