தமிழக பெண் கேரளாவில் நரபலி..குடும்ப வறுமை..ஆசை வார்த்தை..உயிரை இழந்த சோகம்..போலி மந்திரவாதி வெறி

Subscribe to Oneindia Tamil

தருமபுரி: தமிழக பெண் உள்பட கேரளாவில் இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டு புதைக்கப்பட்டதாக வெளியான செய்திகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பத்மா என்பவரைதான் நரபலி கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளதால் அந்த கிராமத்தினரும் உறவினர்களும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

தர்மபுரியை சேர்ந்தவர் பத்மா, சில வருடங்களாக கேரள மாநிலம், கொச்சி அருகே உள்ள பொன்னுருன்னி பகுதியில் வசித்து வந்தார். கடவந்திரா என்ற இடத்தில் லாட்டரி விற்று வந்தார். கடந்த மாதம் 26ம் தேதி லாட்டரி விற்பனைக்காக சென்ற இவர் பின்னர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், கொச்சி போலீசார் விசாரித்தனர்.

இதேபோல், கொச்சி காலடி பகுதியை சேர்ந்த ரோஸ்லின்,50 என்ற பெண்ணும் சில மாதங்களுக்கு முன் காணாமல் போனார். 2 பேரின் செல்போன் எண்களை வைத்து நடத்திய விசாரணையில், அவர்கள் கடைசியாக பத்தனம்திட்டா அருகே திருவல்லா என்ற இடத்தில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் இருவரும் கொல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக, கொச்சியை சேர்ந்த முகமது ஷாபி என்பவர் கைது செய்யப்பட்டார்.

தமிழக பெண் நரபலி

தமிழக பெண் நரபலி

நரபலி கொடுக்கப்பட்டவர் நாகவதி அணை அருகேவுள்ள எர்ரப்பட்டி கிராமத்தை சேர்ந்த ரங்கன்,70 என்பவரது மனைவி பத்மா என்பது தெரிய வந்தது, இதனை தொடர்ந்து சம்மந்தபட்ட எர்ரப்பட்டி கிராமத்திற்கு பெரும்பாலை போலீசார், உளவுப்பிரிவு போலீசார், வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தினர். தோட்ட வேலைக்கு சென்ற பத்மா கேரளாவில் நரபலி கொடுக்கப்பட்டார் என்ற தகவல் கேரள மற்றும் தமிழக ஊடங்களில் அடுத்தடுத்து செய்திகள் வெளியானதை தொடர்ந்து கிராமமே பரபரப்புக்குள்ளானது.

 சொந்த ஊர் வருகை

சொந்த ஊர் வருகை

ரங்கன் மற்றும் பத்மா ஆகியோர் கடந்த இருபது வருடகளுக்கு மேலாக கேரளாவில் பணிபுரிந்து வருவதாகவும், தீபாவளி, பொங்கல், வீட்டு விசேஷங்கள், கோவில் திருவிழாக்களுக்கு அவ்வப்போது சொந்த ஊருக்கு வந்து செல்வார்கள் என்றும் வயது மூப்பு காரணமாக ரங்கன் சொந்த கிராமமான எர்ரப்பட்டி கிராமத்திலேயே இருந்து வருவதாகவும், பத்மா மற்றும் அவரது தங்கை பழனியம்மாள் ஆகியோர் கேரளாவில் பணி செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

உறவினர்கள் சோகம்

உறவினர்கள் சோகம்

பத்மாவின் உடலை அடையாளம் காண பத்மாவின் தங்கை பழனியம்மாள், மற்றும் மகன் செல்வராசு, உறவினர்கள் ராமு முனியப்பன் நான்கு பேரை பத்தினம்திட்டா என்ற இடத்தில் அறை ஒன்றில் கேரள போலீசார் அடைத்து வைத்திருப்பதாக தருமபுரியிலுள்ள உறவினர்களுக்கு கேரளாவிலிருந்து செல்போனில் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்து வருவதாக பத்மாவின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

போலி மந்திரவாதி

போலி மந்திரவாதி

நரபலி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கேரளா மாநில காவல்துறையினர், பத்தனம்திட்டா மாவட்டம், திருவல்லா அருகே இலந்தூர் பகுதியை சேர்ந்த தம்பதி பகவல் சிங், லைலா. பகவல் சிங் இலந்தூரில் நாட்டு வைத்தியம் பார்த்து வருகிறார். பேஸ்புக் மூலம் பகவல் சிங்குடன் அதே பகுதியை சேர்ந்த ஷாபிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

 பணக்காரனாக ஆசை

பணக்காரனாக ஆசை

போலி மந்திரவாதியான ஷாபியும், மந்திரவாதத்தில் ஈடுபாடு கொண்ட பகவல் சிங்கும் குறுகிய காலத்திலேயே நெருக்கமானார்கள். பெண்ணை நரபலி கொடுத்தால் செல்வம் சேரும் என்று ஷாபி கூறியுள்ளார். அதற்கு பகவல் சிங்கும், லைலாவும் சம்மதித்தனர். 4 மாதங்களுக்கு முன் காலடி பகுதியில் ஆயுர்வேத மருந்து விற்பனை செய்யும் ரோஸ்லியை,ஷாபி தொடர்பு கொண்டுள்ளார். கணவனை விவாகரத்து செய்த ரோஸ்லி, காலடி பகுதியில் மற்றொருவருடன் வசித்து வந்தார்.

கட்டிலில் கட்டிய மந்திரவாதி

கட்டிலில் கட்டிய மந்திரவாதி

ரோஸ்லியை அணுகிய ஷாபி, தனக்குத் தெரிந்த ஒருவர் ஆபாசப் படம் எடுப்பதாகவும், அதில் நடித்தால் 10 லட்சம் பணம் கிடைக்கும் என்றும் ஆசை காட்டியுள்ளார். அதற்கு ரோஸ்லி சம்மதித்துள்ளார். பின்னர், ரோஸ்லியை பகவல் சிங்கின் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். ஆபாச படத்தில் நடிப்பதற்காக என்று கூறி, ரோஸ்லியை கட்டிலில் படுக்க வைத்து கை, கால்களை கட்டினர்.

கொடூர கொலை

கொடூர கொலை

சுத்தியால் ரோஸ்லி தலையில் அடித்து பகவல் சிங் கொலை செய்தார். இதனையடுத்து பகவல் சிங்கும், லைலாவும் ரோஸ்லி உடலை துண்டு துண்டாக வெட்டி, ரத்தத்தை அறை முழுவதும் தெளித்து விடிய விடிய பூஜை நடத்தினர். உடல் பாகங்கள் மீது உப்பை தூவி வீட்டின் பின்புறம் குழி தோண்டி புதைத்துள்ளனர். புதைத்த இடத்தில் மஞ்சள் செடிகளை நட்டுள்ளனர். ஆனால், நரபலி கொடுத்து பல மாதங்களாகியும் பகவல் சிங்கின் வாழ்க்கையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

 சிக்கிய பத்மா

சிக்கிய பத்மா

ஏதோ சாபம் இருப்பதாகவும் இன்னொரு பெண்ணை நரபலி கொடுத்தால் மாற்றம் தென்படும் என்றும் ஷாபி கூறியுள்ளார். அடுத்த பெண்ணையும் தானே கொண்டு வருவதாக கூறிய ஷாபி, பத்மாவை அணுகி ரோஸ்லியிடம் கூறியது போலவே பண ஆசை காட்டியுள்ளார். பத்மாவை பகவல் சிங்கின் வீட்டுக்கு ஷாபி அழைத்துச் சென்றதும், கொடூரமாக கொன்று துண்டு துண்டாக வெட்டி புதைத்து விட்டனர்.

சிக்கியது எப்படி

சிக்கியது எப்படி

ரோஸ்லி காணாமல் போன விவரம் அவரது மகள் மஞ்சுவுக்கு தெரியவந்தது. சில மாதங்களுக்கு முன் ஊருக்கு வந்த மஞ்சு, காலடி போலீசில் புகார் செய்தார். ஆனால், போலீசாரால் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் தான், பத்மா காணாமல் போனது குறித்து புகார் அளிக்கப்பட்டது. அடுத்தடுத்து 2 பெண்கள் காணாமல் போனதாக புகார் வரவே, போலீசார் விசாரணையில் தீவிரப்படுத்தினர். அதில்தான், நரபலி விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.

அடையாளம் தெரியுமா?

அடையாளம் தெரியுமா?

பகவல் சிங்கின் வீட்டின் பின்புறம் புதைக்கப்பட்ட 2 பேரின் உடல்களை போலீசார் நேற்று தோண்டி எடுத்தனர். உடல்கள் வெட்டப்பட்டதால் குடும்பத்தினரால் அடையாளம் காண முடியவில்லை. எனவே, டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்பட உள்ளது. தோண்டி எடுக்கப்பட்ட உடல் அழுகிய நிலையில் இருப்பதால், உயிரிழந்தது பத்மா தானா என அடையாளம் காணமுடியவில்லை என கேரளாவிலிருந்து தகவல் கிடைத்து வருவதாகவும் தருமபுரியிலுள்ள பத்மாவின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். முழுமையான உறுதியான தகவல்கள் கிடைக்காததால் கிராம மக்கள் குழப்பத்திலும் இருந்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+