கஞ்சா போதை.. பெற்ற தாய்க்கே எமனான மகன்.. 20 வயதில் இப்படியொரு வெறிச்செயலா?.. தருமபுரியில் ஷாக்

Subscribe to Oneindia Tamil

தருமபுரி: தவெக ஆட்சியில் கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள், போதைப் பொருள் கலாசாரம் என தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனை தீவிரமடைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில், தருமபுரி மாவட்டம், பழைய இண்டூர் பகுதியில் பெற்ற தாயை மகனே கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ள அதிர்ச்சிகரமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜயின் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்த 6 மாதங்களாகிறது. திமுக, அதிமுகவுக்கு மாற்று அரசியலை முன்வைத்து ஆட்சிக்கு வந்தனர். திமுக ஆட்சியில் ஏற்பட்ட சட்டம் ஒழுங்கு பிரச்சனையை தவெக தீவிரமாக முன்வைத்தது. ஆனால், தவெக ஆட்சிக்கு வந்தும் காட்சிகள் மாறவில்லை. கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. சட்டம் ஒழுங்கு பிரச்சனை தீவிரமடைந்துள்ளது.

20-year-old-son-arrested-for-brutally-stabbing-mother-to-death-under-the-influence-of-ganja

கஞ்சா போதையில் கொலை

தருமபுரி மாவட்டம், பழைய இண்டூர் பகுதியைச் சேர்ந்த சின்னபாப்பா (42) என்பவரின் மகன் தேவராஜ் (19). கூலி வேலை செய்து வரும் இவர், கஞ்சா போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், வீட்டில் இருந்த தனது தாய் சின்னபாப்பாவை, கத்தியால் சரமாரியாகக் குத்தி கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த இண்டூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து, தாயைக் கொலை செய்த தேவராஜைக் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இளைஞர் கைது

இவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இண்டூர் பேருந்து நிலையத்தில் காவலரின் தொப்பி அணிந்து கஞ்சா போதையில் பஸ் நிலையத்தில் அட்ராசிட்டி செய்ததில் போலீசார் இவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் நேற்று ஜாமினில் வெளியே வந்த நிலையில் இன்று அவரது தாயை கொலை செய்தது குறிப்பிடத்தக்கது. கஞ்சா போதையில் பெற்ற தாயையே மகன் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+