தர்மபுரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தர்மபுரியே அசந்துடுச்சே.. கலெக்டர் சாந்தியை பார்த்தீங்களா.. வேனுக்குள் ஹைலைட்டே இதான்.. பூரித்த மக்கள்

தர்மபுரி கலெக்டர், காசநோய் கண்டறியும் முகாமினை தொடங்கி வைத்தார்

Google Oneindia Tamil News

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், காசநோய் கண்டறியும் முகாமினை கொடியசைத்து கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்... மேலும் காசநோய் கண்டறியும் டிஜிட்டல் எக்ஸ்ரே பொருத்தப்பட்ட நடமாடும் வாகனத்தையும் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

காசநோய் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதற்கான முன்னெடுப்புகளில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக 23 மாவட்டங்களுக்கு ரூ.10.65 கோடி மதிப்பீட்டில் டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி பொருத்திய 23 நடமாடும் வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

 சபாஷ் நீலகிரி

சபாஷ் நீலகிரி

இந்த விகிதத்தை 2025-ம் ஆண்டுக்குள் 44 காசநோயாளிகளாக குறைக்கும் இலக்கை நோக்கிச் சிறப்பாக செயல்பட்டு, காசநோய் விகிதத்தை 40 சதவிகிதமாகக் குறைத்த தமிழகத்தின் முதன்மை மாவட்டம் என்ற நம்பிக்கையை விதைத்திருக்கிறது மலை மாவட்டமான நீலகிரி.. இதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் பாராட்டு சான்றிதழ் வழங்கி சிறப்பித்திருக்கிறார். இதையடுத்து, மற்ற மாவட்டங்களும், இந்த திட்டத்தை செயல்படுத்த தீவிரம் காட்டி வருகின்றன.. அந்த வகையில், தருமபுரி மாவட்டமும் மும்முரம் காட்டி வருகிறது.. தருமபுரி மாவட்டத்தில், காசநோய் கண்டறியும் முகாமை கலெக்டர் சாந்தி, தொடங்கி வைத்தார்...

 கலெக்டர் சாந்தி

கலெக்டர் சாந்தி

இதனை தொடர்ந்து, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தருமபுரி மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் துணை இயக்குநர் மருத்துவப் பணிகள் (காசநோய்) துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு வரப்பெற்றுள்ள ரூ.46.00 ரூ.46.00 லட்சம் மதிப்பீட்டிலான மதிப்பீட்டிலான டிஜிட்டல் எக்ஸ்ரே பொருத்தப்பட்ட நடமாடும் வாகனத்தை, கலெக்டர் நேரில் பார்வையிட்டார்.. மேலும், இவ்வாகனத்தின் மூலம் மேற்கொள்ள உள்ள காசநோய் கண்டறியும் முகாமினை கொடியசைத்து தொடங்கியும் வைத்தார்.

எக்ஸ்ரே

எக்ஸ்ரே

தருமபுரி மாவட்டத்தில் ஏழை, எளிய மக்களைத் தேடிச் சென்று காசநோய் ஏற்பட வாய்ப்புள்ள இடங்களான நெரிசலான குடியிருப்புப் பகுதிகள், முதியோர் இல்லங்கள், தொழிற்சாலைகள் மற்றும் காசநோய் ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளில், காசநோய் கண்டறிவதற்கு இந்த வாகனம் பயன்படுத்தப்படும்... நடமாடும் வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள நவீன டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி மின்வசதி இல்லாத இடங்களில் கூட ஜெனரேட்டர் உதவியுடன் இயங்க வசதி செய்யப்பட்டுள்ளது.

ஹைலைட்

ஹைலைட்

அதுமட்டுமல்ல, இந்த வாகனத்தின் உட்பகுதி குளிர்சாதன வசதியுடன் கூடிய எக்ஸ்ரே அறை மற்றும் எடுக்கப்படும் எக்ஸ்ரேக்களை உடன் சரிபார்க்கும் வகையில் கணினி பொருத்தப்பட்ட அறை என இரண்டு அறைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. மேலும், மக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் நோய் தடுப்பு முறைகளை தெரிவிப்பதற்கு வண்ண தொலைக்காட்சி திரையும், முகாம்களின் போது மக்கள் வசதிக்காக நிழற்குடையும் இவ்வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இதில் ஹைலைட் என்ன தெரியுமா? இந்த வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள நவீன டிஜிட்டல் எக்ஸ்ரே கருவியின் மூலம், ஒரு மணி நேரத்தில் 10 எக்ஸ்ரே எடுக்கும் திறன் உள்ளதாம்.

விதை

விதை

காசநோய் உள்ளவர்களை கண்டறிய, அவர்களுக்கு சளி பரிசோதனை மற்றும் எக்ஸ்ரே போன்றவற்றை இலவசமாக மேற்கொண்டு காசநோய் உள்ளதா என்பது கண்டறிந்து, காசநோயாளிகளுக்கு உரிய சிகிச்சைகள், மருந்துகள், 500 ரூபாய் உதவித்தொகை மற்றும் தொடர் கண்காணிப்பு சேவை வழங்கப்படுவதோடு. அங்குள்ள மக்களிடையே காசநோய் பற்றிய விழிப்புணர்வு மற்றும் நோய் தடுப்பு முறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.. மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை தர்மபுரி மக்களுக்கு நிம்மதியையும், நம்பிக்கையையும் விதைத்து வருகிறது.

English summary
dharmapuri district digital x ray equipment equipped mobility vehicle by the collector தர்மபுரி கலெக்டர், காசநோய் கண்டறியும் முகாமினை தொடங்கி வைத்தார்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X