வாழ்ந்தா உன்னோடு மட்டுமே.. ஆசை காட்டி 30 லட்சம் சுருட்டிய நடிகை! 2 குழந்தைகள் வேற இருக்காம்!
திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே இரு குழந்தைகள் இருப்பதை மறைத்து யூடியூப் சேனல் நடத்தி வருபவரை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ரூ.30 லட்சம் , 10 சவரன் நகை மோசடி செய்ததாக துணை நடிகை மீது பாதிக்கப்பட்டவர் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்தவர் பகலவன் ராஜா . இவர் சொந்தமாக யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இந்த சேனலில் கவிதைகள் தொடர்பான ஆடியோ, வீடியோ வெளியிட்டு வந்துள்ளார்.
இதில் நடிப்பதற்காக துணைநடிகர் ஏஜென்ட் கணேஷ் மூலம் திண்டுக்கல்லை அடுத்துள்ள தாடிக்கொம்புவை சேர்ந்த திவ்யபாரதி என்பவர் அறிமுகம் ஆகி உள்ளார்.

துணை நடிகை
திவ்யபாரதி சினிமாவில் துணை நடிகையாகவும் உள்ளூர் தொலைக்காட்சிகளில் விளம்பரம் மற்றும் தொகுப்பாளராக நடித்து வந்துள்ளார். இவரை வைத்து கவிதை தொகுப்பினை வீடியோவாக எடுத்து பகலவன் ராஜா வெளியிட்டுள்ளார். இதனையடுத்து திவ்யபாரதி பகலவன் ராஜா அடிக்கடி செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மேலும் தனது குடும்பத்துடன் கொடைக்கானலில் உள்ள பகலவன் ராஜா வீட்டிற்கு சென்று தங்கி குடும்ப ரீதியாக நட்பாக பழகியுள்ளனர்.

இரண்டு பெண் குழந்தைகள்
திவ்ய பாரதி இரண்டு பெண் குழந்தைகளை அழைத்துச் சென்றுள்ளார். தனது அக்காவின் குழந்தைகள் என்றும் அக்கா கணவர் ஓடி விட்டதால் தான் வளர்ப்பதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இதனையறிந்த பகலவன் ராஜாவின் தாயார் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க சம்மதிக்கவே திவ்யபாரதிக்கும் பகலவன் ராஜாவிற்கும் திருமணம் செய்வது என முடிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து திவ்யபாரதி திருமணம் செய்யாமல் காலம் கடத்தி வந்துள்ளார்.

பணம், நகை
தனியாக வீடு எடுத்து தங்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இதனை அடுத்து திண்டுக்கல்லில் ஒரு வீடை வாடகைக்கு எடுத்து திவ்யபாரதி தங்கியுள்ளார். வீட்டுச் செலவுக்கு என மாதம் மாதம் ₹ 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை கொடுத்து வந்துள்ளார். மேலும் திவ்யபாரதி உடல்நிலை சரியில்லை மருத்துவ செலவிற்காக பணம் வேண்டும் என ஒன்பது லட்சம் கேட்டு வாங்கியுள்ளார். பகலவன் ராஜாவிடம் ஆசை வார்த்தை கூறி 10 பவுன் தங்க நகைகள் வாங்கியுள்ளார்.

பலே மோசடி
இதனைத் தொடர்ந்து பகலவன் ராஜா திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கூறும் பொழுதெல்லாம் அவருடன் சண்டையிட்டு காலம் தாழ்த்தி வந்துள்ளார் . இதனால் சந்தேகம் அடைந்த பகலவன் ராஜா திவ்யபாரதியை பற்றி விசாரித்துள்ளார். அப்பொழுது தான் திவ்யபாரதி நடத்தை சரியில்லை என்றும், அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருப்பதும் ,அவருக்கு பிறந்தது தான் அந்த இரண்டு பெண் குழந்தைகள் என தெரிய வந்தது. தன்னை ஏமாற்றி ரூ.30 லட்சம் மோசடி செய்ததாக பாதிக்கப்பட்ட பகலவன் ராஜா தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் திவ்யபாரதி மீது புகார் அளித்தார்.

போலீசார் விசாரணை
இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரனிடமும் பகலவன் ராஜா புகார் அளித்தார். தற்போது வேறு மூன்று ஆண்களுடன் சேர்ந்து உல்லாசமாக சுற்றித் திரிவதாகவும் பணமுள்ள ஆண்களை குறி வைத்து தனது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதாகவும் புகார் மனுவில் தெரிவித்துள்ளார் பகலவன் ராஜா. தற்பொழுது இது தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications