திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்ன வேணா நடக்கலாம்.. 2 "ஸ்பீச்களை" தயார் செய்த ஸ்டாலின்! மோடி விசிட்டில் மாஸ்டர்பிளான்! ஆஹா சூப்பர்

Google Oneindia Tamil News

திண்டுக்கல்: காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பேசுவதற்காக முதல்வர் ஸ்டாலின் இரண்டு உரைகளை தயார் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

திண்டுக்கல் காந்தி கிராமம், காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழா இன்று நடக்கிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். பிரதமர் மோடியுடன் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்கின்றனர்.

இதற்காக பெங்களூரில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் பிரதமர் மோடி வருகை புரிந்துள்ளார். மதுரை வந்து பின்னர் ஹெலிகாப்டர் மூலம் வந்து பின்னர் காரில் வந்த மோடிக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது.

சட்டப் போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி.. 6 பேர் விடுதலைக்கு முதல்வர் வரவேற்பு! ஆளுநருக்கு ஒரு இடி! சட்டப் போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி.. 6 பேர் விடுதலைக்கு முதல்வர் வரவேற்பு! ஆளுநருக்கு ஒரு இடி!

 முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

இந்த பட்டமளிப்பு நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின்தான் முதலில் பேசுவார். இது பல்கலைக்கழக நிகழ்வு என்பதால் இதில் முதல்வர் ஸ்டாலின் அரசியல் பேச மாட்டார். தமிழ்நாட்டின் உயர்கல்வி எப்படி இருக்கிறது, கல்வியில் தமிழ்நாடு எப்படி முன்னேறி இருக்கிறது என்று பேசுவார். அதேபோல் காந்தி கிராமம், காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழகத்தின் வரலாறு பற்றி பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இந்த மேடையில் அரசியல் பேச முடியாது.

உரை தயார்

உரை தயார்

அதன்படியே முதல்வர் ஸ்டாலினின் உரை தயார் செய்யப்பட்டு உள்ளது. ஆனால் அதே சமயம் இன்னொரு உரையையும் நேற்றே அதிகாரிகள் தயார் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது முதல்வர் பேசுவதற்காக இன்னொரு உரையும் தயார் செய்யப்பட்டு உள்ளது. இதற்கு முக்கிய காரணம் உள்ளது என்கிறார்கள். இன்று ஆளுநர் ரவி, பிரதமர் மோடி அரசியல் பேசினாலும், தானும் அரசியல் பேச வேண்டும் என்பதற்காக இந்த உரை தயார் செய்யப்பட்டுள்ளது.

 2 உரைகள் ஏன்?

2 உரைகள் ஏன்?

என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் இந்த இரண்டாம் உரை தயார் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த பட்டமளிப்பு நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின்தான் முதலில் பேசுவார். அதன்பின் ஆளுநர் ரவி பேசுவார். அதன்பின் மோடி பேசுவார். அப்படி இருக்கும் போது ஸ்டாலினுக்கு எப்படி ஆளுநர் பேச போகும் விஷயம் என்ன என்று தெரியும் என்ற கேள்வி எழலாம். ஆனால் பேச்சுக்கு முன்பாக ஆளுநர் பேச போகும் உரையின் மாதிரி மேடையில் கொடுக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.

மேடையில் என்ன நடக்கும்?

மேடையில் என்ன நடக்கும்?

அதாவது மேடையில் இருக்கும் முதல்வர், பிரதமர் உள்ளிட்டோருக்கு ஆளுநர் உரையின் மாதிரி அளிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. அந்த மாதிரி உரையில் அரசியல் கருத்துக்கள் இருக்கும் பட்சத்தில் முதல்வர் ஸ்டாலினும் தனது இரண்டாவது உரையை பயன்படுத்தி அரசியல் பேசும் வாய்ப்புகள் உள்ளன. இன்றைய உரையில் ஆளுநர் ரவி சனாதனம், இந்துத்துவா போன்ற விஷயங்களை பற்றி ஏதாவது குறிப்பிட இருந்தால் முதல்வர் ஸ்டாலின் திராவிட மாடல் பற்றி பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
CM Stalin prepared two different speechs in the PM Modi visit to Gandhi Gram university.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X