அய்யய்யோ.. வார்த்தை தப்பா வந்துருச்சு.. பதறிய திண்டுக்கல் சீனிவாசன்.. பல்லைக் கடித்த மாஜி எம்.எல்.ஏ!
திண்டுக்கல்: அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மீண்டும் ஸ்டாலினை முதலமைச்சர் ஆக்குவோம் என வாய்தவறிக் கூறினார். பின்னர் மேடையில் இருந்தவர்கள் பதறிப்போய் சொல்ல, வாய் தவறி வந்துவிட்டது எனக் கூறி தனது பேச்சை சரி செய்தார் திண்டுக்கல் சீனிவாசன்.
கடந்த சில நாட்களாக அத்தியாவசிய பொருட்களின் விலை வெகுவாக அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய் உள்ளிட்ட அத்தியாவசிய காய்கறிகளின் விலை விண்ணைத் தொட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வைக் கண்டித்து அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்தவகையில், தமிழ்நாடு முழுவதும் வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் அதிமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் ஜெயக்குமார் தலைமையிலும், விழுப்புரத்தில் சி.வி.சண்முகம் தலைமையிலும், திண்டுக்கலில் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல்லில் நடைபெற்ற அதிமுக ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும், அதிமுக பொருளாளருமான திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சரும் அதிமுக துணை பொதுச் செயலாளருமான நத்தம் விஸ்வநாதன், முன்னாள் மேயர் மருதராஜ், முன்னாள் எம்.எல்.ஏ, வி.பி.பி.பரமசிவம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ஸ்டாலுனுக்கு அரசியல் ஆண்மை இருக்குமானால் மீண்டும் தேர்தல் நடத்தட்டும். 234 தொகுதிகளிலும் டெபாசிட்டை இழக்க வைத்து ஸ்டாலினை நாங்கள் மீண்டும் முதலமைச்சர் ஆக்குவோம் என வாய்தவறிப் பேசினார்.

திண்டுக்கல் சீனிவாசனின் இந்தப் பேச்சைக் கேட்டு மேடையில் இருந்த நிர்வாகிகள் அதிர்ந்து போயினர். அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளரும், வேடசந்தூர் முன்னாள் எம்.எல்.ஏவுமான வி.பி.பி.பரமசிவம் பல்லைக் கடித்தார். திண்டுக்கல் சீனிவாசனுக்கு அருகில் நின்ற முன்னாள் மேயர் மருதராஜ், திண்டுக்கல் சீனிவாசனை அலெர்ட் செய்தார்.
உடனே சுதாரித்த திண்டுக்கல் சீனிவாசன், "ஐய்யய்யோ.. வார்த்தை தப்பா வந்திருச்சு. ஸ்டாலினை தோற்கடித்து விட்டு எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கிக் காட்டுவோம். வார்த்தை வேகத்தில் தவறுதலாக வந்துவிட்டது" எனத் திருத்திப் பேசினார். திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications