காரில் கடத்தல்.. கட்டிப் போட்டு பாலியல் பலாத்காரம்! கேரள மாணவிக்கு நேர்ந்த கொடூரம்.. போலீசார் அலர்ட்
திண்டுக்கல் : தேனியை சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவியை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் காரில் கடத்தி பாலியல் வன்புணர்வு செய்து திண்டுக்கல் ரயில் நிலையத்தில் விட்டுச் சென்றதாக புகார் எழுந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தேனி டவுன் மற்றும் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கேரளாவை பூர்வீகமாக கொண்ட இளம்பெண் ஒருவர் உத்தமபாளையம் பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். அந்த இளம் பெண் தேனியில் உள்ள தனியாருக்கு சொந்தமான நர்சிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பிஎஸ்சி நர்சிங் படித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று (23.09.2024) காலை உத்தமபாளையதில் இருந்து தேனிக்கு பேருந்தில் வந்துள்ளார். அப்போது அவரை கருப்பு உடை அணிந்த பெண் ஒருவர் பின்தொடர்ந்து வருவதாக தனது தந்தைக்கு தொலைபேசி வாயிலாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் மாணவியின் தொலைபேசி எண் சிறிது நேரத்தில் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், மாணவியின் தந்தை தேனி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யக்கோரி மனு அளித்துள்ளார். இதன் பின்பு தேனி பழைய பேருந்து நிலையம் அருகே வந்த போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மாணவியை காரில் கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறப்படுகிறது.
பின்னர், மாணவியை அதே காரில் திண்டுக்கல் ரயில் நிலையம் அருகே இறக்கி விட்டு மர்ம நபர்கள் தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து பாதிக்கப்பட்ட மாணவி ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்தார். இதனை அடுத்து திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் முருகேஸ்வரி மாணவியை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
இந்த நிலையில், தேனி டவுன் காவல் நிலைய ஆய்வாளர் ராமலட்சுமி தலைமையிலான 4 பேர் கொண்ட குழு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்து பாதிக்கப்பட்ட மாணவியிடம் விசாரணை செய்தனர். அதனைத் தொடர்ந்து திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையம் காவலர்களும் மாணவியிடம் விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் திண்டுக்கல் ஏ.எஸ்.பி சிபின் ஆகியோர் அரசு மருத்துவமனைக்கு சென்று 1 மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்ட மாணவியிடம் விசாரணை செய்தனர்.
இந்த நிலையில் திடீரென பாதிக்கப்பட்ட மாணவிக்கு வலிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. உடனே அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையானது அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சிகிச்சை முடிந்த பின்பு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட மாணவி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், தற்போது திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு எண் 16/24 என்ற அடிப்படையில், இரண்டு பிரிவு கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
BNS 70, BNS-87 உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் துறையினர் மற்றும் தேனி டவுன் காவல்துறையினர் இணைந்து பாதிக்கப்பட்ட மாணவி சென்ற இடங்களில் செல்போன் டவர், சிசிடிவி கேமரா ஆகியவற்றை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட மாணவி இருந்த இடங்களில் உள்ள செல்போன் டவர்களை வைத்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட மாணவி அணிந்திருந்த ஆடைகளை பரிசோதனைக்காக காவல்துறையினர் எடுத்து வந்துள்ளனர். மேலும் தற்போது இரண்டு பிரிவின் கீழ் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தேனி டவுன் காவல் நிலையத்திற்கு மாற்றப்படும் என காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கயத்தாறு சம்பவம்.. ஆணவக்கொலை அல்ல! காவல்துறை அளித்த விளக்கம்! வதந்தி பரப்ப வேண்டாம் என வார்னிங் -
அரசு பேருந்து ஓட்டுநரை பட்டா கத்தியால் வெட்டிவிட்டு எஸ்கேப் ஆன தவெக நிர்வாகி கைது -
திருச்செந்தூர் போலீஸ் ஏட்டுக்கு பெண்ணால் வில்லங்கம்.. வாட்ஸ் அப் சாட்டால் வாழ்க்கைக்கே சிக்கல் -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
“சிறையில் சலுகை கிடையாது” சாத்தான்குளம் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 போலீசாரின் மனு தள்ளுபடி! -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன












Click it and Unblock the Notifications