இது என்னடா.. பழனி பஞ்சாமிர்தத்துக்கு வந்த சோதனை.. சித்தநாதன், கந்தவிலாஸ் கடைகளில் 2-வது நாளாக ரெய்டு
பஞ்சாமிர்த கடைகளில் 2-வது நாளாக ரெய்டு நடந்து வருகிறது
சென்னை: சித்தநாதன், கந்தவிலாஸ் பஞ்சாமிர்த கடைகளில் 2-வது நாளாக அதிகாரிகள் வரி ஏய்ப்பு சம்பந்தமாக விசாரித்து வருவதால், பழனி மலையடிவாரமே பரபரத்து காணப்படுகிறது.
பழனி கோயில் மலை அடிவாரத்தில் உள்ளதுதான் சித்தநாதன், கந்தவிலாஸ் என்ற பஞ்சாமிர்த கடைகள். பழனி சுற்றுவட்டாரத்திலேயே இந்த கடைகள்தான் பஞ்சாமிர்ததுக்கு ஃபேமஸ்.

என்னதான் கோயிலுக்குள்ளேயே பஞ்சாமிர்தத்தை வாங்கினாலும், இவங்க கிட்ட வாங்கும்போதே தனி மவுசுதான்.. அதற்கேற்றபடி விலையும் இவர்களிடம் அதிகம்தான். விபூதியும் இந்த கடைகளில் கொஞ்சம் ஸ்பெஷல்தான்.
இந்நிலையில், நேற்று காலை திடீரென வருமான வரித்துறையினர் அதிரடியாக இந்த கடைகளுக்கு வந்து சோதனை நடத்தினர். வரி ஏய்ப்பு செய்யப்பட்டதாக புகார் எழுந்ததாக தெரிகிறது. அதனால் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் நாள் முழுவதும் நேற்று ஈடுபட்டனர். சம்பந்தப்பட்ட கடைகளை அடைத்து, அதிகாரிகள் விசாரணையும் நடத்தினர்.
பஞ்சாமிர்தம் தயாரிக்க வாங்கும் பொருட்கள், விற்கப்படும் பஞ்சாமிர்தம் இவற்றுக்கான வரவு செலவு கணக்குகள், அவற்றுக்கான ஜிஎஸ்டி போன்றவை எல்லாம் சரியாகத்தான் கட்டப்பட்டுள்ளதா என்று எல்லா ஆவணங்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இறுதியில் பஞ்சாமிர்த கடைக்கு வருமானவரி புலனாய்வுத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இந்நிலையில் அங்குள்ள பஞ்சாமிர்த கடைகள், விடுதிகள், உரிமையாளரின் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் வருமானவரி புலனாய்வுத்துறை அதிகாரிகள் 2 வது நாளாக சோதனை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது. இதனால் அங்குள்ள கடைகளில் மட்டுமின்றி, பழனி மலையடிவாரமே பரபரப்பில் காணப்படுகிறது.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications