மறுபடியும் ஆரம்பிச்சிட்டீங்களா?’நத்தம்’ ’திண்டுக்கல்’ இடையே களைகட்டிய பஞ்சாயத்து! அதுக்காக இப்படியா?
திண்டுக்கல் : திண்டுக்கல் அதிமுகவில் கடந்த காலகசப்புகளை மறந்து திண்டுக்கல் சீனிவாசனும், நத்தம் விஸ்வநாதனும் எடப்பாடி பழனிச்சாமிக்காக ஒன்றாக சேர்ந்து நிலையில் தற்போது இருவரிடைய கடந்த சில நாட்களாக மோதல் போக்கு மீண்டும் அதிகரித்து வருவதாகவும், அதன் எதிரொலியாகவே திண்டுக்கல் சீனிவாசன் கட்டுப்பாட்டில் உள்ள மாநகரப் பகுதியில் நத்தம் விஸ்வநாதன் பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம் நடத்தியதாகவும், இதனால் இருவருக்கிடையே மீண்டும் உரசல் அதிகரித்துள்ளதாக கூறுகின்றனர் திண்டுக்கல் ரத்தத்தின் ரத்தங்கள்.
அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதற்கு உதாரணம் தற்போது அதிமுகவில் நடந்து வரும் நிகழ்வுகள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கட்சியின் பொருளாளராக இருந்தபோது அவரது கண் அசைவில் கட்சியின் முழு கட்டுப்பாடும் இருந்தது அனைவருக்குமே தெரியும்.
அவர் நினைத்தால் சாதாரண தொண்டன் அடுத்த நாள் அமைச்சராகலாம். அமைச்சர் அடுத்த நாளே சாதாரண தொண்டனாக கூட அதிமுகவில் நீடிக்க முடியாது என்ற நிலை இருந்தது. அந்த அளவுக்கு ராணுவ கட்டுப்பாட்டோடு கட்சியையும் ஆட்சியையும் நடத்தி வந்தார்.

சீனிவாசன் திண்டுக்கல் சீனிவாசன்
அவரது மறைவுக்குப் பிறகு தற்போது அதிமுகவில் நடந்து வரும் அதிகார சண்டைகள் காரணமாக மாநில அளவில் மட்டுமல்ல மாவட்ட அளவிலும் அரசியல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் பல்வேறு நிர்வாகிகள் அடுத்து என்ன நடக்கும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அதிமுகவின் இடைக்கால பொது செயலாளர் பதவியை எடப்பாடி பழனிச்சாமி கைப்பற்றியுள்ள நிலையில் யாருமே எதிர்பாராத விதமாக திண்டுக்கல் சீனிவாசன் பொருளாளர் பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார்.

அசைக்க முடியாத சக்தி
ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராக இருந்த திண்டுக்கல் சீனிவாசன் திண்டுக்கல் மாவட்டத்தில் அசைக்க முடியாத சக்தியாக வலம் வந்தார். எம்பியாக இருந்த அவருக்கு நாடாளுமன்றத்திலும் உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருந்தது. இதனால் உள்ளூர் அரசியலில் கவனம் செலுத்த முடியாத நிலையில் தனது சிஷ்யரான நத்தம் விஸ்வநாதனை அமைச்சராக்கினார். அதன் பிறகு ஓ.பன்னீர்செல்வத்துடன் கைகோர்த்த விஸ்வநாதன் கொஞ்சம் கொஞ்சமாக திண்டுக்கல் சீனிவாசனுக்கு எதிராக உள்ளடி வேலைகள் பார்த்தார்.

அதிமுக பொருளாளர்
ஒரு கட்டத்தில் பொருளாளர் பதவியில் இருந்து திண்டுக்கல் சீனிவாசன் நீக்கப்பட்ட நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தின் அசைக்க முடியாத சக்தியாக உருவானார் நத்தம் விஸ்வநாதன். மாவட்ட செயலாளர் முப்பெரும் துறை அமைச்சர் என கட்சியில் தனது செல்வாக்கை உயர்த்திக் கொண்ட அவர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய ஐவர் அணியிலும் இடம் பெற்றார். இதையடுத்து மாவட்ட அவை தலைவர் என்ற பொறுப்பு திண்டுக்கல் சீனிவாசனுக்கு கொடுக்கப்பட்டாலும் சொந்தக் கட்சியினரே அவரை மதிக்காத நிலை தான் இருந்தது. சில நேரங்களில் மேடைகளில் கூட அவருக்கு இடம் கொடுக்காத நிகழ்வுகளும் நடைபெற்றது. அதன்பின் சசிகலா தயவால் மீண்டும் எம்.எல்.ஏ. அமைச்சர் என அதிகாரத்துக்கு வந்தார்.

எடப்பாடி பழனிசாமி
இப்படி மாறி மாறி அரசியலில் உச்சத்தையும் வீழ்ச்சியும் சந்தித்து வந்த திண்டுக்கல் சீனிவாசன் தனது செல்வாக்கை மிக உறுதியாக வைத்துக் கொண்டுள்ள நிலையில் தனது சிஷ்யரான நத்தம் விஸ்வநாதன் இணைந்து செயல்பட்டு வருகிறார் குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக இருவருமே செயல்பட்டு வருகின்றனர். அணிகள் இணைப்பின் போதும் சரி தற்போதும் சரி ஓரளவு நன்றாகத் தான் சென்று கொண்டிருந்தது அதிமுகவில் இருவருக்கும் இடையேயான உறவு தற்போது வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிய கதையாக இருவருக்குள்ளும் மீண்டும் மோதல் வெடித்து இருக்கிறது. அது நேற்று நடைபெற்ற அதிமுக ஆர்ப்பாட்டத்தில் வெட்ட வெளிச்சமாக தெரிந்தது.

தொண்டர்கள் புலம்பல்
திண்டுக்கல் மாவட்டம் மேற்கு கிழக்கு என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ள கட்சி சார்பாக ஏதாவது ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றால் அதை தனது கட்டுப்பாட்டில் உள்ள நத்தம் அல்லது பழனியில் நடத்துவது தான் நத்தம் விஸ்வநாதனின் வழக்கம். ஆனால் நேற்று திண்டுக்கல் சீனிவாசனின் கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு மாநகர பகுதியான பொன்னாகரம் பகுதியில் நடத்தினார். கிட்டத்தட்ட ஐந்து கிலோ மீட்டர் இடைவெளிக்குள் இருவருமே ஆர்ப்பாட்டம் நடத்தியதால் எங்கு செல்வது என தெரியாமல் நிர்வாகிகள் புலம்பினர். எனவே அவரவர் பகுதியில் உள்ள நிர்வாகிகள் மட்டும் கலந்து கொண்டனர்.

மறுபடியும் மோதல்
இந்நிலையில் இருவரில் யார் அதிகம் கூட்டம் சேர்க்கிறார் என்பதற்கான போட்டியும் இருந்தது. இதற்காக நல்ல கவனிப்புடன் தொண்டர்கள் இரு ஆர்ப்பாட்டங்களிலும் குவிக்கப்பட்டனர். ஆனால் அதில் மாஸ் காட்டியவர் நத்தம் விஸ்வநாதன் தான். ஏனென்றால் பல ஆண்டுகளுக்குப் பிறகு திண்டுக்கல்லில் தனது தலைமையில் போராட்டம் நடைபெறும் என்பதால் தனது பலத்தை நிரூபிக்க தொண்டர் படையை திரட்டி இருந்தார். இவ்வளவு நாள் நல்லா தானே போய்கிட்டு இருந்துச்சு என கூறி வந்த அதிமுக தொண்டர்கள் மறுபடியும் இவர்களுக்குள் மோதலா தற்போது யார் பக்கம் செல்வது என தெரியாமல் குழம்பி வருகின்றனர்.
-
சென்னையில் இடி.. தவெகவில் இணையும் அதிமுக மா.செக்கள்? எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி! -
அதிமுகவில் உடைந்த அடுத்த செங்கல்.. சனிக்கிழமை பனையூரில் மெயின் புள்ளி! இவரா? பரபர புதுக்கோட்டை! -
அதிமுக என்னும் மாபெரும் மதில் இடியும் போதும்.. மௌனம் காக்கும் எடப்பாடி.. ஒரு வார்த்தை பேசலையாமே! -
47ல் இருந்து 42ஆக வீழ்ச்சி! எடப்பாடிக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி கொடுக்கும் அதிமுக எம்எல்ஏ-க்கள்! -
நீ வேணா சண்டைக்கு வா.. எடப்பாடியிடம் விடாமல் ஒரண்டை இழுக்கும் சி.விஜயபாஸ்கர்! ஓ.. இதுதான் ப்ளானா? -
அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் ராஜினாமா.. குதிரை பேரமா? ஐகோர்ட் கேட்ட கேள்வி! தீர்ப்பு ஒத்திவைப்பு -
எடப்பாடி பழனிசாமிக்கு ஷாக்.. விஜயபாஸ்கரை தொடர்ந்து அதிமுகவில் இருந்து விலகிய ஆர்.வி.உதயகுமார் -
அதிமுக 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செல்லுமா? எடப்பாடி பழனிசாமி வழக்கு! சென்னை ஹைகோர்ட்டில் நாளை விசாரணை -
பாமக போட்ட பிச்சை.. அதிமுகவைக் காப்பாற்றிய அன்புமணி! போட்டுத் தாக்கிய சிவி சண்முகம்! உண்மை என்ன? -
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைகிறாரா செல்லூர் ராஜு? பேச்சே கிடையாது.. விரலிலேயே சிக்னல்! -
"மதிக்காத இடத்தில் பயணம் சாத்தியமா" அதிமுகவில் இருந்து விலகுவதை சூசகமாக சொன்ன விஜயபாஸ்கர்? -
கலக்கத்தில் கரூர்.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்? அவரே சொன்ன விளக்கம்! குஷியான அண்ணனின் விழுதுகள்!












Click it and Unblock the Notifications