லெஸ்பியன் உறவு! பெண் இன்ஜினியருடன் மாயமான தர்மபுரி கல்லூரி மாணவி.. கதிகலங்கிய காவல் நிலையம்
தர்மபுரி: தர்மபுரியில் கல்லூரி மாணவி ஒருவர் மாயமான சம்பவத்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பெண் இன்ஜினியர் ஒருவருடன் அந்த மாணவி லெஸ்பியன் உறவில் இருந்து வந்தது தெரியவந்திருக்கிறது.
பெண் இன்ஜினியர் உடனான காதல் விவகாரம் மாணவியின் வீட்டுக்கு தெரியவந்து எதிர்ப்பு கிளம்பிய காரணத்தால் அவர்களும் இருவரும் யாருக்கும் தெரியாமல் குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.
பின்னர், போலீஸார் அவர்களிடம் சாதுர்யமாக பேசி காவல் நிலையத்துக்கு அழைத்து வந்த போது, பெண் என்ஜினியர் தற்கொலைக்கு முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மாணவி மரணம்.. மூடப்பட்ட கனியாமூர் பள்ளியை திறப்பதில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? ஐகோர்ட் உத்தரவு

மாயமான கல்லூரி மாணவி
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியைச் சேர்ந்தவர் 20 வயது கல்லூரி மாணவி. இவர் சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இறுதியாண்டு பயோடெக் படித்து வருகிறார். இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரிக்கு சென்ற மாணவி மாலை வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை பல இடங்களில் தேடினர். ஆனால் மாணவி கிடைக்கவில்லை.

கோவையில் ஒரே வீட்டில்..
இதையடுத்து, மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார், மாணவியை தேடி வந்தனர். இதில் மாணவியின் செல்போன் சிக்னலை ஆராய்ந்ததில், அவர் கோவையில் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, போலீஸார் குறிப்பிட்ட இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது சம்பந்தப்பட்ட மாணவி, 22 வயதான பெண் இன்ஜினியருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தது தெரியவந்தது. இருவரும் லெஸ்பியன் உறவில் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

ஒருவரையொருவர் பிரிய முடியாது..
இதுகுறித்து கல்லூரி மாணவி போலீஸாரிடம் கூறிய போது, "நான் கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கும் போது , மூன்றாம் ஆண்டு பயின்று வந்த மாணவியுடன் நட்பு ஏற்பட்டது. முதலில் சாதாரணமாக பழகி வந்த நாங்கள், நாளடைவில் காதலிக்க தொடங்கினோம். பல்வேறு இடங்களுக்கு சென்று தனிமையில் சந்தித்துக் கொண்டோம். இந்நிலையில், அவர் படிப்பை முடித்துவிட்டு கோவையில் இன்ஜினியராக வேலைக்கு சேர்ந்தார். எங்களால் ஒருவரையொருவர் பிரிந்து இருக்க முடியவில்லை. இந்த விவகாரம் தெரிந்து எங்கள் வீட்டிலும் பிரச்சினை ஏற்பட்டது. அதனால் நான் கோவைக்கு சென்று அவருடன் தங்கினேன். இந்த 10 நாட்கள்தான் நாங்கள் மகிழ்ச்சியாக இருந்தோம். எங்களை பிரித்து விடாதீர்கள்" எனக் கூறினார்.

தற்கொலை முயற்சி - அலறிய போலீஸார்
இதனைத் தொடர்ந்து, அவர்களிடம் சாதூர்யமாக பேசிய போலீஸார், இருவரையும் பென்னாகரத்தில் உள்ள ஏரியும் காவல் நிலையத்துக்கு நேற்று அழைத்து வந்தனர். அப்போது, அவர்களிடம் லெஸ்பியன் உறவை கைவிட்டுவிடுமாறு போலீஸார் கவுன்சிலிங் கொடுத்ததாக தெரிகிறது. இதனை கேட்டு இருவரும் அழுதுள்ளனர். இந்நிலையில், பெண் இன்ஜினியர் கழிப்பறைக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார். சிறிது நேரத்தில் அவரது அலறல் சத்தத்தை கேட்டு போலீஸார் சென்று பார்த்த போது, அவர் பிளேடால் தனது கழுத்து, கை மணிக்கட்டு ஆகிய இடங்களை அறுத்துக் கொண்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

மருத்துவமனையில் அனுமதி
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீஸார், பெண் என்ஜினியரை மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைதத்னர். அங்கு அவரிடம் பென்னாகரம் குற்றவியல் மற்றும் உரிமையியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றதாக தெரிகிறது. இதையடுத்து, கல்லூரி மாணவியை பெற்றோரிடம் ஒப்படைக்க போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.